Friday, October 20, 2017

இந்தியாவில் வெள்ளமும், வறட்சியும்

இந்த வரைபடம் ‘Down to Earth’ மாதமிருமுறை சுற்றுச் சூழல் இதழில் (1-15 அக்) 2017 பதிப்பில், இந்தியாவில் 265 மாவட்டங்களில் அளவுக்கதிகமான வெள்ளப்பெருக்கும், 238 மாவட்டங்களில் கடுமையான வறட்சியும் நிலவுகின்றது என்று புள்ளி விவரங்களோடு காட்டுகிறது. ஒரு பக்கம் வெள்ளப்பெருக்கு ஒரு பக்கம் வறட்சி. இந்த நிலையில் தான் வெள்ளமான நீரை வறட்சி பக்கம் திருப்பி நதிகளை இணைக்கவேண்டும் என்று தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தேன். இதே நிலைமை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை தொடருகிறது. இந்த சூழல்களை எல்லாம் மனதில் கொண்ட பிரிட்டிஷ் பொறியாளர் சர் ஆதர் காட்டன் தலைமையிலான குழு நதிகள் இணைப்பு குறித்து பரிந்துரையும் செய்தது.


#நதிகள்_இணைப்பு
#வறட்சி
#வெள்ளம்
#Drought
#Floods
#Networking_of_Rivers
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
19-10-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...