Friday, November 27, 2020

 







வாழ்ந்து வரலாறு ஆன எளிமை மற்றும் நேர்மையின் உருவமான #கக்கன் அவர்களின் பிறந்த நாள்.
கக்கன் எம்.எல்.எ.-வாக எம்.பி-யாக இருந்தது மட்டுமில்லை...காமராஜர் ஆட்சியில் பத்து ஆண்டுகள் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.அதுவும் பொதுப்பணித்துறை அமைச்சராக மேட்டூர் அணை, வைகை அணை எல்லாம் கட்டுமானப்பணி மேற்கொண்டவர்.உள்த்துறை அமைச்சராகவும் இருந்தார்.
தோழர் ஜீவாவின் தலைமையில்தான் கக்கனின் திருமணம் நடந்தது.
ஒய்வு பெற்ற காலத்தில் டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார். இவருக்கு யாரும் எழுந்து உட்காரவும் இடம் கொடுக்கவில்லை. தன் வயதான காலத்தில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் பொது வார்டில் படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில் படுத்து இருந்தவர். அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.யார் வந்து சந்தித்த பிறகே அந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு இவர் யார் என்பதே தெரியும்.
வற்புறுத்திய பின்,அரசு வழங்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்து பயணம் போன்றவற்றை பெற்றுக் கொண்டார்.இவர்தான் தியாகி கக்கன் அவர்கள்!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்