#ஜூன்_8,#உலக_கடல்_தினம் .
—————————————-
கடந்த 1992 ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் தேதி பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற புவி மாநாட்டின் போது சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் பெருங்கடல் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதன்படி 2009 ஜுன் 8 ஆம் தேதியிலிருந்து உலக தினத்தைக் கொண்டாட ஐக்கிய நாடுகள் முடிவெடுத்தது.
பூமியின் மொத்தப் பரப்பில் சுமார் 30 சதவிகிதம்தான் மனிதன் வாழும் பகுதி.
வட கோடியிலுள்ள ஆர்டிக் கடல்
தென் கோடியில் உள்ள அண்டார்டிக் கடல்
மத்திய பசிபிக் கடல்
அட்லாண்டிக் கடல்
இந்து மகாகடல்
இவற்றில் பூமியின் பாதி நீர்பரப்பை பசிபிக் பெருங்கட்ல் ஆட்கொண்டுள்ளது.
பெருங்கடல்களின் சிறிய பகுதிகள் கடல்கள். வளைகுடாக்கள் விரிகுடாக்கள் என அழைக்கப்படுகின்றன.சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள் வளைகுடாக்கள்விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.
கடலால் மனிதர்களுக்கு பல நன்மை கிடைக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக கிடைக்கிறது. நமக்குத் தேவையான குடிநீரும் கடல் மூலம் தான் கிடைக்கிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கடல் நீரின் மாசுபாடு அதிகரித்து வருகிறது. கழிவு நீர் கடலில் கலப்பது; எண்ணெய் கசிவு உள்ளிட்ட காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பால் கடலும் பாதிப்படைகிறது. இதனால் கடலில் வாழும் உயிரினங்களும் அழிகின்றன. கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடல் உணவுகள் பற்றி அறியவும் பெருங்கடலுக்கு மரியாதை செலுத்தவும் உலகப் பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது.
கடலில் நூறு கோடி நுண்ணியிரிகள் வாழ்வதாக அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். தவிர பவளப்பாறைகள் பனிப்பாறைகள் ஆகியவையும் கடலில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் சமநிலையை ஏற்படுத்துவதில் சுறா மீன்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஆனால் ஆண்டுக்கு 7 கோடியே 30 ஆயிரம் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன. உலகில் 10 கோடி பேர் உணவு வருவாய்க்கு கடலை நம்பி உள்ளனர். 52 சதவீத மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே உள்ளது. 20 சதவீதம் பேர் ஓரளவிற்கும் 19 சதவீதம் பேர் மறைமுகமாகவும் கடல் மூலம் பயன்பெறுகின்றனர். அத்தகைய #கடலை_காப்போம்.
#ksrpost
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.06.2020
No comments:
Post a Comment