அறுவடை காலத்துல பாத்தா ஊரைச்சுத்தி களங்கள் தானிருக்கும்.எங்கூர்ல பெரும்பாலான வெவசாயம் தானிய வகைகள் தான்.அதுல முக்கியமான உணவு பயிர்ல நெல் கெடையாது. வரகு,கம்பு,கேப்பை,சோளம் தான் முதன்மையாயிருக்கும்.அப்புறம் தெனை,குதிரை வாலியுமிருக்கும்.
இப்ப களத்துக்கு எல்லாப்பயிரும்
அறுவடையாகி மாட்டு வண்டிகள் மூலமா
வந்து சேரும்.ஒரு நா ரெண்டு நா லேசா
பரத்தி விரிச்சி காயவிடுவாக.பெறகு
பெனையடிப்பாக.போரடிக்குறதுன்னு
சொல்வாகல்ல " மாடு கட்டி போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று யானை கட்டி போரடித்தது எங்க நாடு" ன்னு சொல்றதுண்டுல்ல.இந்த போரடிக்குறத தான் நாங்க பெனையலடிக்கிறதுன்னு சொல்றது.
கம்மங்கருதுகளையோ,கேப்பைக்கருதுகளையோ,சோளக்கருதுகளையோ கருதா
வெட்டியெடுத்து களத்துக்கு கொண்டு வருவோம்.வரக நெல்லு மாதிரிதான் தாளோடு அறுத்து வந்து களத்துல போட்டு
காய வச்சி களத்து பரப்புக்கு ஏத்தா மாதிரி மூனு ஜோடி மாடு நாலு ஜோடி மாடுகள வச்சி வட்டமா சுத்தி வர விடுவோம்.அதுக்கு
மாட்டுக்கு ஒரு வாக்கூடு கட்டி வாய தெறந்து எதை இழுத்து திங்க முடியாத படி வாய்ல கட்டி விடுறது தான் அந்த வாக்கூடு.
இந்த வரக போரடிக்குறதெல்லாம்
பெரும்பாலும் ராவுல குளுந்த நேரத்துல
லாந்தர் வெளக்கு வெளிச்சத்துலயே
விடிய விடிய மாட்ட ஓட்டி அடிப்பாக. மாடுக முன்னால பின்னால ரெண்டு
பேரு வைக்கல தொழிக்கம்ப வச்சி
பொறட்டி விடுவாக.மாடு அதுல ரன்னிங்லயே சாணிய போடும் அப்படியே அதுல தான் விழும்.ஆனா அது பின்னாடியே போய் நம்மாளுக கையில பிடிச்சி வெளியில போடுறதும் உண்டு.இதை நாங்க தூங்கமா
கூட வேடிக்கை பாக்குறது உண்டு.
டீத் தண்ணி போட்டுக்கொடுப்பாக மண்டை வெல்லத்தையும், டீத்தூளையும்
போட்டு அது ஒரு ருசி தான்.காலையில
மாட்டை வெலக்கிவிட்டு அப்புறம் வைக்கல அள்ளி ஓரமா போட்டா கீழே
தானிய மணிகலா கெடக்கும்.காயவிட்டு
தூத்தி எடுத்து களத்துலயே வேலையாட்களுக்கு தானியத்தையே கூலியா கொடுத்து மிச்சத்தை கோணி மூட்டையில போட்டு ரொப்பி தச்சி மாட்டு
வண்டியில தூக்கி போட்டு வீட்ல கொண்டு போய் சேக்குறது இருக்கே அதுக்கு என்னா பாடு .எத்தனை பேரு உழைப்பு .மனுசனோடு சேந்து மாடுகளுக்கும் தான்.இது மாதிரி ஒவ்வொரு பயித்துக்கும் இவ்வளவு பாடுக. வயித்து பாட்டுக்கு தாம் இந்தப்பாடு.
அப்புறம் சக வெவசாயிக எத்தனை கோட்டை தேந்துச்சின்னு வெசாரிப்புகளும்,
பதில்களும் அது ஒரு சந்தோஷ காலம்.
No comments:
Post a Comment