Saturday, September 1, 2018

ஐ.நா.வில் நீண்ட உரையாற்றிய கிருஷ்ணமேனனை அறியாத நிலை.


.நா.வில் நீண்ட உரையாற்றிய கிருஷ்ணமேனனை அறியாத நிலை.
------------------------------------------------
.நா., பாதுகாப்பு மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக வி.கே.கிருஷ்ணமேனன் 1957இல் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவின் உரிமை குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றினார். தனது உரையின் முதல் நாள் 5 மணிநேரமும், மறுநாள் 3 மணி நேரமும் பேசியது; இந்த உரை தான் உலகளவில் .நா.வில் இதுவரை ஆற்றியதில் நீண்ட உரை என இன்று வரை நினைவு கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சராகவும், நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நேருவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கினார். இந்த அரிய புகைப்படம் 1957இல் .நா. சபைக்கு உரையாற்ற வந்தபோது எடுக்கப்பட்டது.  
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் யாரும் புரிந்து கொள்ளாத அளவில் வி.கே.மேனன் சாலை என்று பெயர் பலகையை பார்த்தேன்இதை குறித்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பதிவையும் செய்துள்ளேன். கோவைக்கும் வி.கே.கிருஷ்ணமேனனுக்கும் தொடர்புகள் இருந்தது. வி.கே.கிருஷ்ணமேனனின் ஆளுமையை தெரியாதவர்கள் இன்றைக்கு அதிகாரவர்க்கத்தில் இருக்கிறார்கள். என்ன செய்ய,

It’s a rare photo….

In 1957 when V.K. Krishna Menon of India gave what is said to be longest speech to the Security Council. He was reportedly hospitalized after 5 hours, but continued for 3 hours more the next day.

#UN
#V_K_Krishnamenon
#Kashmir_Problem
#_நா_சபை
#வி_கே_கிருஷ்ணமேனன்
#காஷ்மீர்_சிக்கல்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-09-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...