#வேலுப்பிள்ளை_பிரபாகரனை_குறித்து #பேட்டியும_கருத்தும்_கேட்கும்_ஊடக #பத்திரிக்கையாள_நண்பர்களுக்கு......
————————————————
கடந்த 1980ல் இருந்து வேலுப்பிள்ளை பிரபாகரனோடு எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல பழ. நெடுமாறன், வைகோ, புலவர் புலமைபித்தன் போன்றவர்களுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்புகள் இல்லையென்றே எடுத்துக் கொள்ளுங்கள். உண்மைகள் உறங்கட்டும். பாண்டி பஜார் சம்பவத்தைப் பற்றி நான் பார்த்த பங்கேற்ற நினைவுகளை தேதி வாரியாகவும் வழக்கு எண் வாரியாகவும் பதிவு செய்துவிட்டேன். அவ்வளவுதான்.
கடந்த 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின் ஈழத்திற்குச் சென்ற தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதுமலை கூட்டத்தி பேசிய பின் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வமாக திரும்பி வர வில்லை என்பது மட்டும் புரிதல் உண்டு. அவர் என்னோடு மயிலாப்பூர் சாலைத் தெருவில் தங்கவில்லை, திருவான்மியூர் 17வது கிழக்குத் தெருவில் என்று நினைக்கின்றேன் அங்கு அவர் தங்கியிருந்தபோதும் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். இந்திரா நகரில் 12வது குறுக்குத் தெருவில் தங்கியிருந்தபோதும் பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். அவருடைய வழக்குகளையும் கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன். மொத்தத்தில் அவரோடு எந்த தொடர்போ அறிமுகமோ இல்லை என்றோ வைத்துக் கொள்ளுங்கள்.
என்ன சொல்றீங்க?
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
13.06.2020
No comments:
Post a Comment