Thursday, June 6, 2019

மேற்கு தொடர்ச்சி மலை - மேற்கு தொடர்ச்சி மலை மரபு, பாரம்பரிய அந்துஸ்துக்கு சிக்கலா?

மேற்கு தொடர்ச்சி மலை - மேற்கு தொடர்ச்சி மலை மரபு, பாரம்பரிய அந்துஸ்துக்கு சிக்கலா?
----------------------------------
கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை 6 மாநிலங்கள் 1200 கிலோமீட்டர் தூரம் 1,74,700 சதுர கி.மீ பரப்புக்கு பரந்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்றை வழங்குகிறது. ஐ.நா. மன்றம் மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக 2012இல் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொண்டது. இதற்காகவே மத்திய அரசு காட்கில் - கஸ்தூரிரங்கன் குழுவை அமைத்தது. இந்த மலையில் 37 சதவீதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு இதன் வடிவமைப்பை மாற்ற தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்த தாமதப்படுத்தப்பட்டது.
இதையெல்லாம் நடைமுறைப்படுத்த சம்மந்தப்பட்ட 6 மாநிலங்களில் அறிக்கை கேட்டும் குறிப்பாக தமிழகத்திலுள்ள 6,914 சதுர கி.மீ பரப்புக்கான இந்த பகுதியை குறித்து எந்த கருத்தும் கூறாமல் 4 ஆண்டுகளாக கடத்தி வருகிறது. இதை குறித்து பலமுறை இந்த தளத்தில் பதிவு செய்துள்ளேன். மரங்களை வெட்டி கடத்தல், குவாரிகள் நடத்துதல், குறிப்பாக சமீபத்தில் தேனி மாவட்டம் மேகமலையில் மரங்களை வெட்டியதெல்லாம் பிரச்சனைகளாக திகழ்ந்தன. இயற்கையின் அருட்கொடையான மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க நமக்கு அக்கறையும், ஆர்வமும் இல்லாமல் இருப்பது வேதனையான விடயம். இப்படி ஒரு சூழ்நிலை தொடர்ந்தால் ஐ.நா. அங்கீகரித்த பாரம்பரிய சின்னத்தை திரும்ப பெற்றுவிடும். இதெல்லாம் கேவலமான நிலைப்பாடுகளாகும்.

இதற்கெல்லாம் யார் பொறுப்பு. மேற்கு தொடர்ச்சி மலையில் மரங்களை வெட்டினோம், குடிநீருக்கு கஷ்டப்படுகிறோம். இதெல்லாம் நாம் செய்த கேடுகள். மேற்கு தொடர்ச்சி மலை நமக்கெல்லாம் நீராதராம் வழங்குகின்ற கொடைகளாகும். 126 ஆறுகள் இங்கிருந்து உற்பத்தியாகின்றன. இந்த ஆறுகளில் 50க்கும் மேற்பட்ட அணைக்கட்டுகள் நீராதராத்தை வழங்குகின்றன. 29 பெரிய நீரருவிகள் உள்ளன. கோடை மலைவாசல் ஸ்தலங்களும் இங்குதான் உள்ளன. 11 புலிகள் சரணாலயம், பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள் என இயற்கை சார்ந்த அமைப்பு ரீதியான கேந்திரங்களையும் நாம் அழித்து வருகிறோம். இது சரிதானா என்ற விடயத்தை மனம் திறந்து நாமே நமக்கு கேட்டுக் கொள்கிறோம். மேற்கு தொடரச்சி மலையின் கடந்த கால பதிவுகள்.


#மேற்கு_தொடர்ச்சி_மலை #Western_Ghats #KSRadhakrishnanpostings #KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


06-06-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...