தடுப்பணைகளை கட்ட கூடாதென்று கேரளம், கர்நாடகம், ஆந்திர அரசை எதிர்த்து போராடினோம் சரி. இப்போது பாலாறிலும், தென்பென்ணை ஆற்றிலும் வெள்ளம். இந்த தண்ணீரினை தேக்கி வைக்க தடுப்பணைகள் கிடையாது. அதே போல காவிரியிலும் 30 தடுப்பணைகளுக்கு மேல் கட்டலாம். இதை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து நாம் போராடவில்லையே.
பாலறிறு, தென்பென்ணை ஆறுகளில் வருகின்ற வெள்ளம் நீர் வீணாக கடலுக்கு போகின்றது. பிறகு தண்ணீர் இல்லையே என்று தவிக்கின்றோம். நம்மிடம் தொலைநோக்கு பார்வை இல்லை என்று நமக்கு நாமே நொந்து கொள்ள வேண்டியது தான்.
#தடுப்பணைகள்
#நீர்_பாசனம்
#பாலாறு
#தென்பென்ணை
#காவிரி
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
19-10-2017
No comments:
Post a Comment