சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயிருடன் இருப்பவர்களுக்கு கட்அவுட்டுகள் வைக்க தடை விதித்துள்ளது. போக்குவரத்துக்கு இடையூராக பதாகைகள் வைக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் உள்ளது. பொதுவாழ்வில் தங்களை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும் சிலர் தகுதி அற்றவர்களுக்கு பதாகைகள் வைப்பதும், சுவரொட்டிகள் ஒட்டுவதும், சுவர் விளம்பரங்கள் வரைவதும், வானுயர கட்-அவுட் வைத்தும் தன்னை அரசியல்வாதியாக முன்னிறுத்திக் கொண்டனர். காக்காய் பிடிக்கவும், தன்னைத்தானே விளம்பரம் செய்துக் கொள்ளவும் இவ்வித
செயல்களில்ஈடுபட்டுவந்தனர்.இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பும், மக்களையும் முகம் சுளிக்க வைத்தது. இதனால் சமூக விரோதிகளும் பெரிய
மனிதர்களாக காட்டி கொண்டனர்.
இதுபோன்ற கட்-அவுட் கலாச்சாரங்கள், பேனர்கள், பதாகைகள், சுவர் விளம்பரங்கள் தமிழகத்தில் மட்டுமே அளவு கடந்து உள்ளது. இந்தியாவில் வேறெங்கும் இவ்வாறாக இருப்பதாக தெரியவில்லை. அமெரிக்க தனது 225வது சுதந்திர தினத்தை கொண்டாடியதை நேரில் கண்டேன். அத்தனை பெரிய கொண்டாட்டத்திற்கு கூட இவ்விதமான விளம்பரங்கள் இல்லை.
தேர்தலில், ஹஜ்பூரில் போட்டியிட்ட எனது நண்பர் ராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு பெரிய சுவரொட்டிகள் சிவகாசியில் அச்சடித்து , டெல்லி வழக்கறிஞர் ஜேம்ஸ் மூலம் அனுப்பி வைத்தேன்.அந்த சுவரொட்டிகள் பிகாரில் ஒட்டப்பட்டன. அதனைக் கண்ட முன்னாள் பிரதமர் சரன்சிங் அவர்கள் " என்ன இது தமிழக கலாச்சாரம் இங்கு வந்து விட்டதா?" என பஸ்வான் அவர்களை கேட்டதாக தகவல் உண்டு. வடநாட்டை பொறுத்தவரை A4 அளவுள்ள பிரசுரங்கள் மட்டுமே அச்சடித்து வினியோகிப்பார்கள். அதைதான் விளம்பர சுவரொட்டியாக அங்கு ஒட்டப்படும் .அவர்கள் இதனை எல்லாம் விரும்பவில்லை. ஆனால் தமிழகத்தில் பேனர்கள், பொருந்தாத புகழ் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் பதாகைகள் இல்லாமல் விழாக்கள் நடப்பதை அரசியல்வாதிகள் மட்டுமின்றி சினிமாத்துறையினர்கூடவிரும்பவில்லைஇதனால் என்ன பயன்? அச்சட்டிக்கும் அச்சகங்கள், டிஜிட்டல் ப்ரிண்டர்ஸ் மட்டுமே பலன் பெறுகின்றார்கள். மற்றபடி ஆக்கபூர்வ பலன் இருக்கின்றதா என்றால் ஒரு பயனும் இல்லை.
தலைவர்கள் என்பவர்கள் தங்களது செயல்களால் தலைநிமிர்ந்து பார்க்கப் பட வேண்டுமே தவிர உயிரற்ற கட்டைகளால் செய்யப்படும் கட்-அவுட்களை உயரத்தில் கழுத்து வலிக்க வைப்பதில் இல்லை. அவ்வாறு பார்ப்பதால் முகம் சுளிக்க வைக்கும்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
25-10-2017
No comments:
Post a Comment