Friday, January 31, 2020

*நாளை மத்திய பட்ஜெட் * *நான்மணிக்கடிகை*



————————————
கோல்நோக்கி வாழுங் குடியெல்லாந் தாய்முலைப்
பால்நோக்கி வாழுங் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று.
- நான்மணிக்கடிகை

குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன்.

Times, Economist, News Week

இந்தியாவில் 

 என்ற பன்நாட்டு வார இதழ்கள் கிடைத்தன. இப்போது News Week நிறுத்தப்பட்டு விட்டது. ஏனென்று தெரியவில்லை. Timesஐ விட News Weekம் Economistம் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும். இந்த வார News Weekல் சென்னை பெசன்ட் நகரைச் சார்ந்த Padma Lakshmi  பத்மலட்சுமியுடைய அட்டைப் படம்.

#ksrpost
31-1-2020.

தஞ்சை_ஸ்வாமிநாத_ஆத்ரேய: #மணிக்கொடி_மரபினர்.

நா. விச்வநாதன்-பதிவு

#தஞ்சை_ஸ்வாமிநாத_ஆத்ரேய:
                    #மணிக்கொடி_மரபினர்.

ஆத்ரேயர் என்ற'மணிக்கொடி' எழுத்தாளர் வெகுவாக அறியப்படாமல் போனதற்குக்காரணம்அவரேதான்.
வீடுதாண்டி வெளியேவராத ரிஷி என்று கிண்டல் செய்வோம்.தானுண்டு,தன் எழுத்துண்டு,தன்சங்கீதமுண்டு என்று சுருக்கிக் கொண்டவர்.தன்மீது புகழ் வெளிச்சம் படாதவாறு
கவனமாகப் பார்த்துக் கொண்டார்.சொற்
பமான சொற்கள், குறைந்த உரையாடல்.
ஞானம் அடக்கத்தைக் கொடுக்கும் என்
பதை ஆத்ரேயரிடமிருந்து அறியலாம்.எங்
களிடம் ஓர் இசைவு இருந்தது.கொஞ்சம்
நாங்கள் இடக்குமடக்கான ஆட்கள் என்று
தெரிந்தும் எங்களது தினசரி வருகை அவருக்கு இஷ்டமானது.

சிவந்த உடம்பு,நெற்றிக் கோபிசந்தனம்,
குடுமி,பஞ்சகச்சம்,ஒருவார வெள்ளைத் தாடி, களையான முகம்.ஆசாரத்தோற்றம்
புரட்சிகர மனசு.சதா ராம் ராம் என்ற உச்ச
ரிப்பு.ந.பிச்சமூர்த்தி,தி.ஜானகிராமன்,
மௌனி,எம்.வி.வி,கரிச்சான் குஞ்சு என
ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இவரது நெருங்
கிய சிநேகிதங்கள்.தி.ஜானகிராமனோடு
முரண்படுவார்.கரிச்சான் குஞ்சு வின் அட்
டகாசமான அடாவடி நக்கல் பேச்சுகளுக்
கு ஆத்ரேயரால் ஈடுகொடுக்க முடியாது.

வ.ரா,தி.ச.சொக்கலிங்கம்,ஸ்டாலின் சீனி
வாசன் என இந்த ஆளுமைகளைவிவரி
ப்பார்.மணிக்கொடிக்காலம் பற்றிய செய்
திகள் அத்துப்படி. மாணிக்கவீணை,
தியாகராஜ அனுபவங்கள் முக்கியமான 
நூல்கள்.பிரதிகள் இப்போது கிடைக்க
வில்லை.கச்சிதமான விவரிப்பு,நேர்த்தி
யான வடிவம்.அழகிய நடை.  உலகமே
நேர்மையானதுதான் என்ற அறிவிப்பு.
ஜானகிராமனின் அம்மாவந்தாளைக்கடு
மையாகச் சாடினார்.எம்விவியின் வேள்
வித் தீ யில் சில இடங்களை ரசிக்கவில்
லை.அழுக்கைச் சுரண்டிக் கொண்டிருப்
பானேன் என்பது அவரது வாதம்.கு.ப.ரா
விடமிருந்தும் மாறுபடுவார்.மனித வாழ்வு
குறைநிறைகளோடுதான் என்றால்"சக்க
னிராஜ. மார்க்கமு லுண்டக..என்ற தியாக
ராஜரின் கிருதியை பதிலாக முணு
முணுப்பார்.'அழகான வீதிகள் இருக்கும்
போது இருட்டுச் சந்துக்குள் நுழைவானே
ன்..'

தியாகராஜ ஸ்வாமிகளை புதிய கோணத்
தில் பார்த்தார்.சத்குருவின் கீர்த்தனைக
ளில் கவித்துவமே இல்லையே என்றதற்
குப்பக்திதான் அவருக்குப் பிரதானம் என்
பார்.சத்குருவின் கீர்த்தனைகளை யாரும்
பாவசுத்தியோடும் அட்சரசுத்தியோடும்
பாடவில்லை என்றகுறை அவருக்குண்டு.
"தியாகராஜ அனுபவங்களில்"ஒவ்வொரு
கிருதிகளுக்குப்பின்னாலும் நிஜமான சம்பவங்கள் உள்ளன.உமையாள்புரம்
சாமிநாதபாகவதர்,யக்ஞசாமி சாஸ்த்ரி
எம்பார்விஜயராகவாச்சாரியார் உரையாட
ல்களிலிருந்து பெற்றவை என்று சொன்
னார்.
சத்குருவிற்கு அருணாச்சலக்கவியின்
இராமநாடகக் கீர்த்தனைகளில் அளவற்
ற ஈடுபாடு.இரவுமுழுதும் நாடகத்தைப்
பார்த்தாராம்.மேடைக்கு அழைக்கப்பட்ட
போது ராமனாக நடித்த பொற்கொல்ல
ரைக் கட்டியணைத்துக்கொண்டாராம்.
தன்னுடைய மேல் துண்டால் அவரது
வேர்வையைத் துடைத்துவிட்டாராம்.
"யதா. வுனா...நேர்ச்சிடவே.."என்ற யது
குலக்காம்போதி கீர்த்தனைதோன்றியது.
மராத்திய ராஜா  சகஜி சத்குருவைத் தன்
ஆஸ்தான வித்வானாக அழைத்தபோது
"நிதி சால சொகமா"என்ற கல்யாணியை
பாடியதாகச் சொல்வதை ஆத்ரேயர் மறு
த்தார்.இது கட்டுக்கதை என்றார்.இதுபோ
லவே "மனசுலோனி..இந்தோளத்திற்குப்
பின்னுள்ள அனுபவங்களை விவரிப்பார்.
தன்னுடைய "பாலுகா...காண்ட..சகேரா.'
கீர்த்தனையை நாட்டியமணிகள் மிகமிக
மோசமாகப் பாடி ஆடியதைக்கண்டு வரு
த்தமுற்று "மனசுலோனி மர்மமூ தெலு
கோ மான... ரக்ஷக.. மரகதாங்க..நா.."என்
மனதில் உள்ள மர்மங்கள் அனைத்தை
யும் தெரிந்துகொண்டு என்னைக் காப்பா
ற்று. பக்தர்களையும் காப்பாற்று ராமா..!
கைதூக்கி விடு..ராமா.என்றுபாடினாராம்.
ஷட்காலகோவிந்தமாரார் என்ற கேரள
இசை வல்லுநர் சந்திப்பின்போது மாரார்
உச்சஸ்தாயி பரவசப்படுத்த 'எந்தரோ மஹானு பாவுலு..."ஸ்ரீராகம்  பாடினார்.
கோபாலகிருஷ்ணபாரதி தன்னைக்கா
ண வந்தபோது ஆபோகி பாடேன் என்ற
தற்காகப்   "சபாபதிக்கு. வேறு..தெய்வம்
..சமான..' கோபாலகிருஷ்ணபாரதி பாடிக்
காண்பித்தார்.

ஸ்வாமி நாத ஆத்ரேயருக்கு அவரது தனி
மையே படுக்கையில் தள்ளியது.மரண
மில்லாத வாழ்வு தாங்கமுடியாத துன்பம்
தான் தனிமைவிரும்பிகளுக்கு.ஆத்ரேய
ருக்கும் இது நேர்ந்தது.
'''''''


Plate #The_Republic

#Plate  #The_Republic

"Beauty of style and harmony and grace and good rhythm depend on simplicity — I mean the true simplicity of a rightly and nobly ordered mind and character, not that other simplicity which is only a euphemism for folly."
--from Book III, #The_Republic


இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை*

*இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை*
————————————
பதவி இறக்க விசாரணையில் மாட்டிக்கொண்டிருக்கும் ட்ரம்ப்பும் ஊழல், லஞ்சம், நம்பிக்கைத் துரோகம் ஆகிய குற்றங்களில் விசாரிக்கப்படவிருக்கும் நேத்தன்யாஹுவும் பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாத, தீர்க்க முடியாத இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட்டார்களாம்.  ஒரு நூற்றாண்டாகப் பல தலைவர்கள் தீர்த்துவைக்காத இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையைத் தான் தீர்த்துவிட்டதாக ட்ரம்ப் எப்போதும் போல் கூறிக்கொண்டிருக்கிறார். இந்தப் பிரச்சினை தொடங்கிய காலத்திலிருந்தே அமெரிக்கா யூதர்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டிருக்கிறது.  எல்லாம் அமெரிக்காவில் குடியேறியிருக்கும், வசதிபடைத்த யூதர்கள் அமெரிக்க அரசை ஆட்டிவைப்பதால்தான்.

தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று ஹெர்ஸல் கொடுத்த யோசனையை முழுதாக ஏற்றுக்கொண்டு ஐரோப்பா முழுவதிலுமிருந்த யூதர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் நுழையத் தொடங்கினர்.  அப்போது முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட லீக் ஆஃப் நேஷன்ஸ் எடுத்த முடிவின்படி பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.  அப்போது பாலஸ்தீனம் முழுவதிலும் அரேபியர்களும், கி.பி. 132-இல் ரோமானியர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தோற்றுப்போய் ரோமானியர்களால் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனத்தைவிட்டே வெளியேறிய பிறகு பாலஸ்தீனத்திலேயே தங்கிவிட்ட சில யூதர்களும் வசித்துவந்தனர்.  அவர்களின் சம்மதம் இல்லாமலேயே யூதர்கள் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் குடியேறினர்.  தங்களோடு கொண்டுவந்த செல்வத்தினால் பாலஸ்தீனர்களிடமிருந்து அவர்கள் நிலங்களை வஞ்சகமாக வாங்கிப் போட்டனர். பாலைவனத்தை சோலைவனமாக்குகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்தனர். இதனால் யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன.  அதற்குமேல் பாலஸ்தீனத்தை நிர்வகிக்கத் தன்னால் முடியாது என்று கூறி பாலஸ்தீனத்தை பிரிட்டன் ஐ.நா.விடம் ஒப்படைத்தது.  

யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு நாட்டை உருவாக்குவதாக 1917-இல் பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு வாக்குக் கொடுத்தது முதல் தவறு.  யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது அதை நிறுத்தாதது பிரிட்டனின் அடுத்த தவறு.  பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டபோது அதைத் தவிர்க்க பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் பாலஸ்தீன அரேபியர்களுக்கும் இடையே பிரிக்க முடிவுசெய்தது அடுத்த தவறு.  அப்போது பாலஸ்தீனத்தின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே யூதர்கள்.  அவர்களிடம் 7% மட்டுமே நிலம் இருந்தது.  இருப்பினும் பாலஸ்தீனத்தில் பாதிக்குமேல் யூதர்களுக்கும் மீதியை அரேபியர்களுக்கும் கொடுக்க பிரிட்டனிடமிருந்து பாலஸ்தீனத்தை எடுத்துக்கொண்ட ஐ.நா. முடிவுசெய்தது.  இது அடுத்த தவறு. தங்களுடைய நிலம் பிரிக்கப்பட்டு பாதிக்குமேல் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதை எதிர்த்து அரேபியர்கள் ஐ.நா.வின் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்காததோடு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை.  ஐ.நா.வின் முடிவை உடனடியாக ஏற்றுக்கொண்டு (அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலேயே அவர்களுக்கு நிலம் கிடைத்தால் அதை வேண்டாம் என்றா சொல்வார்கள் இந்த யூதர்கள்?) யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக்கொண்டனர்.  தங்களுடைய பாலஸ்தீனத்தைப் பிரித்து யூதர்களுக்குக் கொடுக்க ஐ.நா. செய்த முடிவு தவறென்றும் அந்த முடிவை தாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் முழுப் பாலஸ்தீனத்தையும் பெறுவதற்காகப் போராடப் போவதாகவும் அரேபியர்கள் அன்று செய்த முடிவு இன்று அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லாத நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டிருக்கிறது.  

தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து அங்கு காலம் காலமாக வாழ்ந்துவந்த அரேபியர்களை வன்முறைகளாலும் வஞ்சகமாகவும் வெளியே அனுப்பியதோடு அதன் பிறகு யூதர்களுக்கும் – அதாவது இஸ்ரேலுக்கும் – அரேபியர்களுக்கும் நடந்த ஆறு யுத்தங்களிலும் இஸ்ரேலே வெற்றிபெற்றதோடு ஐ.நா.வால் அரேபியர்களுக்குக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் முக்கால் பகுதியை அபகரித்துக்கொண்டது.  அரேபியர்களுக்குரிய நிலங்களில் யூதர்கள் தங்கள் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டனர்.  அமெரிக்கா தன் பக்கம் இருக்கும் ஒரே தைரியத்திலும் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா அளிக்கும் பண உதவியாலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அரேபியர்களின் நிலங்களை எடுத்துக்கொண்டதோடு அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தி வருகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்கா பாலஸ்தீனத்தில் அரேபியர்களுக்குத் தனி நாடு அமைக்கப்படும் என்று சொல்லிவந்தாலும் இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை.  இஸ்ரேல் பாலஸ்தீனர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டே போகிறது; இப்போது பாலஸ்தீனத்தின் 2 சதவிகித நிலம்தான் பாலஸ்தீனர்களின் ஆளுகையில் இருக்கிறது.   ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் பெரும்பகுதியை 1967 சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் எடுத்துக்கொண்டு அங்கு இஸ்ரேலியக் குடிமக்களான யூதர்களுக்காக குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டே போகிறது.  இதைத் தடுக்க எந்த அமெரிக்க ஜனாதிபதியும் எதுவும் செய்யவில்லை; தடுக்க நினைத்த ஒபாமாவாலும் எதுவும் செய்ய முடியவில்லை.  

இப்போது எந்த நியாயத்திற்கும் கட்டுப்படாத ட்ரம்ப் ஒரு புதிய திட்டத்தைக் கண்டுபிடித்திருக்கிறாராம்.  வெஸ்ட் பேங்கில் கட்டப்பட்டிருக்கும் யூதக்குடியிருப்புகள் எல்லாம் இஸ்ரேலுக்குச் சொந்தமாம்; இஸ்ரேல் இப்படி எடுத்தது போக தொடர்ச்சி இல்லாமல் இருக்கும் வெஸ்ட் பேங்க் இடங்கள் பாலஸ்தீன நாடாக அறிவிக்கப்படுமாம்.  அதிலும் அந்த நாட்டிற்கு ராணுவம் வைத்துக்கொள்ளும் உரிமை கிடையாது.  இதுவரை எந்த அமெரிக்க ஜனாதிபதியும் கண்டுபிடிக்காத இந்தத் தீர்வை கண்டுபிடித்துவிட்டாராம் இந்த ட்ரம்ப்!  முன்று வருடங்களாக ட்ரம்ப்பும் அவருடைய மருமகன் குஷ்னரும் இந்த ‘நல்ல’ தீர்ப்பைக் கண்டுபிடித்துவிட்டார்களாம்!  எவ்வளவு திமிர் இவர்களுக்கு?  குஷ்னர் இன்னொரு யோசனையையும் கூறியிருக்கிறார்.  50 மில்லியன் டாலரை பாலஸ்தீனர்களுக்குரிய பகுதியில் முதலீடு செய்து அவர்களுக்கு உதவப் போகிறார்களாம்.  இன்று தங்களுக்கு மட்டுமே சொந்தமான பாலஸ்தீனம் முழுவதையும் இழந்துவிட்டு நிற்கும் பாலஸ்தீனர்களை பணத்தைக் கொண்டு விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார் இந்த குஷ்னர்.  இந்த முதலீடு எல்லாம் இவருடைய கம்பெனிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் முதலீடாகத்தான் இருக்கும் என்பது இன்னொரு விஷயம்.

ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்க நடந்துகொண்டிருக்கும் விசாரணையிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதுதான் இந்தத் திட்டத்தை ட்ரம்ப்ப் இப்போது அறிவித்ததற்கு ஒரு முக்கிய காராணம்.  ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டிக்கொண்டிருக்கும் நேத்தன்யாஹு இஸ்ரேல் மக்களிடம் தான் பாலஸ்தீனம் முழுவதையும் இஸ்ரேலிய யூதர்களுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டதாகக் கூறினால் வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் – 2019 மார்ச்சிலும் 2019 செப்டம்பரிலும் நடந்த இரண்டு தேர்தல்களிலும் எந்தக் கட்சிக்குக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஒரு ஆண்டில் மூன்றாவது முறையாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது – தேர்தலில் தான் வெற்றிபெற்றுப் பிரதமராகி நாட்டை ஆளும் பொறுப்பிலிருக்கும் பிரதம மந்திரியின்மீது குற்றம் சுமத்த முடியாது என்று சட்டம் கொண்டுவந்து தான் தப்பித்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியிருக்கும் நேத்தன்யாஹுவுக்கு உதவுவது இந்த முடிவுயே இப்போது ட்ரம்ப் அறிவித்தியுள்ளார்.

Thursday, January 30, 2020

#ஆந்திர #மேலவை_ஒழிக்கப்படுகிறது.

#ஆந்திர #மேலவை_ஒழிக்கப்படுகிறது.நாடாளுமன்ற   ஜனநாயகத்தில் இருஅவைகள் (bicameral ) என்பது அடிப்படை.  இந்தியாவில்   பல மாநிலங்களில் தமிழ்நாடு  உள்பட எம்.ஜி.ஆர் ஆட்சியில் மேலவை ஒழிக்கப்பட்டது. இவையெல்லாம் நாடாளமன்ற ஜனநாயகத்திற்கு சவால் மட்டுமல்லாமல்  அதை குழி  தோன்டிப் புதைக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தின் மேலவை  எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் நடிகை நிர்மலா மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) ஆக முடியவில்லை என்ற காரணத்திற்காகவே பல மேன் மக்கள் அமர்ந்த தமிழக மேலவையை  ஒழித்துக் கட்டினார். மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எல்லாம்  ஏற்றுக்  கொண்டு நாடாளுமன்றத்தின் இருஅவைகளில் தீர்மானம் மூலமாக ஏற்றுக் கொள்கிறது என்றால்  மாநிலங்களவையும் ஒழிக்கப்பட  வேண்டிய  நிலைதானே. மாநிலங்களவைக்கு என்று ஒரு மாண்பு உண்டு. கற்றறிந்தவர்களின்கருத்துகளை சொல்லி நாட்டிற்கு சரியாக வழிகாட்டும் கருத்துகளை சொல்ல வேண்டிய அவை தான் மேலவை. தேர்தல் களத்தினை சில அறிஞர் பெருமக்கள் சந்திக்க இயலாது. அவர்களெல்லாம் மேலவைக்கு வந்தால் அவர்களுடைய   கருத்துகளால் ஜனநாயகம்    தழைத்தோங்கும். மாநிலங்களவையை வைத்துக் கொண்டு மாநிலங்களின் மேலவையை தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு  ஒழிப்பது என்பது ஏற்புடையதல்ல. 

