Sunday, October 22, 2017

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களும், உரிமைகள்.

தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களும், உரிமைகளும் குறித்தான உரிய புள்ளி விவரங்களோடு சுமார் 300 பக்கங்கள் அளவில் வரவிருக்கும் இந்த நூலின் பணிகளை முடித்துவிட்டேன். அச்சுக்கு செல்ல வேண்டும்.
இந்த நூலில் தமிழகம் அறியாத, பேசாத, விவாதிக்காத, குரல் கொடுத்திடாத பல முக்கிய பிரச்சனைகள் உள்ளன. இதை படித்தாவது நமது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொண்டு தங்களது கடமையை ஆற்றினால் சரி.
வாழைப்பழத்தை தோலுரித்து சாப்பிட கைகளில் கொடுத்ததை போல தமிழகத்தின் பிரச்சனைகளை தெளிவாக புரிந்து கொள்ளும்படியாக உள்ளங்கையில் கொடுத்துவிட்டோம். வாய்மூடி மௌனிகள் இனியாவது நமக்காக குரல் உயர்த்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கிடப்பில் கிடக்கும் தமிழக உரிமைகள்
-கே. எஸ். இராதாகிருஷ்ணன்
1. நதிநீர்
i. நதிநீர் ஆதாரங்கள் போன்ற பிரச்னைகளை பேசித் தீர்க்க கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்ரம், ஒடிசா போன்ற மாநிலங்கள் இணைந்த ஒரு கவுன்சில் அமைக்கப்பட வேண்டும். இது போன்ற பிரச்சனைகளை தீர்வு காண நதிநீர் பாய்கின்ற மாநிலங்கள்
ii. தமிழ்நாட்டில் நாட்டின் விடுதலைக்கு முன்னால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன.
iii. காவிரி சிக்கலைப் போல சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் வருவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
iv. மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றின் குறுக்கே 4 மிகப்பெரிய அணைகளை கட்ட முடிவு செய்துள்ள கர்நாடகா, அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து விட்டது.
v. அத்திக்கடவு - அவிநாசி குடிநீர்த் திட்டம்
vi. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு, காவிரி - குண்டாறு, பெண்ணையாறு - பாலாறு என மூன்று இணைப்புத் திட்டங்களுக்கான உரிய நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை
vii. மோடி அரசு முடிவு செய்துள்ள ஒரே தீர்ப்பாயம் என்பது பாதகமாகத்தான் முடியும். அந்த முயற்சியை கைவிட வேண்டும். நதிநீர் தீர்ப்புகளை உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வரவேண்டும்.
viii. அணை பாதுகாப்பு மசோதா 2016
ix. நீர்வள ஆதாரங்களான கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், உள்ளாறு, செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர் அணைத்திட்டம், முல்லைப் பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, சிறுவாணி, பாம்பாறு, பவானி ஆகியவை கேரள மாநிலத்தோடு உள் நதிநீர்ப் பிரச்னைகள்.
x. காவிரி, ஒகேனக்கல், தென் பெண்ணையாறு, பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி ஆகியவற்றில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களோடு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட படாதபாடுபட வேண்டி இருக்கிறது.
xi. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து,
xii. வைகை ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கலந்து மாசுபடுகிறது
xiii. கேரள எல்லையில் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் குறித்தும், ஓவேலியில் வாழும் தமிழர்கள் பிரச்னைகள் குறித்தும் தீர்க்கப்படாமலே இருக்கின்றது.
