அற்புதமான புதுக்கவிதை தொகுப்பு கங்கைகொண்டானின்
‘கூட் புழுக்கள்’.அதன் வடிவமைப்பு,ஓவியங்கள் அருமையானவை; இந்த புத்தகத்தை, 1978 என்று நினைக்கிறேன், வானம்பாடி கவிஞரும் அன்பு நண்பர் கங்கைகொண்டானிடம் இருந்து வாங்கினேன். கங்கை நல்ல நண்பர், படைப்பாளி.சினிமா ஆசையால் பதவி,ஆஸ்தி,நண்பர்கள், உறவுகள், வாழ்க்கை , என்று அனைத்தயும் தொலைத்தவர்.
.1980 களில் இதை படிக்க எடுத்து சென்ற யாரோ ஒரு நண்பர். திரும்பத் தரவில்லை. 18 வது அட்ச கோடும் போய்விட்டது.
அந்தக்கால சிற் இதழ் முன்னோடி அஃக் பரந்த்தாமன் தன் கைப்பட உருவாக்கிய ஒரே தமிழ்ச் சிற்றிதழ் அஃக். அதன் பின் இதழ்களில் இதை பார்க்கலாம்
ப.கங்கைகொண்டான்,
#அஃக்பரந்த்தாமன் ஆகிய இருவரும் இலக்கியம் என்ற தவத்தில் தங்களை தானே அழித்துக் கொண்டு ரணப்பட்டனர் .
‘கூட் புழுக்கள்’-#கங்கைகொண்டான்,
பிடித்த கவிதை........
பழைய சுசீலாக்கள்
பத்தாவது பாரம் படித்தோம்
பாவை சுசீலாவும் நானும்
ஆசிரியர் வெளியே போனால்
மானிட்டர் என்னை நோக்கி
ஒன்றுக்குப் போக வேண்டி
ஒரு விரல் காட்டி நிற்பாள்
ஆள் பார்க்க இல்லாவிட்டால்
அக்கம் பக்கம் நோக்கி விட்டு
ஒண்ணரைக் கண்ணில் சிரிப்பாள்
அரைக்கால் டிராயர் துறந்து
முழுக்கால் மாட்ட வைத் தாள்
ஒரு நாள் ஒரே மாதிரி
சொல்லி வைத்தாற் போலச்
சாக்கு நிறக் காக்கிப் பையில்
புத்தகங்கள் தூக்கி வந்தோம்
பையன் கள் மாற்றி வைத்தார்
பைமாற்றிப் போனாள் அந்நாள்
கைமாறிப் போனாள் மறு நாள் ........
#கூட்டுப்புழுக்கள் - கவிதைகள் - ப கங்கைகொண்டான் - வெளியீடு : கங்கை நூலகம், 100 மலரகம் - பொத்தனூர் அஞ்சல் - சேலம் 638 181 - ஆண்டு : 1974 - விலை : ரூ.10
#ksrpost
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-09-2018
No comments:
Post a Comment