Monday, October 2, 2017

சிலம்புச்செல்வர் மா.பொ.சி.

சிலம்புச்செல்வர் மா.பொ.சி.அவர்கள்
---------------------------------
தற்கால இளைஞர்களுக்கு சிலம்புச்செல்வர்மா.பொ.சி.அவர்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய தமிழகத்தின் சென்னை, திருத்தணி, மற்றும் தமிழகத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள, தமிழர்கள் அதிகம் வசிக்கும் முக்கியமான
கிராமங்கள், இன்று தமிழ் மாநிலத்துக்குச் சொந்தமாக இருப்பதற்கு, மா.பொ.சி.அவர்களின் போர்க்குணம் நிறைந்த உரிமைப் போரட்டங்கள்தான் காரணம். ஆனால், காலப்போக்கில், மா.பொ.சி.யின் தியாகங்கள் தமிழர்களால் மறக்கப்பட்டு விட்டன.காலப்போக்கில் ஏற்பட்ட தமிழர்களின் "முரண்-அரசியல் மோகம்" காரணமாக, ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கட்சியும் கரைந்துபோயிற்று. விளைவு...! தமிழக அரசியலில், தியாக சீலர்களுக்கு இன்றளவுவரை இடமில்லை. மாறாக, சில மத்தாப்பு அரசியல் வாதிகளை மட்டுமே அரவணைத்துக் கொள்கிறது...!!!

(முக நூலில்,சிலம்புச்செல்வர் மா.பொ.சி.அவர்களைப் பற்றி தஞ்சையை சார்ந்த ஒருவரின் பதிவு)

#மாபொசி.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
02-10-2017

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...