2. சுற்றுச் சூழல்
i. புதுக்கோட்டை - நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் விவசாயத்தை பாதிக்கக்கூடிய வகையில் வளமான மண்ணிலிருந்து எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வடகே சீர்காழியிலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் நிறைவேற்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிப்பது மட்டுமல்லாமல் விவசாயமும் பொய்த்து போகும்.
ii. கூடங்குளம்
iii. ஆலங்குளம் சிமெண்ட் ஆலை (சிவகாசி)
iv. ஸ்டெர்லைட்
v. பிளாச்சிமடா
vi. நியூட்ரினோ திட்டம் அடாவடியாகத் தேனி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.
vii. திருவண்ணாமலை கௌந்திமலை - வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது வெட்டி எடுக்க பண்ணாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கும் உரிமங்களை வழங்கப்படக் கூடாது.
viii. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரும்மலை, ரெங்கமலை அருகே, உலோகங்கள் எடுக்கும் திட்டத்தினால் அப்பகுதி விவசாயமே பாதிக்கப்பட்டுள்ளன.
ix. மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு ஆபத்து?
x. கொங்கு மண்டல விவசாயிகளைப் பாதிக்கும் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கைவிடாமல் மத்திய அரசு விதண்டாவாதம் செய்கிறது.
xi. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை தடுப்பது.
xii. மலைகளிலும், பூமியிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து சூறையாடுவதை தடுக்க வேண்டும்.
xiii. தென் மாவட்டக் கடற்கரை ஓரங்களில் தாது மணல் கொள்ளையைத் தடுக்கவும், கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி தாது மணல் ஆலையைப் புதுப்பிக்கவும் மத்திய அரசு முயலவில்லை.
xiv. தமிழக எல்லையில் கேரள மாநில கோழி, மாட்டு இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன. கணினிக் கழிவுகளும் தூத்துக்குடி போன்ற துறைகளிலிருந்து வந்து கொட்டப்படுகின்றன இதையெல்லாம் மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருக்கின்றது.
xv. மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுக்காத்து, அங்குள்ள விலங்கினங்களை பாதுகாப்பையும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
xvi. பரம்பிகுளம், முண்டன்துறை, காளக்காடு புலிகளின் காப்பகங்களில் சரியாக பராமரிப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் யாவும் சரியாக இங்கு நடைமுறைக்கு வரவில்லை.
xvii. கடலில் மூழ்கும் தமிழக தீவுகள்
3. தொழிற்கூடங்கள், மின் திட்டங்கள்
i. முடங்கிய தமிழகம்
ii. நெய்வேலியில் என்.எல்.சி. பிரச்னை முடிவுக்கு வராமல் தொடர்கதையாக உள்ளது. தமிழகத்திற்கு நெய்வேலியிலிருந்து கூடுதலாக மின்சாரமும், அதிகமான ராயல்டியும் பெற வேண்டும்.
iii. செய்யூர் மின்உற்பத்தி திட்டம் நடைமுறைப்படுத்தல்
iv. உடன்குடி அனல்மின் நிலையம் கேள்விக்குறியா?
v. பசுமை கூடிய மின் உற்பத்தி திட்டங்கள்
vi. விவசாயத்திற்கு முழுமையான சூரிய சக்தி மின்சாரம்
vii. சேலத்தில் உள்ள இரும்பாலை விரிவாக்கம் செய்யப்படாமலே உள்ளது. அது உருக்காலை அல்ல. வெறும் உலோக உருட்டாலை என்ற அளவில் தான் இருக்கிறது. சேலத்தில் தயாராகும் எவர்சில்வர் தகடுகளுக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல மதிப்புள்ளது. ஆனால், மத்திய அரசு சேலம் இரும்பாலையை மேம்படுத்தாமலே உள்ளது.
viii. சேலம் அருகே செயல்பட்டு வந்த, மேக்னசைட் சுரங்கம், 1,150 கோடி ரூபாய் நில வாடகை, சுற்றுச்சூழல் சான்று பெறுதல் விவகாரத்தால்மூடப்பட்டுள்ளது.
ix. உதகை ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை கிட்டத்தட்ட மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.
x. திருப்பெரும்புதூர் நோக்கியா ஆலைத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் அதன் கதவுகள் மூடப்பட்டு ஆந்திரா தடாவுக்கு சென்றுவிட்டது.
xi. சிவகங்கையில், கிராஃபைட் தொழிற்சாலை துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
xii. பொன்விழா ஆண்டில் பூட்டு?- இழுபறியில் இந்துஸ்தன் போட்டோ ஃபிலிம் நிறுவனம்
xiii. ஆண்டுக்கு ரூ.1.5 கோடி லாபத்தில் இயங்கும் கோவை அச்சகத்தை மூடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு: வடமாநில அச்சகத்தை மேம்படுத்தும் நடவடிக்கை என தொழிலாளர்கள் புகார்
xiv. (CIPET) மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு இடமாற்றம் செய்தது.
