Wednesday, October 18, 2017

புவனேஸ்வரி அம்மன் கோவில்

சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலம் சென்றபோது அந்த மாநிலத்தின் தொழில் நகரமான ஜாம்ஷெட்பூரில் இந்த படத்திலுள்ள கோவிலை பார்க்க முடிந்தது. இது புவனேஸ்வரி அம்மன் கோவில் என்றார்கள்.
அங்குள்ள நண்பர்கள், “தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் எல்லாம் சேர்ந்து தான் கட்டியுள்ளோம்" என்றனர். திராவிடக் கலையின் வடிவில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. திராவிட மாநிலத்தினர் சேர்ந்து கட்டியுள்ளனர் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. 

இது மாதிரி திராவிட கட்டிட கலை வடிவ கோவில்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவை தமிழர்களின் அடையாள சின்னங்களாக திகழ்கிறது.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".