தமிழகத்தில்  மேலவை   திரும்பவும் அமைய வேண்டுமென்று    சென்னை உயர்நீதிமன்றத்தில்.  (WPNo.4399
2000))வழக்கும்தொடுத்தேன்.சென்னை உயர்நீதி மன்றமும் என்  மனுவை 2000இல்  ஏற்றுக்கொண்டு  உரிய  உத்தரவுகளை பிறப்பித்தும் அன்றைக்கு நடைமுறைக்கு  வராதது  வேதனை அளிக்கிறது. இது   தொடர்பாக வெளியான எனது நூலும் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து எனது பதிவு வருமாறு. 

https://bit.ly/2uGOhzB 

#தமிழக_மேலவை
#தமிழக_அரசியல்
#tamil_nadu_legislative_counil
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30-01-2020


புரிதலுக்கு #கடந்த_கால_பஞ்சாயத்து_யூனியன் #தலைவர்_தேர்தல்_அனுபவப்_பதிவு

#புரிதலுக்கு 
#கடந்த_கால_பஞ்சாயத்து_யூனியன் #தலைவர்_தேர்தல்_அனுபவப்_பதிவு
———————————————-
கடந்த காலங்களில் ஒன்றிய (பஞ்சாயத்து யூனியன்)  தலைவர் தேர்தல்களில்  தூத்துக்குடி மாவட்ட த்தில் கோவில்பட்டி ஒன்றியம், புதூர் ஒன்றியம், கயத்தாறு ஒன்றியம், திருநெல்வேலி  மாவட்டத்தில் குருவிகுளம் ஒன்றியம், சங்கரன்கோவில் ஒன்றியம், மேலநீலிதநல்லூர் ஒன்றியம், விருதுநகர் மாவட்டத்தில்  சாத்தூர் ஒன்றியம், வெம்பக்கோட்டை ஒன்றியம், சிவகாசி ஒன்றியம் என குறைவான ஒன்றியக்குழு உறுப்பினர்களை கொண்டு வெற்றி பெற அடியேன் ஆற்றிய பணிகள் இன்றைக்கும் நினைவில் இருக்கின்றன. 
இந்த பகுதியில் உளவியல்பூர்வமாகவும், கடந்த கால தேர்தல் அனுபவங்களை பெற்றவர்கள் மூலமும் பணியாற்றினால்
தான் வெற்றியை ஈட்டமுடியும் என்ற புரிதல் வேண்டும். கடந்த 1969லிருந்து
உள்ளாட்ச்சி  தேர்தல்  குறித்தான அனுபவமும் உண்டு.  ஆனால் இதையெல்லாம் கவனிக்கமால் கடப்பது
நல்லதல்ல.

#பஞ்சாயத்து_யூனியன் #தலைவர்_தேர்தல்_

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
30-01-2020


Mohandas_Karamchand_Gandhi #Sri_Lanka

#Mohandas_Karamchand_Gandhi 
#Sri_Lanka 
———————————————-
Daily News  mourned the loss of Mahatma Gandhi 31. 1. 1948                                                                                   30 January 1948  five months had passed since India had achieved her hard won independence, and less than a week since an official constitution came into force. Mohandas Karamchand Gandhi, the internationally acknowledged symbol of the Indian freedom struggle was on his way for prayer meeting scheduled for the evening. He was suddenly approached by a 35-year-old man named Nathuram Godse – a prominent member of the Hindu Mahasabha. He bent down in salutation in front of Gandhi before pulling out his revolver and shooting him thrice on the chest. Two hours later, Gandhi was declared dead, leaving the newly born nation mourning the loss of a father figure.

While the news of Gandhi’s assassination sent shockwaves across the country, nations across the globe were hardly insulated from this report. The Mahatma was revered almost as a demi-God in his country. However, internationally as well he had made a mark that very few Indians before him had achieved. Gandhi’s foremost priority in India was his fight for freedom from British rule. Internationally, however, he came to acquire a reputation for much more than nationalism. He was the symbol of peace and truth that leaders across the world found inspirational. To some he was the “apostle of nonviolence” while to others his fight against colonialism went above the regular politics of nationalism.

Gandhi did not just represent India’s nationalist pride, but clearly he was a world phenomenon as is evident from the urgency with which newspapers across the globe reported his death. A day after his assassination, Mahatma Gandhi featured across the front page of practically every major newspaper of the world as the symbol of loss that India would find hard to recover from.                      Mahatma Gandhi the 'Father of India,' paid a historic visit to Ceylon in 1927. On his first and only visit to the island, he was invited to Chilaw by the famed freedom fighters of Sri Lanka, Charles Edgar Corea and his brother Victor Corea. In addition to Chilaw, Mahatma Gandhi had visited Colombo, Kandy, Galle, Jaffna, Nuwara Eliya, Matale, Badulla, Bandarawela, Hatton and Point Pedro during his three-week-long visit to Sri Lanka and made many speeches to Sri Lankan audiences. During his stay in Ceylon he also visited the schools established by the Buddhist Theosophical Society in Ceylon namely Ananda College in Colombo, Mahinda College in Galle and Dharmaraja College in Kandy.


விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் முதல் பயிற்சி தளம்

விடுதலைப்புலிகளுக்கு  தமிழகத்தில் முதல் பயிற்சி தளத்தை அன்றைய பிரதமர் இந்திராவின் ஆட்சின் உதவியால் சிறுமலையில் ஏற்படுத்தி கொடுத்த  அண்ணன்  திண்டுக்கல் அழகிரிசாமி  நினைவு  நாள் (30-01-2018) இன்று.
காமராஜருக்கு நெருக்கமானவர். நெடுமாறன் அவர்களின் தோழர் . அண்ணாமலை பல்கலை கழகத்தில் 1950களில் ஒரு சாலை மாணக்கர்கள்http://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2017/11/blog-post_16.html





அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

அமெரிக்காவுக்கு அக்கினிப் பரீட்சை

அமெரிக்கா என்ற நாடு நிறுவப்பட்டு கிட்டத்தட்ட 350 வருடங்கள் ஆகின்றன. அமெரிக்காவின்
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவுக்கு இப்போது ஒரு அக்கினிப் பரீட்சை
நடந்துகொண்டிருக்கிறது. இந்த அக்கினிப் பரீட்சையில் அமெரிக்கா தேறுமா அல்லது இதுவரை அதற்கு இருந்துவந்த உலகிலேயே ஒரு சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயரை இழந்துவிடுமா என்ற கேள்வி அமெரிக்கர்கள் பலர் மனதில் இப்போது இருக்கிறது. 

2016-இல் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அந்த முடிவு
அமெரிக்க மக்களின் உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்துவதாக இல்லை என்று பலர் குரல்
எழுப்பினர். இதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அமெரிக்கத் தேர்தல் விதிகளின்படி இரண்டு
கட்சி வேட்பாளர்களில் (அமெரிக்காவில் இரண்டே கட்சிகள்தான் இருக்கின்றன; எப்போதாவது
தனிப்பட்ட ஒருவர் கட்சி ஒன்றை ஆரம்பித்து அந்தக் கட்சிச் சார்பில் போட்டியிடுவதுண்டு;
அவர்களில் யாரும் இதுவரை வெற்றிபெற்றதில்லை. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் ஓட்டுக்களைப் பிரிப்பதற்குத்தான் அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் உதவியிருக்கின்றன.) யாருக்கு
electoral college-இல் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெற்றவராகக்
கருதப்படுவார். இந்த electoral college என்ன என்று பார்ப்போம்.

ஒவ்வொரு மாநிலத்தின் ஜனத்தொகையைப் பொறுத்து அந்த மாநிலத்திற்கு ஜனாதிபதியைத்
தேர்ந்தெடுக்க தேர்தல் ஓட்டுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஜனத்தொகை அதிகம்
உள்ள கலிஃபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் ஓட்டுக்கள்; அளவிலும் ஜனத்தொகையிலும்
சிறியதான நியூஹேம்ஷையர் மாநிலத்திற்கு 4 தேர்தல் ஓட்டுக்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சிக்கு மக்களின் பெரும்பான்மை ஓட்டுக்கள் கிடைக்கின்றதோ அந்தக் கட்சி வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அத்தனை தேர்தல் ஓட்டுக்களும் கிடைக்கும். அடுத்த கட்சிக்கு எதுவும் இல்லை. ஒரு சில மாநிலங்களில் இரு கட்சிகளுக்கும் போட்டி தீவிரமாக இருக்கும். அங்கு ஒரு கட்சிக்கு மிகச் சிறிய வித்தியாசத்தில் பெரும்பான்மை கிடைத்தாலும் அந்த மாநிலத்தின் எல்லா தேர்தல் ஓட்டுக்களும் அந்தக் கட்சிக்குக் கிடைத்துவிடும். 2016-இல் இப்படித்தான் நடந்தது. ட்ரம்ப்புக்கு electoral college தேர்தல் ஓட்டுக்களில் ஹிலரியைவிட அதிக ஓட்டுகள் கிடைத்தன; ஹிலரிக்கோ பொதுமக்கள் வாக்குகளில் ட்ரம்ப்பைவிட முப்பது லட்சம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தன. இருந்தாலும் ட்ரம்ப்தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி ஆனார். இதனால்தான் இந்தத் தேர்தல் விதியை மாற்றி நாடு முழுவதும் பொதுமக்கள் அளிக்கும் ஓட்டுக்களில் பெரும்பான்மை யாருக்குக் கிடைக்கிறதோ அவர் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் எழும்பும். ஆனாலும் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

இப்படி மொத்த ஜனங்களின் ஓட்டுக்களில் பாதிக்குமேல் பெறாமல் பதவிக்கு வந்த ட்ரம்ப்பின் மேல் பலருக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை 40% சதவிகிதத்திலிருந்து குறையவில்லை என்கிறார்கள். ஒபாமா ஏழைகளுக்காகவும் அமெரிக்காவின் பிம்பத்தை நல்லபடியாக உயர்த்துவதற்காகவும் என்னென்ன செய்தாரோ அவை எல்லாவற்றையும் ஒபாமா செய்தார் என்பதற்காகவே மாற்றிவருகிறார் ட்ரம்ப். அமெரிக்க நாடு வெள்ளை இனத்தவருக்கே என்ற வாதத்தை மறைமுகமாகக் கூறி வருகிறார். வெள்ளை இன அமெரிக்கர்களுக்கு இந்த வாதம் மிகவும் பிடிக்கிறது. அமெரிக்கா இப்போது பொருளாதாரத்தில் உலகிலேயே முதன்மை நிலையில் இருப்பதற்கு முதலில் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக இங்கு கொண்டுவரப்பட்ட அடிமைகளின் உழைப்பும் அதன் பிறகு உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் பங்களிப்பும் காரணம் என்பதை இந்த வெள்ளை இனவாதிகள்
மறந்துவிடுகிறார்கள். வெளியிலிருந்து வந்தவர்கள் எல்லாம் அமெரிக்காவை விட்டுப்
போய்விட்டால் அமெரிக்காவின் வளம் அனைத்தும் தங்களுக்கே என்று இவர்கள் நினைக்கிறார்கள்.
அமெரிக்காவின் பன்மைத்தனம்தான் அமெரிக்காவின் சிறப்பம்சம், அதன் வலிமை என்று இவர்கள் நினைப்பதில்லை. அமெரிக்காவில் வெள்ளை இன மக்களின் ஆதிக்கத்தை மீண்டும்
கொண்டுவருவார் என்று ட்ரம்ப்பின் பின்னால் இவர்கள் கானல் நீரை நோக்கி ஓடுபவர்கள்போல்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு தலைமுறையில் வெள்ளை இனத்தவர்
சிறுபான்மையினராக ஆகிவிடுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இருக்கிறது.

