Friday, November 27, 2020

 











விருதுநகர் அருகே எரிச்சநத்தம், நடையநேரி எனது உறவினர் #விவசாயி வெங்கடேசன் தற்போதுள்ள காரோனா சிக்கலில் விவசாயிகளின் நிலை குறித்து இன்று பேசினார்.

விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, தென்னை, மா, கொய்யா, வாழை, காய்கறி, என பல உணவுப் பொருள்கள் மற்றும் பூக்கள் மகசூல் செய்து வருகின்றனர்.

நெல்லுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள விலை 72 கிலோ மூட்டைக்கு ரூ.1,300 ஆகும். அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் நெல் 10 சதவீதம் அளவு கூட கொள்முதல் செய்யப்படுவதில்லை.

வெளி வியாபாரிகளிடமே 90 சதவீத நெல் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் ரூபாய் ஆயிரத்திற்கு மட்டுமே வாங்குகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. சராசரியாக 5 ஏக்கர் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு, ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மா, கொய்யா, வாழை, காய்கறி, பூ சாகுபடி செய்த விவசாயிகள் பொதுமுடக்க காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் இல்லாததால் பூ வியாபாரமும் முற்றிலும் முடங்கியது.

வாழைப்பழம் வாங்க ஆள் இன்றி, பாதி விலை கூட கிடைக்கவில்லை. வாழைப்பழங்கள் பல இடங்களில் விற்பனையாகாமல் வீணாகியுள்ளது.

பொது மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் காய்கறி வாங்குவது குறைந்து, காய்கறிகள் தேங்கி மிகக் குறைவான விலைக்கே விற்பனை ஆனது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தக்காளி பயிரிட்ட ஒரு விவசாயி, “கடந்த வாரம் 100 கிலோ தக்காளி பறித்தேன். இரண்டு பேர் வேலை செய்ததற்கு கூலி ரூ.400. தக்காளியைச் சந்தைக்கு கொண்டுவர வண்டி வாடகை ரூ.400. சந்தையில் ஒரு கிலோ தக்காளிக்கு ரூபாய் 7 வீதம் மொத்தம் 700 மட்டும் தான் கிடைத்தது. எனக்கு நூறு கை நட்டம்தான் ஆச்சு. எங்களது பொழப்பு இப்படி தான் போகுது.” என புலம்பினார் என்றார்.
#ksrpost
16-6-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்