xv. கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நெசவு ஆலைகள், பணியன் ஆலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. அவற்றைப் புனரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
4. அகழ்வாராய்ச்சி 68
i. திருநெல்வேலி அருகே நாகரிகத் தொட்டிலான ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கையைப் பத்தாண்டுகளாக மத்திய கலாசார அமைச்சகம் வெளியிடவே இல்லை.
ii. மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழராய்ச்சி பணிகளை மத்திய அரசு முடக்கியதைக் குறித்து. கீழடி, ஆதிச்சநல்லூர் மட்டுமில்லாமல் காவேரி பூம்பட்டினம், கங்கைகொண்ட சோழபுரம், அழகன் குளம், புதுவை அருகே உள்ள அறிக்கைமேடு
5. தொல்பொருள்
i. ஆலயங்களின் மேம்பாட்டிற்காக நிதி ஆதாரத்தினை மீட்டெடுத்தல்.
ii. தமிழகத்தின் தொல்பொருள் பாரம்பரிய நினைவுச் சின்னங்களான சித்தன்னவாசல், கழுகுமலை வெட்டுவான் கோவில், மாமல்லபுரம், திண்டுக்கல், மலைக்கோட்டை, யானை மலை, ஆகிய இந்த இடங்களில் உள்ள சிற்பங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
iii. இந்திய, தமிழக வரலாறுகள் மறு ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் ஒரு முறை எழுதப்பட வேண்டும். அந்த வரலாறு, தமிழகத்தின் கலாச்சார பழமையைக்கருத்தில் கொண்டு, சங்க காலம், கபாடபுரக்காலத்தில் இருந்து துவங்கி, எழுதப்பட வேண்டும். பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப்போராடிய பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, விருப்பாட்சி கோபால் நாயக்கர், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் போன்றோரின் வரலாறுகளை அது உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
iv. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்கப்பட்டும், உரிய நிதி ஆதாரங்கள் வழங்கப்படாமல் காலம்தாழ்த்தப்படுகின்றன.
6. சாலைத் திட்டங்கள்
i. கிழக்குக் கடற்கரைச் சாலை முழுமை அடையவில்லை.
ii. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது திட்டம்
iii. டோல்கேட்டின் பகல் கொள்ளை நிறுத்த வேண்டும்.
7. இரயில்வே திட்டங்கள்
i. அகல ரயில் பாதைத் திட்டம்கூட ஆமை வேகத்தில்தான் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கு வந்தது. இன்னும் செங்கோட்டை - புனலூர் கொல்லம் மார்க்கம், மதுரை - போடிநாயக்கனூர் போன்ற திட்டங்கள் மிகவும் தாமதப்படுத்தப்படுகின்றன.
ii. செங்கோட்டை - புனலூர்
iii. மதுரை - போடிநாயக்கனூர் ரயில் மார்க்கம்
iv. திண்டுக்கல் – பழனி வழியாக கேரளம்
v. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளன.
vi. நாங்குநேரியில் இரயில் இன்ஜின் தொழிற்சாலை திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
8. விமான நிலையங்கள்
i. விமான நிலைய விரிவாக்கம்
ii. மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வளைகுடா நாடுகளிலிருந்து விமான சேவை வேண்டுமென்று நீண்ட காலமாக வற்புறுத்தியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது மத்திய அரசு.
iii. தூத்துக்குடி விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான முனையமாக மாற்றும் திட்டமும் நிலுவையில் உள்ளது.
iv. ஓசூர் விமான நிலையத்தை செயல்படாமல் கர்நாடகம் முடக்க நினைக்கின்றது.
v. பயன்பாட்டில் இல்லாத கோவில்பட்டி, கயத்தாறு, செட்டிநாடு, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, சோழவரம், வேலூர் விமான நிலையங்களில் வான்வெளி ஆராய்ச்சியோ, விமானப்படை தளங்களோ மத்திய அரசு அமைக்க வேண்டும்.
