கவலை, நிச்சயமற்ற தன்மை, முற்றிலுமான தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, மரணத்தினால் துன்பம், தன்னை திருப்திப்படுத்த முடியவில்லை எனும் துன்பம், அங்கீகாரம் கிடைக்காததினால் வரும் துன்பம், ஒருவரை நேசித்து பதிலுக்கு நேசம் கிடைக்காததினால் வரும் துன்பம் என எண்ணற்ற ரூபத்தில் துன்பங்கள் உள்ளன.
துன்பங்களை புரிந்துகொள்ளாவிட்டால், முரண்பாடு, துயரம், அன்றாட வாழ்க்கையின் வேதனைகள் ஆகியவற்றிற்கு முடிவே இல்லை என தோன்றும் .....
நாம் மனதில் வெளிப்படையாக அறிகின்ற துன்பம், ஆழ்மனதில் மறைந்துள்ள அறியாத துன்பம், காரணமேதுமில்லாத துன்பம், உடனடி விளைவு உண்டாகாத துன்பம்.
பெரும்பாலோருக்கு மனதில் வெளிப்படையாக உள்ள புறத்துன்பம் என்னவென்று தெரியும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதும் தெரியும் – மத நம்பிக்கையின் மூலமோ அல்லது அதை அறிவுபூர்வமாக வாதங்களை முன்வைத்தோ அல்லது சில வகை போதை பொருட்களை பயன்படுத்தியோ அதிலிருந்து தப்பித்துக்கொள்வோம். புத்திபூர்வமாகவோ, வெளிப்புற செயல்களின் மூலமாகவோ, நமக்கு நாமே பல்வேறு சொற்களை கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தியோ, வேடிக்கை செயல்கள் செய்தோ, மேலோட்டமான பொழுதுபோக்குகளை கொண்டோ துயரத்திலிருந்து நாம் தப்பித்துக்கொள்வோம். நாம் இவை எல்லாவற்றையும் செய்வோம். அப்படியிருந்துமே மேல்மனதில் இருக்கின்ற துன்பத்தை போக்க நம்மால் முடியவில்லை.
துயரம், சோகம், கவலை எனப்படும் இந்த அசாதாரணமான காரியத்தை மனிதன் எப்போதும் வெல்வதற்கு முற்பட்டிருக்கிறான்; ஆனால், நாம் மேலோட்டமாகமகிழ்ச்சியடைந்தவர்களாக, நாம் விரும்பும் அனைத்தையும் வைத்திருந்த போதிலும்கூட, மனதின் ஆழத்தில், ஆழ்ந்த கீழ் அடுக்குகளில் துயரத்தின்ஆணிவேர்தொடர்ந்து
கொண்டு இருக்கிறது.
ஆக, நாம் துயரத்தை போக்குவதை பற்றி பேசும்போது, மேல்மனது ஆழ்மனது என எல்லா துயரங்களையும், முடிவுக்கு கொண்டுவருவதை பற்றியே பேசுகிறோம். துயரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு மிகத்தெளிவான, மிக எளிமையான மனது இருக்க வேண்டும். எளிமை என்பதை வெறும் ஒரு கருத்தாக கூறவில்லை.
எளிமையாக இருப்பதற்கு ஆழ்ந்த நுண்ணறிவும், கூரிய மென்மை உணர்வும் தேவைப்படுகின்றன.
No comments:
Post a Comment