வ.உ.சி, மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்றோருக்கெல்லாம்வழிகாட்டிய, #தமிழகம் அறியமறுத்த #டாக்டர். #பிவரதராஜூலுநாயுடுவின் 134வது பிறந்தநாள் (04-06-1887).
------------------------------பல தமிழகத் தலைவர்களை எல்லாம் அக்காலத்தில் வழிநடத்திய வரதராஜுலு நாயுடுவின் வரலாறு அவசியம் அறியப்பட வேண்டியதாகும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலத்தில் அவர் நடத்திய பேருந்து நிறுவனத்திற்கும், அவருடைய நிலங்களுக்கும் வரி கட்ட மறுத்ததால் அவற்றை பிரிட்டிஷ் அரசு பறிமுதல் செய்தது.
செல்வந்தராக பிறந்து, பொது வாழ்வில் அனைத்தையும் இழந்து, தனது மறைவுக்குப் பின் அவரது மனைவிக்கு வசிக்க வீடில்லாமல் இருந்தபோது, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அரசினர் தோட்டத்தில் தங்குவதற்கு வீடு ஒதுக்கீடு செய்தார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி இவருடைய நிலத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சதி வழக்கில் இருந்து வ.உ.சியை எப்படி விடுவிக்க போராடினாரோ, அதே போல விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற பசும்பொன் தேவருடைய விடுதலைக்காகவும் போராடியவர்.
இவரது துணைவியாரிடம் பசும்பொன் தேவர் அவர்கள் வருடம் ஒருமுறை சந்தித்து வாழ்த்துகள் பெறுவதும் உண்டு. சுயமரியாதையையும், விடுதலைப் போராட்டத்தையும் ஒருசேர தன் கொள்கையாக வகுத்து தமிழகத்தில் பல தலைவர்களை உருவாக்கினார்.
தனது இறுதிக் காலங்களில் தன்னுடைய ஜீவனத்திற்கே விழுப்புரத்தில் இந்து அமைப்பின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சோகமான நிலை. இவரைக் குறித்து அதியமான் எழுதிய நூல் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்தக் காலத்தின் பல தமிழக அரசியல் தரவுகளைப் பற்றி இந்த நூலில் நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே பி.வரதராஜூலுநாயுடு அந்த காலத்தில் எப்படிப்பட்ட ஆளுமை என்று அவர் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்தே அறிந்து கொள்ளலாம்.
வரலாற்றி்ல் முக்கியமான அரிதான புகைப்படம் இது.
இதில் உள்ளவர்கள் அனைவரும் பெருமைக்குரிய தமிழ் மண்ணின் நேற்றைய தலைவர்கள்.
இடமிருந்து வலம்.
பின்வரிசையில் நிற்பவர்கள்:
* எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார்,
* திருமையம் சத்தியமூர்த்தி அய்யர்,
* சென்னை குருசாமி முதலியார்,
* மாயூரம் வேதநாயகம் பிள்ளை,
நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள்:
* சேலம் பி. வரதராஜுலு நாயுடு,
* வ.உ.சிதம்பரம் பிள்ள,
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,
முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள்:
* விருதுநகர் முத்துசாமி ஆசாரி,
* மன்டையம் சீனிவாச ஐயங்கார்,
* பெருந்தலைவர் காமராசர்.
இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்ட எனது மீள்பதிவு.
https://goo.gl/abhDkq
#Dr_P_VaradarajaluNaidu
#ForgettenTamilNaduLeaders
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
04-06-2020

No comments:
Post a Comment