9. கடல் போக்குவரத்து
i. சேது சமுத்திரத் திட்டம் 160 ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டுவிட்டது.
ii. சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், கொல்கத்தா வரை தென்முகமாக தூத்துக்குடி, கொழும்பு, அந்தமான், சிங்கப்பூர் வரை செல்லும் கப்பல் போக்குவரத்து மார்க்கங்களை துவங்க வேண்டும்.
iii. 1980-களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட, மரக்காணத்திலிருந்து சென்னை வழியாக ஆந்திரம், பெத்தகஞ்சம் வரை 420 கி.மீ. தொலைவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தும் நடைமுறைக்கு வரவில்லை.
iv. நீர்வழிப் போக்குவரத்து திட்டங்கள் கேரளத்தைப் போல தமிழ்நாட்டில் நான்கு திட்டங்கள் நிலுவையில் உள்ளது.
v. உள்நாட்டு நீர்வழி தடமாகுமா, பக்கிங்ஹாம் கால்வாய்.
10. துறைமுகங்கள்
i. கடலூர், நாகை, திருக்குவளை, குளச்சல், துறைமுகத் திட்டங்கள் பல ஆண்டுகளாக ஏட்டளவில் உள்ளன.
ii. சுமார் 10-க்கும் மேலான மீன்பிடித்துறைமுகத் திட்டங்கள் மத்திய அரசிடம் தூங்குகின்றன. குறிப்பாக வானகிரி, திருக்கடையூர், மாமல்லபுரம், மூக்கையூர், வாலிநோக்கம், திருசோபுரம், சிலம்பிமங்கலம், காட்டுப்பள்ளி, பாம்பன் இராமேசுவரம், புன்னைக்காயல், மணப்பாடு, கன்னியாகுமரி, போன்ற பல துறைமுகத் திட்டங்கள்
iii. குளச்சல் – இணையம் துறைமுகம்
11. நீதிமன்றங்கள் (19.12.2016)
i. உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் துவங்க வேண்டும்.
ii. வடமாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தியும், குஜராத்தில் குஜராத்தியும் வழக்காடு மொழியாக இருப்பது போல, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரிக்கை எழுப்பியும் அதை மத்திய அரசு இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
iii. அந்தமானில் வாழும் தமிழர்களுடைய வழக்குகள் யாவும் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய சூழ்நிலை மாற வேண்டும்.
12. கச்சத்தீவு (19.12.2016)
i. தமிழர் பூமியான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துவிட்டு, கச்சத்தீவு இலங்கைக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்கிறது மத்திய அரசு.
ii. மீனவர் பிரச்னையில் இலங்கை இராணுவத்தின் அத்துமீரலை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஆயிரங்கணக்கான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
iii. ஈழத்தமிழர் பிரச்னையை மத்திய அரசு தலையிட்டு அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீர்வு எட்டப்பட வேண்டும்.
13. கல்வி
i. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைய வாய்ப்புகள் இருந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.
ii. தென் மாவட்டங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகம் அமைய வேண்டும்.
iii. நீட்தேர்வு கூடாது.
14. விவசாயம்
i. விவசாயம் போற்றுவோம்; உழவுத்தொழிலே உன்னதமான தொழில். அது நம் உயிர் காக்கும் தொழில். ஆனால், தமிழகத்தில் விவசாயிகளின் நிலை என்ன?
ii. விவசாயத்தையும், நீர்நிலைகளையும் பாதிக்கச் செய்யும் கருவேல மரங்களை அறவே ஒழிக்க மத்திய அரசு நிதி உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.
15. இந்தியப் பெருங்கடல்
i. டீக்கோகார்சியா
16. விண்வெளி ஆய்வுத் திட்டங்கள்
i. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
ii. நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவ எரிவாயு தொழில்நுட்ப மையத்தை உடனடியாக அமைக்கவும் மத்திய அரசிடம் முயற்சிகள் இல்லை.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
22-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...