Thursday, October 5, 2017

போர்ஹெஸ் - தமிழில் பிரம்மராஜன்

போர்ஹெஸ் - தமிழில் பிரம்மராஜன்
-----------------------------------------------
போர்ஹெஸ்ஸின் படைப்புகள் பன்னாட்டளவில் பேசப்படுகின்றன. நவீன - பின் நவீனத்துவ இலக்கியத்தில் எழுத்துலகில் மாற்றியமைத்தவர் போர்ஹெஸ். இலத்தீன் - அமெரிக்க இலக்கியத்திற்கு வலுசேர்ப்பவர். நல்ல கவிஞர். இவருடைய படைப்புகள் அனைத்தும் கொண்டாடப்பட்டவை. இவரைத் தமிழில் கவிஞர் பிரம்மராஜன் அறிமுகப்படுத்தியுள்ளார். அருமையான உழைப்பில் தமிழில் உருவான இந்த படைப்பின் மீது அனைவரும் தங்களுடைய பார்வையை செலுத்த வேண்டும். இந்த நூலில் கதைகள் அலெஃப், மணல் புத்தகம், பேரவை, பேபல் நூலகம் என சிறுகதைகளும், கட்டுரைகளில் சுவரும் புத்தகங்களும், குவிக்ஸாட்டில் பாதியளவு மந்திரங்களும், கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதை அற்புதமாக தந்துள்ளார் கவிஞர் பிரம்மராஜன்.

மறைபொருள் துறை சார்ந்த போர்ஹெஸ் லேடீஸ் ஹோம் ஜர்னல் என்ற இதழுக்கு இணையான அர்ஜென்டீனிய பத்திரிக்கை ஒன்றுக்கு வாடிக்கையான பங்களிப்பாளராக இருந்தார். 

ஷோப்பஹவர், எல்லரி குவீன், கிங்காங், கப்பாலிஸ்டுகள், லேடி முராசாகி அல்லது எரிக் த ரெட், ஜாக் லண்டன், புலோட்டினஸ், ஆர்சன் வெல்ஸ், ஃபிளாபர், புத்தர் அல்லது டியோன் குவின்ஸ்டன் இவர்கள் அனைவருடனும் சரிசமமான இயல்புடன் இருந்தார். மிகக் கச்சிதமாக சொல்வதாக இருந்தால் அவர்கள் இவருடன் இயல்பாய் இருந்தனர்.


தனக்கென எந்தவித முக்கியத்துவமும் அளிக்காத போர்ஹெஸ், இந்த பிரபஞ்சத்தின் வழிகாட்டியாகவும் மேலும் போர்ஹெஸ்ஸின் வழிகாட்டியாக இருக்கக் கூடிய ஒரு பிரபஞ்சத்தின் கண்டுபிடிப்பாளராகவும் இருந்தார்.
- எலியட் வெய்ன்பர்கர் (Total Library)

#போர்ஹெஸ்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...