Friday, October 6, 2017

மனம்

நமக்களிக்கப்பட்ட பொறுப்பை செவ்வனே செய்து முடிப்பதற்குள் எத்தனை இடையூறுகள் வந்தாலும், அது நம் சுயமரியாதையை சீண்டி வம்புக்கிழுத்தாலுமேகூட பொறுப்பை செவ்வனே செய்து கொடுத்து விடுவது என மனம் என்கின்றது.
................
நம்பிக்கை மிகச்சிறந்த ஆயுதம். அதை தவறான இடங்களில் செலுத்தி வீணடிக்காதீர்கள். சக்தி உங்களிடம் தான் இருக்கிறது. அதை புறவயமாக செலுத்தாமல் அகவயமாக செலுத்தி வெற்றி காணுங்கள்.
..................

பொய்களைச் சுமந்து
சகஜமாகத்தான் வருகிறீர்கள்.
அதில் வெற்றியையும் ஈட்டியும் விடுகிறார்கள்.
எதிர்கொள்ளும் திராணியற்று
நாம்தாம் துவள்கிறேம்.
.....................
அனைவருக்கும் நல்லவராய் இருப்பது மிகவும் எளிதே; அதற்கு எதையும் காதில் போட்டுக் கொள்ளாமலும், நன்றாக நடிக்கும் திறமையும் இருக்க வேண்டும் ...

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
06-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...