Thursday, October 5, 2017

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பற்றி வினா

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மறைந்த முன்னாள் முதல்வர், மக்களின் ஆதரவை பெற்ற தலைவர் என்ற முறையில் இவ்விழா நடத்துவதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் நடத்தப்படும் முறைகளில் சரியில்லை.

மறைந்த முன்னாள் முதல்வர்கள், எம்.ஜி.ஆரை விட சிறந்த , எவ்வித குற்றசாட்டுக்கும் ஆளாகாத மூதறிஞர் இராஜாஜி,எளிமையின் சின்னம், பதவியை புறந்தள்ளிய ஓமந்தூரார், எளிமையான பி.எஸ். குமார்சாமி ராஜா(இவரின் படத்தைகூட அரசு திறக்கவில்லை, ஏனெனில் இவருக்கு ஜாதி பின்புலம் இல்லை),கல்விக்கண் திறந்த காமராசர், இந்தி திணைப்பை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஊழலற்ற ஆட்சி புரிந்த பக்தவச்சலம், குறைந்த ஆண்டுகளே ஆண்டாலும் காலத்தால் சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு என பெயரிட்ட, அண்ணா ஆகியோரின் நூற்றாண்டு விழா நினைவு தினங்கள் இப்படியாக பள்ளி மாணவர்களின் துன்பத்தில் அரசாங்கத்தால் கொண்டாடப்பட்தா? இந்த கேள்விக்கு நேர்மையுடன் பதில் சொல்லிவிட்டு தமிழக முதல்வர் அடுத்த மேடை ஏறட்டும். இல்லையேல் பள்ளி மாணவர்கள் அலைகழிக்கப் படுவதை தடுத்து நிறுத்தட்டும்.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...