மனதில், நாம் பல பகுதிகளாக வாழ்கிறோம். பணியாற்றும் அலுவலகத்தில் ஒருவாறு இருப்பீர்கள். வீட்டில் வேறுவிதமாக இருப்பீர்கள். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவீர்கள். ஆனால், மனதில் எதேச்சதிகாரம் இருக்கும். அண்டையில் உள்ளோரிடம் இனிப்பாக இருப்பதாகக் காட்டிக்கொள்வீர்கள். ஆனால் அவர்களோடு தொழிலில் போட்டியிட்டு அல்லது வேறு ஏதோ ஒருவிதத்தில் அவர்களை அழிக்கப் பார்ப்பீர்கள். உங்கள் மனதில் ஒரு பகுதி மற்றப் பகுதியிலிருந்து தனித்து நின்று பார்க்கும், செயல்படும். உங்கள் மனம் பிளவுண்டு செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்டீர்களா? பிளவுண்ட மனதின் பகுதிகளிலிருந்து எவ்வாறு முழுமனதைப் பார்க்க முடியும்? மனதை முழுமையாகப் பார்த்துக் கொள்பவனைத்தான் முழுமனிதன் எனக் கூறலாம்.
எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் கொண்ட மனதை பல நிலைகளாகப் பிரிக்கும்போது, மனம் முரண்பாட்டுடன் செயல்படும். மனதை முழுமையாகப் பார்த்துக் கொண்டால் மன இயக்கத்தில் முரண்பாடு இருக்காது

No comments:
Post a Comment