Monday, October 23, 2017

தொலைக்காட்சி தொடர்கள்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சந்திர நந்தினி என்வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகிறது. அதில் ஒரு காட்சியில் நாம் இப்போது பயன்படுத்துகின்ற பேப்பர் தாளை படிப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. மௌரிய பேரரசின் சந்திர குப்தர் ஆட்சிக் காலத்திலும் - சாணக்கியர் காலத்திலும் இன்றைக்கு பயன்படுத்துகின்ற எழுதும் தாள்கள் வழக்கத்தில் கிடையாது.

அன்றைக்கு சுவடிகளும், எழுதுவதற்கென பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டுத் துணிகளில் தான் செய்திகள் எழுதப்படும். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தொடரில் அரண்மனையில் ஹிந்தியில் பேனாவால் எழுதப்பட்ட தாளை காட்டும் போது வரலாற்றைக் கூட அறியாத தொலைக்காட்சி தொடரின் பொறுப்பாளர்களுக்கு கவனம் வேண்டாமா? தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் அதை குறித்தான பொறுப்பு வேண்டாமா?

மக்களுக்கு தொலைக்காட்சியில் எதைக் காட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள் என மக்களை பைத்தியக்காரர்களாக எண்ணும் ஊடகங்கள் இருக்கையில் என்ன செய்ய முடியும்?

நாடும் மக்களும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தாலே போதும். வேறெதுவும் கவனிக்க வேண்டியதில்லை என்ற மனப்பான்மையில் சமூக வாழ்க்கையே அழிந்து வருகிறது.

#தொலைக்காட்சி_தொடர்கள்
#TV_Shows
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

24-10-2017

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...