Tuesday, June 25, 2019

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.


கடந்த இரு நாட்களாக மூன்று விவசாய சங்க பிரதிநிதிகள் என்னை நீர் நிலைகள் வழக்கு குறித்து சந்தித்தனர். பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்கள். பிரச்சனை என்பது அனைத்து சங்கத்திற்கும் பொதுவானதாகவே உள்ளது. கோரிக்கைகளும் பொதுவானதாக உள்ளது. ஆனால் பல குழுக்களாக பிரிந்துக் கிடக்கின்றார்கள். 1970 முதல் 1984 வரை விவசாய சங்க தலைவர் நாராயணசாமி அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டவன், என்னுடைய கிராமத்தில் விவசாய போராட்டத்தில் அரசாங்கம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 உயிர்பலிகளை கண்முன் கண்டவன் என்கிற முறையில் இவர்கள் பிரிந்து கிடப்பது மிகுந்த வேதனை அளித்தது. 
ஈழப் போராளிகள் பல குழுக்களாக பிரிந்து பேரழிவை சந்தித்த வரலாறை கண்முன் கண்டபோதும் இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. வேற்றுமையில் ஒற்றுமைக் கண்டு இணைவது அவசியம் என உணர வேண்டாமா? நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் பிரித்தாளும் அரசாங்கம் பிரிவுகளை பயன்படுத்திக் கொள்ளாத ? நமக்குள் ஒற்றைமை இல்லாமல் உரிமையை எப்படி பெற போகின்றோம்? 

//பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல் குறும்பு மில்லது நாடு // என்கின்றது வள்ளுவம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
24-06-2019.

No photo description available.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...