Thursday, October 19, 2017

பிரிட்டிஷ் நாடாளுமன்றம்

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் உலகத்தின் தாய் நாடாளுமன்றம் ஆகும். இங்கு House of Common (மக்கள் அவை) மற்றும் House of Lords (பிரபுக்கள் அவை) என்று இரு அவைகள். இதை பின்பற்றியே இந்தியாவில் மக்களவை மாநிலங்களவை என்று அமைந்துள்ளன.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் இருக்கைகள் அதனுடைய இருக்கைகள், அதனுடைய இலச்சினை அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்கும். இதை முந்நூறு ஆண்டுகளாக பிரிட்டனில் கடைபிடிக்கிறார்கள். இம்மாதிரியான நடைமுறைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இதை பின்பற்றுகின்றன. மக்களவைத் தலைவர், மாநில சட்டமன்ற பேரவைத் தலைவர் இருக்கையும், அவை உறுப்பினர்களின் இருக்கைகளிலும் பச்சை நிறமே பிரிட்டிஷ் நடைமுறையே பின்பற்றப்படுகிறது.


அதே போல மாநிலங்களவையும், மாநில சட்ட மேலவையும், அதை தலைமை தாங்கும் (குறிப்பாக இந்தியாவில் குடியரசுத் துணைத் தலைவர் இருக்கை) தலைவர் ஆகியவை சிகப்பு நிறத்தில் இருக்கும். இதை ஆங்கிலத்தில் ஆடம்பர சிகப்பு (Luxurious Red) என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அழைக்கப்படுகிறது. 

இதையே இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பாகிஸ்தான் போன்ற பல உலக நாடுகள் இந்த சிகப்பு நிறத்தினை நாடாளுமன்றத்தின் மேலவைக்கு அடையாளமாக பின்பற்றுகின்றன. அனைத்து முத்திரைகளும், அடையாளங்களும், இலச்சினைகளும் இந்த நிறத்தில் தான் கையாளப்படுகின்றன.



இவையனைத்தும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு 2012ல் சென்றபோது அறிய முடிந்தது. இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் வந்த போதெல்லாம் தடைகள். ஆனால் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அங்கமான கமிட்டி அறையில் உரையாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதை எவராலும் தடுக்க முடியவில்லை. தாய் பாராளுமன்றத்திலே அடியேன் பேசியது இன்றைக்கும் யூ டியூப்பில் (You Tube) ஆதாரமாக இருக்கின்றது. நமது நாடாளுமன்றத்தில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இந்த தடைகள் தாண்டி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் கிடைத்த வாய்ப்பு பெரும் பேறாக இன்றைக்கும் மகிழ்ச்சியோடு உணர்கின்றேன்.



இந்தியாவில் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கு பிரதிநித்துவம் எண்ணிக்கையில் வித்தியாசப்படும். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறிய மாநிலமோ பெரிய மாநிலமோ சமமான அளவில் உறுப்பினர்கள் மேலவைக்கு பிரதிநிதித்துவப்படுவது நடைமுறையாகும்.



Many members of the #HouseofLords are active in their careers. Members include (current and former) doctors, soldiers, teachers, business people, people who work in film, TV and theatre, scientists, technology experts, judges and lawyers, using their professional experience to give a #secondopinion in Parliament.



The UK House of Lords chamber includes seating for the three main political parties, as well as around 200 members who do not support any political party: the Crossbenchers. Compromise and consensus with the Crossbenchers is often important as no party has a majority in the Lords.



The UK House of Commons benches are green in colour, a custom which goes back 300 years. Rebuilt after World War Two, Commonwealth countries helped with the cost of materials for the new Chamber: Australia the Speaker’s Chair, Canada the Table of the House, and India and Pakistan the entrance doors.



#House_of_commons
#House_of_lords
#British_parliament
#பிரிட்டன்_நாடாளுமன்றம்
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

19-10-2017

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...