Friday, August 6, 2021

#கலைஞரின்_நினைவுகள்_26

*#கலைஞரின்_நினைவுகள்_26*

————————————————-







 டெசோ மாநாட்டு தீர்மானங்கள் முழுவதையும் தயாரித்தேன். அதை பலரின் பார்வைக்கு அனுப்ப ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தலைவர் கலைஞரிடம் வழங்கினேன். அதற்க்கு என்னை பாராட்டினார்.டெசோ ஆலோசனைக் கூட்டம் தலைவர் கலைஞர் தலைமையில் 02-08-2012 அன்று நடந்தது. பேராசிரியர், தளபதி மு..ஸ்டாலின்,துரைமுருகன், கி.வீரமணி, டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமிஜெகதீசன், தொல்.திருமாவளவன்,  அடியான் போன்றோர்கள் பங்கேற்றோம்.  தீர்மானங்கள் குறித்த விளக்கங்களும், வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் முன்நின்று பதில் சொன்னேன். 

கூட்டம் முடிந்தவுடன் கலைஞர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். உடன் பேராசிரியரும் இருந்தார். டெசோ மாநாடு பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நீதான் பேச வேண்டுமென்று ஏற்கனவே தலைவர் கலைஞர் என்னை பணித்திருந்தார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் டெசோ பற்றி சொல்லிவிட்டு, தம்பி ராதாகிருஷ்ணன் டெசோ குறித்த உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பார் என்று கலைஞர் முடித்துவிட்டார். கலைஞர் முன்புபே பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். பரவாயில்லப்பா, நல்ல தெளிவாக எல்லா கேள்விகளுக்கும்பதில்சொல்லிவிட்டாய் என்று அப்போது கலைஞர் கூறினார். 

டெசோ மாநாட்டுக்கு நார்வே, ஸ்வீடன், பிரிட்டன், மற்ற ஐரோப்ப நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் விசா வழங்க வேண்டும். இது குறித்து 2009ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையின் கீழுள்ள வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பலருக்கு விசா வழங்க மறுத்துவிட்டார். இதற்காக டி.ஆர்.பாலு முயற்சி செய்தும், விடுதலை புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று இந்தியாவுக்கு வர அவர்களுக்கு விசா வழங்க அங்குள்ள இந்திய தூதகரம் மறுத்துவிட்டது. டெசோ மாநாட்டுக்கு வருபவர்களை மத்திய அரசு தடுக்கிறது என்று 08-08-2012 அன்று தலைவர் கலைஞர் கண்டன அறிக்கையை வெளியிட்டார். 

இப்படியாக, டெசோ மாநாட்டு பணிகள் ராயபேட்டை ஒய்.எம்.சி அரங்கில், மாவட்ட செயலாளர் மறைந்த ஜெ.அன்பழகன் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. மாநாடு சிறப்பு வெளியீடானஈழத் தமிழர் பிரச்னை’, ‘Eezham Tamils Issues’, ‘கலைஞரும் ஈழத் தமிழரும்என்ற மூன்று புத்தகங்களை நான் எழுதி, எனது சொந்த முயற்சியில் தயாரித்து கலைஞரிடம் ஒப்படைத்தேன். இவற்றை மாநாட்டின் சிறப்பு வெளியீடுகளாக இருக்க வேண்டும் என்று கலைஞர் தீர்மானித்திருந்தார். அதுமட்டுமில்ல, கலைஞர் ஈழத் தமிழருக்காக தானே பாடல்கள் எழுதி, குறுந்தகடும் தயாரித்து இருந்தார். அதுவும் மாநாட்டில் வழங்கப்பட்டது. இப்படியாக மாநாடு பணிகள் நடந்து கொண்டே இருந்தன. ஈழம் என்ற வார்த்தையைக் குறிப்பிடக் கூடாது என அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து கூறி வந்தது. 

மாநாடு குறித்தும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அடுத்த பதிவில் பார்ப்போம்......(தொடரும்)

 

படம் 1 : அறிவாலயத்தில் டெசோ ஆலோசனைக் கூட்டம்

படங்கள் 2 : எனது டெசோ மாநாட்டு சிறப்பு வெளியீடுகள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 

14-10-2020.

#KSRPostings

K. S. Radhakrishnan,

http://ksradhakrishnan.in

No comments:

Post a Comment

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |

#*இலங்கை அதிபரிடம்இந்திய எதை வலியுறுத்த வேண்டும்*? | *Ksr* | @*ksrvoice* |  #Srilanka, #IndianOcean, # #AnuraKumaraDissanayake, #china, #Tam...