#முடிவற்ற_கோடுகள்*
புதியதாக தொடங்குகிறது
எனது இயக்கம்
அமைதியுடன்
எனக்கான் வார்த்தைகளை
எடுத்துத் தொடங்குகிறேன்.
பிறகு புறப்படுகிறது
என்னுள்
சில
அமைதியும் ஆவேசங்களும்.
முரண்பட்டவைகளை இணைக்கிறேன்.
நான் கடந்து போக
அல்லது
அழித்துவிட.
இது நம்ப முடியாதது.
நான் எப்போதும்
தொடங்கிக் கொண்டேயிருக்கிறேன்
ஆனாலும்
வெகுதூடத்துக்கு வந்துவிட்டேன்.
வெறும் தலைகள் கருப்புப் புள்ளியென,
இப்போது பார்க்கவும்
என் வரைபடம் விரிகிறது
முடிவற்ற கோடுகளாய்.....
No comments:
Post a Comment