#சூடான்_அதிபர்_மீது_நடவடிக்கை #ஆனால்_ராஜபக்சே….? Sudan Omar- Al-Bashir - Mahinda Rajapakse.
_____________________________________
நீதிமன்றத்தின் உறுப்பு நாடான தென்னாப்பிரிக்காவிடம் அவரை கைது செய்ய வேண்டுமென்ற பொறுப்பை ஒப்படைத்துள்ளது. சூடான் அதிபரைக் கைது செய்ய வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை உலக நாடுகள் வரவேற்றன.
கடந்த 2003ம் ஆண்டு சூடான் நாட்டில் சுமார் 3லட்சம்பேர் கொல்லப் பட்டதாகவும், 25லட்சம்பேர் தங்களுடைய வீடுகள், உடைமைகளை இழந்ததாகவும் ஐ.நா இவர் மீது குற்றஞ்சாட்டியது.
இதே நிலைமை தானே ஈழத்தில் நடந்தது. ராஜபக்சே மீது சர்வதேச, சுதந்திரமான , நம்பகமான விசாரணை நடத்த நியாயமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டும் இன்னும் நிறைவேறாத நிலையில் இருக்கின்றது. இராஜபக்சேயும் இன அழிப்புதானே செய்தார்.
லைபீரிய அதிபர் சார்லஸ் இனப்படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு லண்டன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாரே ? இப்போது ஒமர் அல் பஷீர்…
இப்படி இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்படும் நிலையில், இராஜபக்ஷே தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சிகளை முறையடிக்க வேண்டாமா?
இந்த நிலையில் இன அழிப்பு போர்க்குற்றங்களில் காரணமான பல அதிபர்களை உலக அளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட ராஜ பக்சே மட்டும் அதிலிருந்து தப்பித்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-06-2020.

No comments:
Post a Comment