இவர்கள் கொடுக்கும் தைரியத்தில் ட்ரம்ப்பும் தான்தோன்றித்தனமாக, தான் அமெரிக்காவுக்கே
அரசன்போல் நடந்துவருகிறார். ரஷ்யாவின் புதின் போல், சீனாவின் ஷி போல், துருக்கியின்
எர்டோவன் போல், இந்தியாவின் மோதிக்கு இருக்கும் வாய்ப்பு போல், சவூதி அரேபியாவின்
சல்மான்கான் போல், வட கொரியாவின் கிம் ஜாங்-அன் போல் தான் வாழ்நாளுக்கும்
அமெரிக்காவின் அதிபராக இருந்துவிட முடியாதா என்று ஏங்குகிறார். உலக அரங்கிலும்
அமெரிக்காவின் பல நட்பு நாடுகளுடன் எதையும் சிந்திக்காமல் மனதில் தோன்றுவதைப் பேசி
வருகிறார், நடந்து வருகிறார். அமெரிக்கா உலகிலேயே பணக்கார நாடு, ராணுவ பலம் வாய்ந்த நாடு என்பதால் பல நாட்டுத் தலைவர்களும் ட்ரம்ப்பைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் நடந்துகொள்கிறார்கள். உள்நாட்டிலும் 40 சதவிகித மக்களின் ஆதரவு இருப்பதாலும்
வெளிநாடுகளிலும் அமெரிக்காவின் பலத்திற்குப் பயந்து பல தலைவர்கள் வாலைச்
சுருட்டிக்கொண்டிருப்பதாலும் ட்ரம்ப்பின் அட்டகாசங்களுக்கு அளவில்லாமல்
போய்க்கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில் 2020 தேர்தலில் தன்னை எதிர்க்கக்கூடிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஜோ பைடன் முதலிடம் வகிக்கலாம் என்று பயந்த ட்ரம்ப் அவர்மேல் எப்படியாவது சேற்றைப் பூசிவிட வேண்டும் என்று நினைத்தார். துணை ஜனாதிபதியாக இருந்த பைடனின் மகன் உக்ரைன் நாட்டின் ஒரு ஊழல் மலிந்த, எரிசக்தி கம்பெனியின் உயர்பதவியில் இருந்தார்; அந்தக் கம்பெனியில் வேலை பார்த்தாலும் அவர்மீது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. பைடனையும் அவரையும் விசாரிக்க வேண்டும் என்றும், அப்படி விசாரித்தால்தான் உக்ரைனுக்குக் கொடுப்பதாக அமெரிக்கப் பாராளுமன்றம் தீர்மானித்த 391 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அளிப்பதாகவும் 2019 ஜூலை மாதம் 25-ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஸெலின்ஸ்கியைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கூறியிருக்கிறார். அமெரிக்கப் பாராளுமன்றம் அனுமதி கொடுத்த பிறகு அந்நிய நாடுகளுக்கு ராணுவ உதவியை பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமலேயே நிறுத்திவைப்பது அமெரிக்கச் சட்டப்படி குற்றம். நிறுத்திவைத்தது எப்படியோ உள்தகவலாளி (whistle blower) ஒருவர் மூலம் வெளியே வந்துவிட்டது.

ஏற்கனவே ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து இறக்கப் பல முறை முயன்ற ஜனநாயகக் கட்சி
அங்கத்தினர்கள் இப்போது ட்ரம்ப்பின் இந்த அடாவடிச் செய்கையை முன்வைத்து அவரைப் பதவி இறக்க விசாரணை (impeachment) செய்து எப்படியாவது பதவியிலிருந்து இறக்கிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள். இவர்களுடைய முயற்சி வெற்றி பெற்றால் அமெரிக்கா சட்டப்படி நடக்கும் நாடு, ஜனாதிபதியானாலும் சட்டத்திற்கு மேற்பட்டவர் அல்ல என்பது நிரூபணமாகும். இதுதான் அமெரிக்காவுக்கான இப்போதைய அக்கினிப் பரீட்சை.

முதலில் ட்ரம்ப் உக்ரைன் அதிபரோடு தான் பேசவேயில்லை என்றார். பிறகு பேசியதாகவும்
பைடனைப் பற்றியும் அவருடைய மகனைப் பற்றியும் விசாரிக்கச் சொல்லவில்லை என்றும்
விசாரித்தால்தான் ராணுவ உதவி என்று நிபந்தனை போடவில்லை என்றும் கூறிவந்தார். இப்போது
எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்ட பிறகு இந்தச் செய்திகள் எல்லாம் பொய்ச் செய்திகள் (fake news)
என்று சொல்லிவருகிறார். (இவரிடமிருந்துதான் இந்திய அரசியல் தலைவர்களும் fake news என்ற
வார்த்தையைக் கற்றிருக்கிறார்கள்.) தான் மட்டுமே உண்மை பேசுவதாகவும் மற்றவர்கள் எது
கூறினாலும் அது பொய் என்றும் ட்விட்டரில் கூறுவது ட்ரம்ப்பின் பொதுவான வழக்கம்.
இப்போதும் அதைத்தான் செய்துவருகிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையால் இதைப்
பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. சில தினங்களுக்கு ஒரு முறை ‘உண்மை எப்போதும்
வெல்லும்’ என்று விளம்பரம் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.

எப்படியாவது ட்ரம்ப்பின் இந்தக் குற்றத்தை நிரூபித்துவிட வேண்டும் என்று ஜனநாயகக்
கட்சிக்காரர்கள் முயன்றுகொண்டிருக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் அதை
எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமெரிக்காவின் கீழவையில்
ஏற்கனவே ட்ரம்ப் பதவி இறக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இருந்தாலும் மேலவை அங்கத்தினர்கள் 100 பேரில் 67 பேர் ஓட்டுப் போட்டால்தான் ஜனாதிபதியைப் பதவி இறக்கம் செய்ய முடியும். செனட்டில் 47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்களும் 53 குடியரசுக் கட்சி அங்கத்தினர்களும் இருக்கிறார்கள். 47 ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுப் போடத் தயாராக இருக்கிறார்கள்; குடியரசுக் கட்சியில் இப்போதைக்கு யாரும் பதவி இறக்க ஓட்டைப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது. இத்தனைக்கும் இன்று (ஜனவர் 27, 2020) ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போல்ட்டன் என்பவர் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி (இது இன்னும் வெளியாகவில்லை; மார்ச் 17 அன்று வெளியாகிறது.) ஒரு பத்திரிக்கைக்குக் கிடைத்து
ட்ரம்ப்பிற்குப் பாதகமான செய்திகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படியும் குடியரசுக் கட்சி
செனட்டர்கள் யாரும் பதவி இறக்கத்திற்கு ஓட்டுப் போடத் தயாராக இல்லைபோல் தெரிகிறது.
நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் ட்ரம்ப்பை எப்படியாவது
இறக்கிவிட வேண்டும் என்று தங்களாலான எல்லா முயற்சிகளையும் செய்துவருகின்றன. கீழவையின் பதவி இறக்கத் தலைவர் தன் வாதங்களை முடிக்கும்போது, ‘இப்போது உலகம் முழுவதும் அமெரிக்காவைத்தான் ஜனநாயகத்திற்கு உதாரணமாகப் பார்க்கிறது. அதனால் இப்போது ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்காவே விசாரணைக்குள்ளாகி இருக்கிறது’ என்று முடித்தார். பத்திரிக்கையில் பத்தி எழுதும் ஒருவர், ‘உலகிற்கே ஜனநாயக வழிகாட்டியாக இருந்த, உண்மை அதிகாரம் மக்களிடம் இருந்த, அமெரிக்கக் குடியரசு இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும் அபாயம் இருப்பதுபோல் இருக்கிறது’ என்று எழுதியிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு இது சோதனைக் காலம். ட்ரம்ப்பை குடியரசுக் கட்சி செனட்டர்கள் இவ்வளவு
ஆதாரங்கள் கிடைத்த பிறகும் பதவியிலிருந்து இறக்கவில்லையென்றால், இந்த அக்கினிப்
பரீட்சையில் அமெரிக்கா தோற்றுவிட்டால் உலகிற்கே இது நல்ல சகுனமில்லை.

Nageswari Annamalai

#Gandhi 73rd death anniversary #காந்தியடிகளின் நினைவு 73 வது நாள்

#Gandhi 73rd death anniversary 
#காந்தியடிகளின் நினைவு 73 வது நாள்




Wednesday, January 29, 2020

மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்.

மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்.(தொல்காப்பியம்)
இயல்பாய் இருக்கட்டும்.....
தானாய் வரும்....

ஊர் மணம்.....


Elegy_written_in_a_country #churchyard. #Thomas_Gray

"Full many a gem of purest ray serene‬
‪The dark unfathomed caves of ocean bear:‬
‪Full many a flower is born to blush unseen‬
‪And waste its sweetness on the desert air"‬
‪- #Elegy_written_in_a_country #churchyard. #Thomas_Gray


Tuesday, January 28, 2020

VPMenon

#

:The Unsung Architect of Modern India today at the shop.But he
Was against then Madras state (Tamilnadu) interest.......

