Monday, September 3, 2018

சென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60


Image may contain: skyscraper, tree, sky and outdoor

சென்னை எல்ஜசி கட்டிடத்திற்கு வயது 60
------------------------------
சென்னையின் அதிசயமாகவும் அடையாளமாகவும் திகழ்ந்த எல்.ஐ.சி கட்டிடம் இன்றைக்கு சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. அதை விட பன்மடங்கு உயரமான பல கட்டிடங்கள் எழும்பிவிட்டன. இருப்பினும் சென்னைக்கு வந்தால் 1960 காலக்கட்டங்களில் எல்.ஐ.சி கட்டிடமும், சாந்தி திரையரங்கமும், மூர் மார்க்கெட்டும், அன்றைக்கு அதிசயங்களாக திகழ்ந்தன. ஆனால் அவை இன்றைக்கு இல்லை. 
பழைய திரைப்படங்களில் சென்னையின் அறிமுகத்திற்கு காட்டப்படும் அடையாளங்களில் சென்னை சென்டிரல் இரயில் நிலையத்தை அடுத்து, அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டிடம் மிகவும் பிரபலமான கட்டிடமாகும். இதன் கட்டுமானப் பணிகள் 1953வது ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. அன்றைய காலத்தில் இந்தியாவின் உயரமான கட்டிடமாக இதுவே திகழ்ந்தது. இந்த கட்டிடம் சிதம்பரம் செட்டியாரால் யுடைடெட் இந்தியா மற்றும் நியு கார்டியன் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்காக கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 14 மாடிகள் உள்ளது. சென்னையின் பிரதான அடையாளமாக திகழும் இந்த கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த வடிவமைத்தனர். 
இந்த கட்டிடத்தின் தூண்கள் அமைக்க குழி தோண்டிய போது பாறை வரை தோண்டப்பட்டு அங்கிருந்து கடக்கால் போடப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்காக 1000 டன் இரும்பு மற்றும் 3 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
03-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...