காவிரி மேலாண்மை குழு விசயத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடுவது யார்.
பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.
—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�—�
இதுகுறித்த வழக்கில் உச்சநீதி மன்ற நீதிபதி " காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது தானே, ஏன் கால தாமதம் செய்கின்றீர்" என கேள்வி எழுப்பிய போது அமைக்கின்றோம் என உப்பு சப்பில்லாத பதிலை அளித்துவிட்டு வந்தது மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம்.
காவிரி நதிநீர் பங்கீடு குறித்து பிரதமருக்கும், கேபினேட் செயலாளருக்கும் நான் அனுப்பிய கடிதத்தங்களுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி எந்த அளவில் இருக்கின்றது என்ற வினாவிற்கு பதிலை பெற்றேன். கிடைக்கப்பெற்ற பதிலில் " வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்" என பதில் அளித்துள்ளது நீர்வள அமைச்சகம்.
இதிலிருந்து இவர்கள் உச்சநீதி மன்றத்தில் ஒருவாறும், அரசு நடவடிக்கைகள் அதற்கு எதிராகவும் காலத்தை போக்குகின்றனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.
இந்த அக்கறை தமிழகத்தை ஆளும்கட்சிக்கு இருப்பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் கேள்வி எழுப்பலாம். யாராவது இதுகுறித்து கேள்வி எழுப்புவது உண்டா? நாசமாக போகட்டும் நாடு என நம்மாளும் உதறி விட்டு செல்ல முடியல.
தமிழகத்தின்உரிமைகள்பறிபோகின்றன.அறிக்கைகள்,போராட்டங்கள்-ஆர்ப்பாட்டங்களை தாண்டி புதிய போர் குணம் வேனடும்.
இது குறித்துதான மத்திய அரசின் பதில் கடிதமம், இணைக்கப்பட்டதுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-10-2017
No comments:
Post a Comment