With his initial plans for an independent India in tatters, the desperate viceroy, Lord Mountbatten, turned to his seniormost Indian civil servant, Vappala Pangunni Menon—or VP—giving him a single night to devise an alternative, coherent and workable plan for independence. Menon met his stringent deadline, presenting the Menon Plan, which would change the map of the world forever.

Menon was unarguably the architect of the modern Indian state. Yet startlingly little is known about this bureaucrat, patriot and visionary. In this definitive biography, Menon’s great-granddaughter, Narayani Basu, rectifies this travesty. She takes us through the highs and lows of his career, from his determination to give women the right to vote; to his strategy, at once ruthless and subtle, to get the princely states to accede to India; to his decision to join forces with the Swatantra Party; to his final relegation to relative obscurity.

Equally, the book candidly explores the man behind the public figure— his unconventional personal life and his private conflicts, which made him channel his energy into public service. Drawing from documents—scattered, unread and unresearched until now—and with unprecedented access to Menon’s papers and his taped off-the-record and explosively frank interviews—this remarkable biography of VP Menon not only covers the life and times of a man unjustly consigned to the footnotes of history but also changes our perception of how India, as we know it, came into being.

Monday, January 27, 2020

எந்த வேடமும் புனைவதுமில்லை.

எதையும் தேடிஎங்கும்அலைவதுமில்லை. அதற்க்கு   அவசியமில்லை.


நான் என்றும் தனி தன்மையை தொலைத்ததும்மில்லை.
என் வலாற்றை நானே படைப்பேன்.
யாருக்கோ பார்க்க தெரியவில்லை என்பதால் நிலவு அதன் அழகை இழந்து
விடுவதில்லை.  அது போல, நுண்மாண் நுழைபுலம்    கொண்டவர்கள் தங்களுடைய     ஆளுமையை அங்கீகரிக்கத் தெரியாதவர்களிடம் எக்காலத்திலும் மண்டியிடுவதில்லை. 

சில நல்லவர்கள் சிலரின்  கயமையால் ஜெயிப்பதில்லை.  ஜெயித்த  பின் சில  தகுதியற்ற,  நேர்மையற்ற  குடிலர்களும் பூர்னமாகமிகநல்லவர்கள்ஆகிறார்கள்.காலம்
இதற்க்கு விடை சொல்லும்....

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020

Himalayan

“The supreme reality of our time is the vulnerability of this planet.”
Pic- Himalayan
#ksrpost
27-1-2020.


சுங்கச்_சாவடி

இந்தியாவிலேயே நெடுஞ்சாலைகளில் பணம் கறக்கும் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை  தமிழகத்தில் தான் அதிகம். மக்கள். நல  அரசில் இவையெல்லாம் அடிப்படை உரிமைக்கு முரணானது.   தமிழகத்தில்  சில சுங்கச்சாவடிகள்  உரிய   உரிமம் இல்லாமல் போலியாக இயங்குவதாகவும் தகவல்.

#சுங்கச்_சாவடி

#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020


அனுப்பிரச்சனை

கடந்த 2008-இல் மன்மோகன் சிங்க் - புஷ்  அனு ஒப்பந்தம் ஏற்பட்ட போது "123 இந்தியாவே ஓடாதே! நில்! என்ற நூலை எழுதினேன். 

123 அனு ஒப்பந்தம் எப்படியெல்லாம் சீரழிவு இந்தியாவிற்கு ஏற்படும் என ஆவணங்களோடு எழுதி 2008-ல். திரு. வை.கோ  அவர்கள்  வெளியிட்டு திரு.எஸ்.நல்லகண்ணு அவர்கள் முதல் பிரதியை  பெற்று கொண்டார்.
இரா.செழியன்  போன்ற  பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

இன்னும்  பிரச்சனைகள்  அப்படியே உள்ளது.

#அனுப்பிரச்சனை

KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
27-01-2020


Sunday, January 26, 2020

செம்மீன்

*

*
——————
*கடலினக்கர போனோரே*
-Ever green song

கடலினக்கர போனோரே
கானாப் பொன்னென போனோரே
போய்வரும்போ எந்து கொண்டுவரும்...


இந்திய  சினிமா வரலாற்றில்  சிறந்த திரைப்படங்களில்  இன்றைக்கும் பேசப்படும் திரைப்படம் செம்மீன் [மலையாளம்]  செம்மீன் 1965-ல் வெளியாகி, இன்றோடு 55 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.குடியரசு தலைவர் தங்க பதக்கம் பரிசு பெற்ற முதல் தென் இந்தியப்படம்.
தகழி சிவசங்கரப் பிள்ளையின் செம்மீன் என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் ராமு கார்யாட்டு திரைப்படத்தை இயக்கினார். மது, சத்யன், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர், ஷீலா, எஸ். பி. பிள்ளை, அடூர் பவானி, பிலோமின ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

#ksrpost
26-1-2020.

RepublicDay #Constitution_of_India71

#RepublicDay #Constitution_of_India71

The Lawyers who helped draft the Constitution of India.

1. Dr. BR Ambedkar
First Law Minister of India
Called to Bar at Gray’s Inn London
Served as Principal of Government Law College, Mumbai.
 
2. Alladi Krishnaswamy Iyer
Attended law classes in his spare time and passed the BL exam while studying history
Advocate General for Madras from 1929 to 1944
Was part of eight other Committees of the Constituent Assembly

3. KM Munshi
Arrived in Bombay in 1907 after topping LLB exams
Founder of Bharatiya Vidya Bhavan
Governor of Uttar Pradesh from 1952-1957.



4. Govind Ballabh Pant
Practiced at Almora and Kashipur after graduating from Allahabad University
First Chief Minister of Uttar Pradesh
Union Home Minister from 1955-61

5. Debi Prasad Khaitan
Founder of Khaitan & Co
One of the few law firms to represent Indian industrialists in pre-Independence era

6. Sir Syed Muhammed Saadullah
Practiced in Guwahati before moving to Calcutta High Court
Prime Minister of Assam in pre-Independent India Conferred Knighthood in 1928

7. N Gopalaswamy Ayyangar
Joined Civil Services after graduating in law
Served as Collector and District Magistrate for three years
Prime Minister of Jammu & Kashmir from 1937-43

8. BL Mitter
Advocate General of West Bengal
Worked in the Law Ministry
Having worked with the Dewan of Baroda, Mitter is said to have made a significant contribution to the integration of the Princely States with India. He was later replaced on the Drafting Committee by Madhav Rao, a Legal Advisor of the Maharaja of Vadodara.

As the country is celebrating its Republic Day, the occasion evokes nostalgia about the drafting of the Constitution,
Perhaps, many people do not know the contributions of Benegal Narasing Rau from coastal Karnataka as the Constitutional Advisor to the Constituent Assembly.

He led the team of the Constituent Assembly Secretariat (CAS) which was the interim bureaucratic agency tasked with helping in drafting the Constitution. Ramachandra NR, an 80-year-old retired professor of history, says many of his students didn’t even know the role Rau played in the historic exercise. “Dr Ambedkar, the man behind the Constitution, himself praised Rau for his contributions. Our younger generations should know about this,” he feels.

Noted cardiologist and voracious reader from Mysuru, Dr C D Sreenivasa Murthy, says “the Drafting Committee under the chairmanship of Dr Ambedkar declared that the Draft Constitution was scrutinised thoroughly by Rau for making it one of the best in the world. Rau was not a member of the Constituent Assembly, but he was the most important expert who did the primary thinking and writing”.

Another man from Karnataka who was part of the Drafting Committee was Madhav Rao, the legal advisor to the Maharaja of Vadodara. He replaced B L Mitter who later made significant contributions to the integration of the princely states with India.

Leaders at various
stagesof the framing
of the Constitution
According to Ramachandra, there were a lot of buzz about the framing of Constitution. Theories about several drafts of the statute were also heard, he recalls.“It was a moment of curiosity. Though I was young then, I heard about the developments from my father who would ensure that I knew every bit of what was going on in our country”, he says. 

B N Rau

Rau was born on February 26, 1887 at Karkala in the then South Canara district. He completed his education in Madras and Cambridge. Rau secured the 16th rank in the tough civil service examination in 1909. He was posted in his home province of Madras. He refused to serve there and reportedly wrote a letter to the Commissioner, “Sir, in this regard to the province to which I have been assigned, I beg to inform you that I have friends or relatives in almost every part of the Madras Presidency and also that my father possesses lands in the province. Under these circumstances, it might be difficult for me to perform my duties unhampered... Should it be possible,

I request that I may be assigned to Burma.” Following this extraordinary request, Rau was transferred to Bengal. He was interested in legislative and constitutional matters, which led to his appointment as the Legal Remembrancer and Secretary to the Government of Assam. He became a much sought after constitutional expert. With the establishment of the Constituent Assembly in 1946, he was a natural choice to be appointed as its Constitutional Advisor. Later, his family shifted from Karkala and moved abroad. He represented India in the United Nations and finally served as a judge in the International Court of Justice at The Hague. He passed away on November 30, 1953 in Zurich, Switzerland. 

Kengal Hanumanthaiah

Kengal Hanumanthaiah was one among the first Constituent Assembly members. Born on February 10, 1908 in Bengaluru, he obtained his BA from Mysore Maharaja College and studied law at Poona Law College. He joined the Bar and practised law briefly. In 1934,He was a member of the Constituent Assembly representing the Mysore province on a Congress party ticket.  He became a member of the Committee for the Drafting of a Model Constitution. In the Constituent Assembly, he made interventions on the issue of federalism and advocated for a greater autonomy for states.
#ksrpost
26-1-2020.


Dr. NR Madhava Menon

My friend,Dr. NR Madhava Menon 
The man who created world class institutions & a generation of lawyers who are now counted amongst the best in the country, Dr. NR Madhava Menon, awarded Padma Bhushan award posthumously.


இந்திய_அரசியல்_சாசனம் #Constitution_of_India

#குடியரசு_நாள்
#அரசியலமைப்பு_சட்டம்-71
————————————————-
 இன்று (26-01-2020) அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றி அதை கடந்த 24-01-1950 அன்று ஏற்றுக் கொண்டு முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். அதன்பின்னர், கடந்த 26-01-1956ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. அந்த நாளை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். 

