Monday, June 24, 2019

#ப்ரியன் பதிவு

மூத்த பத்திரிக்கையாளரும் நெருங்கிய நண்பருமான கல்கி ப்ரியன் #வைகோவின் #ஈழப்பிரச்சனை ஈடுபாட்டையும் அவர் சந்தித்த வழக்கப் பற்றியும் தன்னுடைய சமூக வலைதளத்தில் நேற்று பதிவு செய்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கடந்த21-102008 ல் நடந்த ஈழ ஆதரவாளர் கூட்டத்தில் வைகோ பேசிய பேச்சு தேசவிரோதமானது என்று கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கு (SC No 1/20010)உயர்நீதி மனற வளாகத்தில்யுள்ள மூன்றாவது அடிசனல் சிட்டி கோர்ட்டில் இறுதி விசாரணைக்கு வந்தது.இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவன் என்ற முறையில் சாட்சி சொல்ல எனக்கும் சம்மன் அனுப்பியிருந்தார்கள். கடந்த 9-6-2016 அன்று ஒரு நாள் முழுவதும் என்னுடைய சாட்சியம் நீதிமன்றத்தில் செய்யப்பட்டது.
அது குறித்து நண்பர் ப்ரியன் தன்னுடைய வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். நானும் இது குறித்த பதிவை சற்று விரிவாக எனனுடைய வலைதளத்தில் பின்னர் பதிவு செய்கிறேன்.
அது போலவே 30 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1989 ஆம் ஆண்டு வைகோ இலங்கைக்கு ரகசிய பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமையை அறியச் சென்றதை எதிர்த்து வழக்கறிஞர் கோபாலன் 
quo warranto வழக்கைத்
(WPNo3269/1989) தொடுத்தார். அப்போது வைகோ மாநிலங்கள் அவை உறுப்பினர்.அதையும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பி.எஸ்.மிஸ்ரா அமர்வில் (4th Court)இறுதி விசாரணைக்கு வந்தபோது நான் ஆஜராகி வாதாடி வெற்றிகரமாக, வைகோவிற்கு சாதகமான, தீர்ப்பு வழங்கியது என்பது கடந்த கால செய்திகள்.

-------------
ஈழமும் - துரோகமும்?
-------------------------------
2009ல் சென்னை ராணி சீதை அரங்கில் "நான் குற்றம் சாட்டுகிறேன்" என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார் வைகோ. 
அந்தக் கூட்டத்தில் " விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராக" பேசியதாகவும் வைகோ மீது "தேச துரோக " வழக்கு தொடரப்பட்டது.
இத்தனை வருடங்களாக நடந்து வந்த வழக்கில் தான் வரும் ஜூலை 5ம் தேதி தீர்ப்பு வர இருப்பதாக சமீபத்தில் செய்தி படித்தேன்.
அந்த செய்தியை படித்தவுடன் வைகோ தொடர்பான மற்றொரு தேச துரோக வழக்கும் அதில் அவர் விடுதலை ஆனதும் நினைவுக்கு வந்தது.

2016ம் வருடம். சட்டன்றத்தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த காலகட்டம். அதற்கு வைகோ முயற்சியில் கட்டமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணியும் ஒரு காரணம்.
எப்போதும் போல நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசிக்கொண்டருந்தேன்.ஒரு புத்தகம் அவரிடம் வாங்க வேண்டியிருந்தது.
"என்ன சார்..பார்க்க முடியுமா?" என்று கேட்டேன்.
"இல்லை சார்.... வைகோ தொடர்பான தேச துரோக வழக்கில் சாட்சி சொல்ல நீதிமன்றம் போகிறேன்.நாளை பார்ப்போம்" என்றார் அவர் .
"என்ன வழக்கு சார்"
+++++++

2008ம் வருடம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "ஈழத்தில் நடப்பது என்ன?" என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசினார். அப்போது மதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக இருந்த கேஎஸ்ஆர் தான் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்.
அந்த கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய, இலங்கை அரசுகளை கடுமையாக கண்டித்தும் முழங்கினார் வைகோ.
அந்த பேச்சுக்காக வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் மதிமுக பொருளாளருமாக இருந்த கண்ணப்பன் இரண்டாவது குற்றவாளி. இவர் பின்னர் திமுகவில் இணைந்தார்.
+++++++
விவரத்தை கேட்டவுடன் கேஎஸ்ஆரிடம் " "இப்போது நீங்கள் திமுகவில் இருக்கிறீர்களே.." என்றேன்.
"ஆமாம் சார்...தலைவர் (கலைஞர்) கிட்ட விஷயத்தை சொன்னேன்.
"அவர் என்ன சொன்னார்?"
"சில விநாடிகள் யோசித்தார். அதன்பின் "உன் விருப்பம்"என்று சொல்லிவிட்டார்"
"அப்ப நீங்க சாட்சி சொல்ல கிளம்பிட்டீங்களா?"என்றேன்
"ஆமாம் சார். ..எனக்கும் வைகோவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஈழ விவகாரத்தில் அவர் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடும். விட்டுக்கொடுக்க முடியுமா? " என்றார் கேஎஸ்ஆர்.
++++++++
"ராஜபக்ச ஆட்சியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பற்றியும் இந்திய அரசு அங்குள்ள நிலைமைகளை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டை மாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் பேசினாரே தவிர இந்திய இறையாண்மை க்கு எதிராக வைகோ எதுவும் பேசவில்லை" என்று அழுத்ததமாக தனது சாட்சியத்தை பதிவு செய்தார் கேஎஸ்ஆர்.
வழக்கிலிருந்து வைகோ விடுதலை ஆனதற்கு அவரது சாட்சியமும் ஒரு முக்கிய காரணம்
வைகோவுக்காக பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியிருக்கிறார் கேஎஸ்ஆர். 1989ல் வைகோ ரகசியமாக இலங்கை சென்று வந்தவுடன், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபாலன் என்பவர்..
வழக்கு தள்ளுபடியானது. வழக்கை நடத்தியவர் கேஎஸ்ஆர்.
+++++++++
இப்போதும் ஒரு தேச துரோக வழக்கில் தான் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார் வைகோ..இந்த வழக்கிலும் அவர் விடுதலையாவார் என்பதில் சந்தேகமில்லை. ஈழ தமிழர்களுக்காகவும் தமிழக நலன்களுக்காகவும் அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.முன்பு எப்போதையுயும் விட இப்போது அதற்கான தேவை மிக அதிகமாகவே இருக்கிறது.
++++++++
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-06-2019

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...