*புகுந்த வீடான தமிழகத்திற்கு பெரு ஓட்டத்தோடு ஓடி வந்தாய் ! வாழ காவேரி!! *
பல ஆண்டுகளுக்குப் பின்பு காவிரியில் இவ்வளவு வெள்ளப் பெருக்கை பார்க்க முடிகிறது- ஆடிப் பெருக்கிற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்தது எல்லாம் உண்டு.
மேட்டூர் அணை கட்டப்பட்டு, 83 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 38 முறை மட்டுமே அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இறுதியாக, கடந்த 2013இல் அணை நிரம்பியது. தற்போது 39வது முறையாக நிரம்பியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பாசனம், குடிநீர் கிடைக்கும் .
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 2013க்குப் பிறகு ஒரு போக நெல் சாகுபடி மட்டுமே நடந்து வந்தது. இந்த ஆண்டு இது இரு போக சாகுபடிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
#மேட்டூர்_அணை
#காவிரி_ஆறு
#Cauvery_River
#Mettur_Dam
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-07-2018
No comments:
Post a Comment