இந்த நிலையில் அரசியல் சாசனம் 124 முறை திருத்தப்பட்டுள்ளது. இன்னும் அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் மூன்று நிலுவையில் உள்ளது. காஷ்மீர் சிறப்பு அதிகாரம் 370ம் திரும்பப் பெறப்பட்டது. இதுவரை பிரிவு 356 கொண்டு 132 முறை மாநில அரசுகளும் மத்திய அரசால் கலைக்கப்பட்டது.

அமெரிக்க அரசியல் சாசனம் வகுக்கப்பட்டு கிட்டத்தட்ட 329 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன. அந்த சாசனத்தில் 7 பிரிவுகளில் இதுவரை 300 ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 26 திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை பார்த்தால் நமக்கே வேதனையாக இருக்கின்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகத்திலேயே அதிக பக்கங்கள், அதிகமான பிரிவுகளும் கொண்டது. அதன் எடை 1.5 கிலோ ஆகும். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் எடை 0.600 கிராம். அமெரிக்க அரசியல் சாசனம் சுருக்கமான சரத்துகளும், பக்கங்களும் கொண்டாலும், அந்த நாட்டுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை கொண்டுள்ளது. ஆனால், நமது அரசியலமைப்புச் சட்டம் 328 பிரிவுகள் நாடு விடுதலைப் பெற்று 72 ஆண்டுகளில் 101 திருத்தங்கள் வரை நடந்தேறியுள்ளது. இன்னும் சில திருத்தங்கள் நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்படாமல் நிலுவையில் உள்ளது.




நமது அரசியல் சாசனம் சமஷ்டியா? ஒற்றை ஆட்சியா? என்பதை தெளிவுபடுத்தவில்லை. நெகிழும் தன்மையா? நெகிழாத் தன்மையா? என்பதற்கான பதிலும் இல்லை. நம்முடைய மண்வாசனைக்கு ஏற்ற வகையில் இல்லாமல், பிரிட்டிஷ் எழுதப்படாத அரசியல் சாசனத்தின் மரபுகள், பழக்கங்கள், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகளை எடுத்து நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரேக்கத்தில் பிறந்த ஜனநாயகம், இத்தாலியில் பிறந்த குடியரசு என்று இரண்டையும் கொண்டாடுகிறோம். நம் நாடு ஜனநாயக நாடா, குடியரசு நாடா என்று கூட பதிலளிக்க முடியாத நிலை. பிரிட்டன் நாடாளுமன்ற முறையை நாம் பின்பற்றினால் ஜனநாயக மரபியல் தான் நம்மை சாரும். பிறகெப்படி குடியரசு என்று வகைப்படுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அமெரிக்காவும், பிரான்சும் குடியரசு நாடுகளாகும். இந்தியா குடியரசு நாடா, ஜனநாயக நாடா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

அரசமைப்பு மன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

1947, ஆகஸ்ட் 29 இல் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
பி.ஆர்.அம்பேத்கர்
கோபால்சாமி ஐயங்கார்
அல்லாடி கிருஷ்ணமூர்த்தி
கே. எம். முன்ஷி
சையது முகமது சாதுல்லா
மாதவராவ்
டி. பி. கைதான்
ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21இல் சமர்ப்பித்தது. நவம்பர் 4 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இவ்வறிக்கை, முழுமை பெற்று 1949 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் நிர்ணய மன்றத்தின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய மன்றத்தின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930, ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு குடியரசு நாளாக அறிவித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு நாமே அர்ப்பணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய மன்றம் முடிவெடுத்தது.

அன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது. இதில் கவனிக்கவேண்டிய விடயமெனில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் குடியரசு என்ற தத்துவத்தின் கீழ் இயங்குகின்றன. ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடாளுமன்ற ஜனநாயக முறை இயங்குகின்றது. வரலாற்றில் முதன்முதலாக குடியரசு (Republic) என்பது இத்தாலியில் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம் என்பது கிரேக்கத்தில் உருவாக்கப்பட்டது. பிரிட்டன், இஸ்ரேல், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு நம்மைப் போன்ற எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபு ரீதியாகவும், பழக்கவழக்கங்களைக் கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகின்றது.

இதை எதற்கு இந்த இடத்தில் பதிவு செய்கிறேன் என்றால், இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா? என்ற விளக்க நியாயங்கள் இல்லை. அதேபோல, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் கூட்டாட்சியை மையமாகக் கொண்டே அங்கு அரசுகள் நடைமுறையில் உள்ளது. ஆனால், கூட்டாட்சியைக் குறித்தும் தெளிவான பார்வையும் இல்லை.

பன்மையில் ஒருமை என்ற நிலையில் பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் சமஷ்டி அமைப்பும் (Federal) ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சீராக பௌதிகம் சொல்கிற மாதிரி டைனமிசம் இருக்கும். சென்ட்ரி பியூகல்,சென்ட்ரி பெட்டல்  என்ற வீச்சில் எந்த வகையில் அமைப்பியல் ரீதியிலான ஆட்சி இந்தியாவில் நடத்துகிறோம் என்று தெரிந்தால் தான் பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் கூட்டாட்சி சரியாக இயங்கும். இங்கு கூட்டாட்சியும் கேள்விக்குறியாக இருக்கிறது. நல்லாட்சியும் அப்படித்தான் ...........?

#இந்திய_அரசியல்_சாசனம்70
#constitution70
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
26-01-2020
#இந்திய_அரசியல்_சாசனம்
#Constitution_of_India


Constitution of India

Follow Us

The new India is not scared of the govt

The Constituent Assembly was about as elite a body as could be. Its members were elected, with only a small, distinguished set of people, just 10 per cent of the total population of India, having the right to vote. These were people with property and/or government jobs. The rest of the population was too poor, too downtrodden, to assert itself.

Beautiful Image

M Rajivlochan

writer-info

M Rajivlochan
Historian

Few are aware that the India of today has barely any connection, social, political, economic, religious or philosophical, with the India of the past. The India of today is an entirely different country from the India of the historical times. It is substantially the creation of the Constitution of India that was adopted on January 26, 1950.

This is not the 'traditional' India of the 19th century in which Indians were a people bound to each other in bonds of mutual contempt. Those were a people whose loyalty was easily won over by the British East India Company merely by ensuring that there was a modicum of justice in the districts where it took control of governance. Indians of those times had little hesitation in working for the British to ruthlessly suppress anyone who questioned the British.

Gandhi, then working in South Africa, noticed the terror of the government among the Indians. People were so fearful of the government that when in 1911, a few young men threw a bomb at the Viceroy while he was going in a procession through Chandni Chowk in Delhi, the grandees of Delhi, fearing retaliation from the government, offered huge amounts of money to the Viceroy to underscore their continued loyalty to the British. It is another matter that an embarrassed Viceroy refused to accept the money and instead used it to create the Lady Hardinge Hospital and the Delhi Public Library, both of which continue to be of use to the public till today.

Our present-day India is almost entirely the creation of a set of leaders who noticed that the good governance which the British offered to Indians was at the cost of enslaving them, trashing their history and culture and, destroying the soul of the country. Indeed, during the first phase of being ruled by the British, Indians had so internalised the criticisms of India which the British made that they unquestioningly accepted the view that they were a horrible people, who ill-treated their women: kept them uneducated, threw them out when widowed and, forcibly burnt them to death in the name of sati. Indians, the British pointed out, practised the caste system, characterised by contemptible behaviour towards those of the lower castes, especially those who were powerless and poor.

An eager acceptance of the British judgment about Indians sparked off an entire movement of social and religious reform which is known as the Bengal Renaissance. A change in Indian stances became visible only in the 20th century, when Gandhi did not hesitate to dismiss such censuring of India as a ‘gutter inspector’s report’. He was responding to American journalist Katherine Mayo’s book, Mother India, in which she echoed many of the 19th- century accusations about Indians being horrible towards women.

Gandhi represented a different India. An India which noticed that while there were many things that were wrong with the way in which the Indian society functioned, it was also a caring society, one in which new ideas and people were always welcome, people took great care not to tread on each other's toes and, above all, there was always space for individuals to follow their own style of life and work without being forced to follow the diktats of society. So much so, that even young men (and sometimes women) had the freedom to take time off from normal life, take sanyas for a brief while and then return to a grihastha life after some time.

All public figures in colonial India were also sensitive to the fact of religion-based communal divisions in the country. The Report of Inquiry into the Riots at Kanpur, which the Indian National Congress produced in 1931, blamed the British for dividing Indians into warring Hindu and Muslim groups. It noticed the absence of communal conflicts in territories ruled by Indian princes. The Kanpur inquiry report rued the inability of the Congress to convince people to live peacefully rather than fight with each other for being Hindu or Muslim.

Earlier, the Nehru Report of 1928, authored by Motilal Nehru, had insisted that any future government in India had to ensure that religious divisions and distinctions were not made the basis of governance in the country. Yet, when the colonial government announced its Communal Award — the decision to have separate electoral constituencies for Muslims — the Congress hesitated in condemning it. The Akalis, under the leadership of Master Tara Singh, did.

It was in this context that the Constituent Assembly sat down in 1946 to create a Constitution for independent India. The Constituent Assembly was about as elite a body as could be. Its members were elected, with only a small, distinguished set of people, just 10 per cent of the total population of India, having the right to vote. These were people with property and/or government jobs. The rest of the population of India was too poor, too downtrodden, to assert itself. With a literacy rate of 10 per cent and a per capita income of less than Rs 500, the common people were completely beholden to these grandees for their existence.

Yet, the Constitution that they drafted ensured that every citizen was given a vote. Harijans and tribals, social groups that were considered extraordinarily powerless, were given reservations in proportion to their population. The individual was empowered through a slew of Fundamental Rights. Detailed rules were laid down to ensure that the three arms of the government — the judiciary, the legislative and the executive — were autonomous and could check and balance each other to provide a fair enough government. Above all, communal representation was scrapped.

