Sunday, October 8, 2017

வாழ்க்கை வினோதமானது.

வாழ்க்கை வினோதமானது. எதிர்பாராத விதங்களில் பல விஷயங்கள் நிகழ்கின்றன. எதிர்பார்ப்பினால் மட்டும் எந்த பிரச்சினையையும் தீர்த்துவிட போவதில்லை. பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒருவருக்கு எல்லையற்ற இணக்கமும் மன ஒருமையும் தேவை. 

வாழ்க்கை, கூரியதோர் கத்திமுனை. மிகுந்த கவனத்தோடு இணக்கத்துடன் கூடிய விவேகத்தோடும் வாழ்க்கைப் பாதையாம் கத்தி முனையில் நடத்திட வேண்டும்.

வாழ்க்கை என்பது அதன் போக்கில் தான் செல்கிறது. என்னதான் கடமை தவறாமல் நேர்கோட்டில் பயணித்தாலும் நடப்பது தான் நடக்கும். இது தான் யதார்த்தம். உதாரணத்திற்கு தமிழகம்.
நம் கண் முன்னே தமிழகத்தில் நடக்கின்றது. முதலமைச்சராக பல தகுதிகளும், உழைப்பும், சீரிய களப்பணி நீண்ட உழைப்பு எனப் பல நிலைகளில் உயர வேண்டிய அவசியம் இப்போது இருப்பதில்லை. தான் முதல்வராவோம் என்று நினைத்திராதவர்கள் இன்று முதல்வர் ஆகிவிட்டனர். இன்னும் பலர் முதல்வர் கனவில் உள்ளனர். இப்படியான நிலை.

ஆம்!வாழ்க்கை என்பது நாடக மேடை.
இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை எல்லோரும் நடிக்கின்றோம் நாம்எல்லோரும் பார்க்கின்றோம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-10-2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...