#விடியல்*
பனி தூவிய பாதையில்
விடியலின் சுவடுகள்...
அது ஒரு
குதூகமான பொழுது.
பட்சிகளின் இன்குரலால்
அவதியுறும் நிசப்தம்
எருதுகளின் மணியோசையில்
சங்கமமாகிறது.
கருநீல வானத்து
நட்சத்திரக் கண்
இமைக்காமல்
பார்ப்பது
உலகப்பெண்ணின்
முதல் நீராடலை
துயிலெழுந்து
சோம்பல் முறிக்கும்
உழவனின் விலா எலும்புகள்
அவன் மூச்சிழுப்பில்
தேம்பித் தேம்பி
அழுவது போலிருக்கும்.
இவர்கள்
முதுகில் சுமப்பது
இந்தியத் தேசமன்று
சோம்பேறிகளின்
சோத்து மூட்டைகள்
No comments:
Post a Comment