Each of the parts of the Constitution evoked intense debate within the Constituent Assembly. Some of the more contentious issues, such as the use of a single language for governance and the Indian reverence for the cow, were put aside as part of an agenda for the future. English was accepted as the official language for 15 years and the major Indian languages were all accepted as national/official languages. The matter of the cow was made a part of the Directive Principles in the hope that at some later date, Indians might discover a better way of dealing with the emotive dilemma over worshipping the cow or eating it.

With a desire to spell out as much detail as possible and take into account as much of the diversity of India as possible, the Constitution inevitably emerged as a very lengthy document. Few except lawyers read it. Even political science students seldom went beyond the commentary written by DD Basu. Yet, the template that the Constitution provided has continued to transform India. Above all, it has created a people who are not scared of their government any more.

*THE LAST CONQUEROR*



Victorious men of earth, no more
      Proclaim how wide your empires are;
    Though you bind-in every shore
      And your triumphs reach as far
          As night and day,
      Yet you, proud monarchs, must obey
    And mingle with forgotten ashes, when
    Death calls ye to the crowd of common men.

    Devouring Famine, Plague, and War,
      Each able to undo mankind,
    Death's servile emissaries are;
      Nor to these alone confined,
He hath at will
      More quaint and subtle ways to kill;
    A smile or kiss, as he will use the art,
    Shall have the cunning skill to break a heart.
- J Shirley

ஈழப்பிரச்சனை

இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் படிப்படியாக தமிழர்களின் கலாச்சாரச் சின்னங்களாக இருந்து வரும் இந்து கோவில்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மட்டக்களப்பு சிவன்  கோவிலும்  சமீபத்தில்
நாசமாக்கப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு வாரத்தில் மட்டும்  கிட்டத்தட்ட  20 கோயில்களும்,  12 கிராமங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் கலாச்சாரமும், பண்பாடும் பாதிக்கப்பட காரணமானவர்களை கண்டிக்கக் கூட மனமில்லாமல் இருப்போரை என்ன சொல்ல?
விதியே, விதியே, தமிழர் சாதியே!!!

#ஈழப்பிரச்சனை

கே.எஸ்.இராதா கிருஷணன்
25-01-2020.

#KSRadhakrishnanposting 
#KSRPosting

படம்- மட்டக்களப்பு


மிருணாளினி_சாராபாய்

#மிருணாளினி_சாராபாய் 
————————————
மறைந்த மிருணாளினி சாராபாய் அவர்களை சோசலிஸ்ட் தலைவர் சுரேந்திரமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) மூலமாக டெல்லியில் சந்திக்க வாய்ப்பு 1990ல் கிடைத்தது.  அந்த அறிமுகத்திலிருந்து அவர் மறையும்வரைதொலைபேசியிலோ வாய்ப்பிருந்தால் சந்திப்பது உண்டு.  கலைகள் மட்டுமல்லாமல் நேர்மையான பொதுவாழ்வும் இருக்கவேண்டும் என்று விரும்பியவன்.   பல  அரசியல் கருத்துக்களையும் சந்திக்கும்போது வெளிப்படுத்தியுள்ளார். நிச்சயம் இந்திய வரலாற்றில் இடம்பெறுவார். அவர் புகழ் நிலைக்கவேண்டும்.
அவரது சகோதரர் மூத்த வழக்கறிஞர் பாரிஸ்டர் கோவிந்தசாமிநாதனும் என் மீது அன்பு பாராட்டியவர்.

மிருணாளினி சாராபாயின் (11.05.1918-21.01.2016) மரணத்துடன், 20-ம் நூற்றாண்டு இந்திய செவ்வியல் நடனத்தின் வரலாற்றை நினைவுகூரும் முக்கியப்புள்ளி ஒன்று மறைந்துள்ளது. இந்தியாவின் மரபான நாட்டிய வடிவங்களை, சமூகப் பிரச்சினைகளைப் பேசுவதற்கான வெளிப்பாட்டு வடிவங்களாக்க முடியும் என்பதை நிரூபித்த முன்னோடிக் கலைஞர் அவர்.

“என்னைச் சுற்றியுள்ள, நான் வாழும், சுவாசிக் கும் உலகத்துடனான தொடர்பை வெளிப்படுத்து வதற்கான உள்ளார்ந்த தேவையே எனது படைப்பு கள். சந்தோஷம்-துக்கம், வாழ்வு-மரணம், நேசம்-வெறுப்பு, உருவாக்கம்-அழிவு என என்னைச் சுற்றி நிகழ்பவை தொடர்பான விழிப்புணர்வைத் தூண்டுவதே எனது படைப்புகள்” என்று கூறியவர் மிருணாளினி சாராபாய்.

இந்திய விடுதலைப் போராட்ட கால கட்டத்தில் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடிய செயல்பாட்டாளர் அம்முகுட்டிக்கும் வழக்கறிஞர் சுப்பராம சுவாமிநாதனுக்கும் 1918-ம் ஆண்டு பிறந்தவர் மிருணாளினி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் கேப்டனாகப் பணியாற்றிய லக்ஷ்மி சேஹல் மிருணாளினியுடைய அக்கா.

பெண் நடனக் கலைஞர்கள் பற்றிய தவறான கருத்துகள் நிலவிய காலத்தில் மிருணாளினியை நடனத்திலிருந்து பிரிப்பதற்காகவே சுவிட்சர் லாந்துக்குப் பெற்றோர் அனுப்பினர். ஆனால் ஐரோப்பாவில் மிருணாளினி, மேற்கத்திய நடனத்தைக் கற்றார். மிருணாளி இந்தியச் செவ்வியல் நடனப் பயிற்சி பெற வேறு வழியின்றி அவருடைய அம்மா சம்மதித்தார்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியச் செவ்வியல் நடனம் மிகப்பெரிய அடையாள நெருக்கடியைச் சந்தித்தது. சதிராட்டம் என்ற பெயரில் தென்னிந்தியாவில் தேவதாசிகள் பயின்றுவந்த கலையானது புரவலர்களின்றி அருகிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையில் 1936-ல் மெய்ஞ்ஞான சபையைச் சேர்ந்த ருக்மிணிதேவி அருண்டேல், இந்தியாவின் மதிப்பு வாய்ந்த நடன வடிவங்களைப் புதுப்பிக்கும் வகையில் கலாசேத்ராவைத் தொடங்கினார். பாரம்பரிய நடன ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். மிருணாளினியின் தாய், தன் மகளை கலாசேத்ராவில் சேர்த்தார்.

கலாசேத்ராவில் ஓராண்டு பரதநாட்டியப் பயிற்சியை முத்துக்குமார பிள்ளையிடம் படித்த மிருணாளினி, ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் சேர்ந்தார். மணிப்புரி நடனத்தை அமோபி சிங்கிடமும், கதகளியைக் கேளு நாயரிடமும் பயின்றார். கதகளி மற்றும் மோகினியாட்டம் மீதான ஈடுபாடு காரணமாகக் கவிஞர் வள்ளத்தோல் நாரயண மேனனின் பள்ளியான கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். குஞ்சு குரூப்பிடம் சேர்ந்து கதகளி வடிவத்தில் தேர்ந்தார். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய கதகளி மற்றும் குச்சுப்பிடியில் அவர் பெற்ற பயிற்சிதான் பின்னாட்களில் அவரது முக்கியமான படைப்புகளுக்கு உத்வேகமாக அமைந்தது.

1940-ல் பிரபல விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயைக் காதல் திருமணம் செய்துகொண்டு குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் குடியேறினார். அகமதாபாத்தில் அவர் தொடங்கிய தர்ப்பணா அகாடமி, இந்தியாவின் பிரதான நிகழ்த்துகலைப் பயிற்சிக்கூடமாக விளங்கியது. “நடனத்தில் உடல்ரீதியான, மனரீதியான பயிற்சியை அடுத்து, உடல்ரீதியான பாவங்களின் ஆன்மிக இயல்பைத் தர்ப்பணாவில் கற்றுக்கொடுக்க முயல்கிறோம். உதாரணத்துக்கு ‘வணக்கம்’ சொல்லும் பாவத்தில் மானுடத்துவமும் பரம்பொருளும் அடையாளபூர்வமாக இணைக்கப்படுகிறது. நடனக் கலைஞர் தனது மரியாதையைப் பூமித் தாய்க்குச் செலுத்தும்போது, கைகளைச் சேர்த்து நெற்றியின் நடுப்பகுதிக்கு உயர்த்துகிறார். அது மூன்றாம் கண் என்னும் புதிய பரிமாணத்தை உணர்த்துகிறது. ஒவ்வொரு முத்திரையும் ஆழமான அர்த்தத்துடன் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” என்றார்.

தனது வாழ்நாள் முழுவதும் 300 நடனப் படைப்பு களை உருவாக்கிய மிருணாளினி சாராபாய், சமூக நீதி தொடர்பான சமகாலப் பிரச்சினைகளைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார்.

அவரது சமூக ஈடுபாடு, குஜராத்தில் நலிந்துவந்த கைவினைக் கலைகளை நோக்கி அவரைத் திருப்பியது. குஜராத் அரசின் கைவினை மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்து எண்ணற்ற கலைஞர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் உதவினார். சுற்றுப்புறச் சூழலியலாளராகவும், எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கியவர் மிருணாளினி. தென்னாட்டு வரம்புக்குள் இருந்திருக்க வேண்டிய பரதநாட்டிய வடிவத்தைத் தேசிய அளவில் பரப்பிய முக்கியமான கலைஞர் அவர். அவருடைய மகள் மல்லிகா சாராபாய், முக்கியமான நடனக் கலை ஆளுமை, சமூகச் செயல்பாட்டாளர்.

20-ம் நூற்றாண்டு இந்தியச் செவ்வியல் நாட்டிய வரலாற்றில் அவரைப் போன்ற வலுவான படைப்பாளுமைகள் மிகவும் குறைவே. இத்தனை வயதிலும் உடலை வருத்திக்கொண்டு அவர் நடனமாடுவது குறித்துக் கேள்வி கேட்டபோது அவர் சொன்ன பதில் இது:

“எனது நடனத்துக்கும் எனது ஒட்டுமொத்த இருப்புக்கும் எந்த இடைவெளியும் கிடையாது. எனது ஆன்மாவின் மலர்ச்சியான நடனம்தான் எனது கை கால்களில் இயக்கத்தைக் கொண்டுவருகிறது. நான் ஆடும்போதுதான் நானாக இருக்கிறேன். நடனமாடும்போதுதான் நிரந்தரத்துவமாக இருக்கிறேன். எனது அசைவுதான் எனது பதில்.”

