இன்றைய முக்கிய செய்திகள். வாசிப்பது தமிழக ஊடகங்கள்.
❗️நடிகர் கமல் எண்ணூர் கடற்கரையில் ஆய்வு.
❗️நான் பச்சோந்தி அல்ல- செங்கோட்டையன்.
❗️ஜெ.தீபா போலிசில் புகார்.
❗️த்ரிஷா ஒப்புக்கொண்ட படத்தில் இருந்து விலகினார்.
❗️நடிகை குஷ்பு எலும்புமுறிவு ஏற்பட்டு சிகிச்சை பெறுகின்றார்.
காலமாக காலமாக நாட்டுக்கு உழைத்த இந்த நல்லவர்களின் செய்திகள் இன்றைய மிகவும் அவசியமான முக்கிய செய்திகள்.ஊடகங்கள் சொல்கின்றன.
இவைகள் தான் இன்றைய ஏடுகளின் முதல்பக்கத்தை ஆக்கிரமித்து இருக்கும் செய்திகள்.
இவை நாட்டை வாட்டும் முக்கிய பிரச்சனைகளாக சொல்லப்பட்டுள்ளன. பலமுறை முயற்சிகள் மேற்கொண்டு பிரதமர் , நீர்வளத்துறை அமைச்சர், மத்தியகேபினேட்செயலாளர்ஆகியோரிடம் மற்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வினா எழுப்பி கடிதம் கொடுத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி எந்தளவில் உள்ளது,தேசிய நதிகள் நீர் இணைப்பு என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வினா எழுப்பி கிடைக்கப்பெற்ற பதில்களை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தேன். அதில், தமிழகம் பாதிப்புக்கு உட்பட்ட இதுவரை நமது கவனத்திற்க்கு வரா தகவல்கள் இருந்தன. அதை கூட வெளியிட ஆர்வம் இல்லை.
ஆங்கில The Hindu ,தி இந்து, தினகரன் ஆகிய ஏடுகளிலும் காட்சி ஊடகமான, புதிய தலைமுறை,தந்தி ஆகியவை மட்டுமே காணொளி செய்தியாகவும் வெளியிட்டன. மற்ற ஊடகங்கள் கவர்ச்சி செய்திகளை கவர் செய்துள்ளன. வெட்டி விவாதங்கள்தான் நடக்கின்றன.
காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் இணைப்புக் குறித்து அக்கறை உடன் செயல்படாத இந்த ஊடகங்கள் நாளை தேர்தல் வரும் போதுஅரசியல்வாதிகளை விமர்சித்து தனது பக்கங்களை நிரப்பிக் கொள்வர்.
நான்காம் தூணாக இருக்க வேண்டிய ஊடகம் இப்படி தடுமாறுகின்றன. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்னாடகாவில் நாட்டின் முக்கியப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து பிரசுரிக்கின்றன.மக்களைமுட்டாள்
களாக வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவது சில அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஊடகங்களும் தான். இந்த நிலையை பார்க்கும் போது பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் " போங்கடா போக்கற்ற பசங்களா போங்க" வரிகள் நினைவுக்கு வருகின்றது.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
29-10-2017
No comments:
Post a Comment