#மிருணாளினி_சாராபாய் 

கே.எஸ்.இராதா கிருஷணன்
25-1-2020.
#ksradhakrishnanposting 
#ksrposting


Constitution__of_India

Sixteen Stormy Days:
The Story of the First Amendment of #the_Constitution_of_India

Tripurdaman Singh

 
Sixteen Stormy Days narrates the riveting story of the First Amendment to the Constitution of India-one of the pivotal events in Indian political and constitutional history, and its first great battle of ideas. Passed in June 1951 in the face of tremendous opposition within and outside Parliament, the subject of some of independent India's fiercest parliamentary debates, the First Amendment drastically curbed freedom of speech; enabled caste-based reservation by restricting freedom against discrimination; circumscribed the right to property and validated abolition of the zamindari system; and fashioned a special schedule of unconstitutional laws immune to judicial challenge.Enacted months before India's inaugural election, the amendment represents the most profound changes that the Constitution has ever seen. Faced with an expansively liberal Constitution that stood in the way of nearly every major socio-economic plan in the Congress party's manifesto, a judiciary vigorously upholding civil liberties, and a press fiercely resisting his attempt to control public discourse, Prime Minister Jawaharlal Nehru reasserted executive supremacy, creating the constitutional architecture for repression and coercion.

What extraordinary set of events led the prime minister-who had championed the Constitution when it was passed in 1950 after three years of deliberation-to radically amend it after a mere sixteen days of debate in 1951?

Drawing on parliamentary debates, press reports, judicial pronouncements, official correspondence and existing scholarship, Sixteen Stormy Days challenges conventional wisdom on iconic figures such as Jawaharlal Nehru, B.R. Ambedkar, Rajendra Prasad, Sardar Patel and Shyama Prasad Mookerji, and lays bare the vast gulf between the liberal promise of India's Constitution and the authoritarian impulses of her first government.

#Constitution__of_India
#ksrpost
24-1-2020.


Friday, January 24, 2020

மோகமுள்- தி.ஜானகிராமன்

”சமுத்திரம் மாதிரி இருக்கிறது அவர் ஞானம். அதைவிடப் பெரிதாக இருக்கிறது அவர் சுபாவம். பெரிய மனிதர்... மனிதனுரைய நல்ல அம்சங்கள் எல்லாம் உருவாகி வந்தவர் அவர். அவரோடு பழகுவதே போதும், அவர்கூட இருந்தாலே போதும். உன்னையும் அறியாமல் நீ பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பாய். அவர் பேசக்கூட வேண்டாம்.


...இவர்கள் யாருக்கும் வாயைத் திறந்து உபதேசமா நல்ல வார்த்தைகளோ சொல்லவேண்டிய அவசியமில்லை. இந்த மாதிரி மகான்களால் உபயோகமில்லை என்று லோகாயதவாதிகள் சொல்லல்லாம். ஆனால் லோகாயதவாதிகளுக்கே பதில் சொல்ல முடியும் - அவர்களுடைய வாதத்தை வைத்துக் கொண்டு வேறு ஜன்மம் - முன் ஜன்மமோ, இல்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த வாழ்க்கையில் சாப்பிடுவது, குழந்தைகள் பெறுவதைத் தவிர மனிதகள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாகச் செய்வதில்லை. இல்லாவிட்டால் எல்லாரையும் நடத்தத் தலைவன் என்று ஒருவன் இருப்பானேன்? அவனுக்கு எல்லோரும் கீழ்பரிவானேன்? அறிவாளி, விஞ்ஞானி என்று பத்துப்பேர் இருப்பானேன்? அவர்களை மற்றவர்கள் பெரியவர்களாக ஒப்புக் கொள்வாளேன்? அப்படியே சிறந்த குழந்தைகளையே பிறக்கச்செய்வது, சிறந்த அதி மனிதர்களாக எல்லாரையும் ஆக்கிவிடுவது என்று விஞ்ஞானம் முன்னேறினால்கூட, அந்தக் கூட்டத்திலும் பெரியவன் ஒருவன் இருப்பான். தன்னைக் கட்டுப் படுத்தி, சாதாரண இச்சை இன்பங்களுக்கு மேல் நின்று, பெரிய வாழ்க்கை வாழ முயல்கிற ஒருவன் இருப்பான். அவனைப் பார்க்கும் எல்லா ஜனங்களும் கண்ணகல வியப்புடன் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள், அவனுடைய வார்த்தைக்கு கெளரவம் கொடுப்பார்கள். அவன் இருந்தாலே தங்களுக்கு பக்கபலம் என்று நினைப்பார்கள். சாதாரண சராசரி வாழ்க்கையில் இருந்து, முயற்சி செய்து தன்னையே எழுப்பிக் கொண்டு உயர்ந்து நிற்கிறவர்கள், எப்போதும் சிலர் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.”

- மோகமுள்.

#ksrpost
24-1-2020.


காவடி_சிந்து_அண்ணாமலை #ரெட்டியார்

#காவடி_சிந்து_அண்ணாமலை #ரெட்டியார்
#கழுகுமல
————————————————-
கடந்த 1990 கலைமகள் தீபாவளி மலரில் காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியார் அவர்கள்  குறித்து நான்  எழுதிய கட்டுரையின் சில குறிப்புகள்.  சென்னிக்குளத்தில்  அவரின் குரு பூஜை

தென்பாண்டிச் சீமையில்  உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூரில் 1860-ஆம் ஆண்டு அண்ணாமலை ரெட்டியார் சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலை ரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்கு, சிவகிரி முத்துசாமிப் பிள்ளை என்பவர் ஆசிரியராக அமைந்தார். அவ்வாசிரியர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார்.

ஒருநாள், அண்ணாமலையார் பாடத்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் எனக் கருதிய ஆசிரியர், அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு ஆசிரியர் கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார், தங்கு தடையின்றி ஒப்பித்ததைக்கண்டு வியந்த ஆசிரியர் அவரைப் பாராட்டினாராம். ஒருமுறை அண்ணாமலையார், வீட்டுப்பாடம் எழுதி, அதன் கீழ் "தமைய பருவதம்' என்று கையெழுத்திட்டு ஆசிரியரிடம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசிரியருக்குப் புரியவில்லை. ஆசிரியர் அண்ணாமலையை அழைத்து, ""அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன?'' என்று வினவினார். அதற்கு அண்ணாமலையார், ""தமையன் என்றால் அண்ணா; பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா'' என்று பணிவுடன் கூறினார். 

சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச் சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தர அடிகளுடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார், தாம் கற்றிருந்த நூல்களை எல்லாம் அவருக்குக் கற்பித்தார். விவசாயத்தில் விருப்பமில்லாத அண்ணாமலையார், தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழ்ந்தார். வாய்க்காலில் வந்த தண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தரிசில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை, அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடையாது என்று கூறிவிட்டார். தந்தையாரின் சினத்துக்கு ஆளான அண்ணாமலை, சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார், அவருக்கு இரங்கி உணவும் தந்தார். தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார் தந்தை. இதனைக் கண்ட சுந்தர அடிகளார், ""இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப்போகிறான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன்'' என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தினார்.

பல்வேறு இலக்கண, இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய   அண்ணாமலையார், திருவாவடுதுறை  ஆதீனத்துக்குச் சென்று,  அதன்  தலைவராயிருந்த சுப்பிரமணிய  தேசிகரிடம்  பாடம் கேட்டார். மேலும்,  அப்போது ஆதீனத்தில்.  இருந்த உ.வே.
சாமிநாதய்யரிடம்  நன்னூலும்,  மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை புரிந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணியதேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார். திருவாவடுதுறையிலிருந்து சென்னிக்குளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராக அமர்ந்தார். ஊற்றுமலையரசரின் குலதெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார். மேலும், சங்கரன்கோவில் கோமதியம்மன் மீது சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார். 

வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாஸ்திரியார், கரிவலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் பழகிய சம காலத்தவர் ஆவர்.

""சீர்வளர் பசுந்தோகை மயிலான் - வள்ளி

செவ்விதழ்அல் லாதினிய

தெள்ளமுதும் அயிலான்

போர்வளர் தடங்கையுறும் அயிலான் - அவன்

பொன்னடியை இன்னலற

உன்னுதல்செய் வாமே''

என்று தொடங்கிய பாடலை, ஒரு முறை கழுகுமலைக்குக் காவடி எடுத்தபோது வழிநெடுகத் தொடர்ந்து பாடிக்கொண்டே சென்றார். பாடல் கேட்ட அனைவரும் "முருகா முருகா' என்று கூறி மெய்மறந்தனர்.

அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச்சிந்துப் பாடல்களே ஆகும். காவடிச்சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகிவிட்டது.  வழிநடையில் பாடப்பட்ட காவடிச்சிந்துப் பாடல்களை எல்லாம் ஊற்றுமலையரசர் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும் காவடிச்சிந்து எனப்பெயரிட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார், ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி, ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. அண்ணாமலையார் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

அண்ணாமலையாருக்கு அவரது தந்தையார், காலம் தாழ்த்தாது அவரது இருபத்து நான்காம் வயதில், குருவம்மா என்ற பெண்ணை மணம் முடித்து வைத்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை, நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளரை தீராத நோய் கவ்வியது. அப்போது அவருக்கு வயது இருபத்து ஆறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்தும் நோய் நீங்கவில்லை. 1891-ஆம் ஆண்டு தைமாதம் அமாவாசையன்று தமது 29-வது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். பொன்னுடம்பு நீங்கிப் புகழுடம்பு எய்தினார்.  காவடிச்சிந்து  புகழ் அண்ணாமலையார்  மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து என்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். 

இவருடைய சிந்துவை ஐநா மன்றத்தில்
பாடினார். காந்தி, நேரு ரசித்தது.

#காவடி_சிந்து
#அண்ணாமலை_ரெட்டியார்
#கழுகுமலை

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksradhakrishnanposting
 #ksrposting
24-1-2020.


#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...