Tuesday, September 4, 2018

#வாழ்வியல் #உணர்வுகள்

நம் வாழ்விலும் கஷ்டமான சந்தர்ப்பங்கள் வரும். நாற்புறமும் எதிர்மறை எண்ணங்கள், எதிரான வினை போக்குக் கொண்ட மனிதர்கள். சில சமயம் அவற்றின் வேகம், நாம் நினைப்பதை விடவும் கூடுதலாகவும் வீரியமாகவும் இருக்கலாம்.சூழ்ந்து நிற்கும் இந்த வேளைகளில்  நாம் என்ன செய்வது என்று திகைக்கின்ற வேளையில் கலங்கி போகாமல் நம்பிக்கையுடன் இயற்க்கையின் மீது நம்பிக்கை வைப்போம் ....

எந்தச் சூழ் நிலையிலும் , நம்மால் இயலாது என்றோ, எல்லாம் முடிந்தது என்றோ எண்ணாது,நம்பிக்கையோடு செயலில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். 

நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருந்தால், நம்மை மீறிய ஒரு சக்தி, இயற்கை, நம் நல்வினை என்று ஏதோ ஒன்று நிச்சயம் நம்மை வழி நடத்தும் என்ற உறுதி  வேண்டும். 

ஓர் முடிவு எடுத்து திட்ட மிட்டு அந்த முடிவின செயல் பாட்டு பயணத்திலிருந்தத விலகுவது ,மாற்றி மாற்றி முடிவுகளை அறிவிப்பது நல்லதல்ல என்ற நம்பிக்கை  முழமையாக மனதில் 
இருத்த வேண்டும்.

நல்ல முடிவுதான் என தீர்மானத்துக்கு பின் அதை மாற்றுவது குழப்பதான் மிஞ்சும் ....
அது குறித்து வேறு யாரின் ஆலோசனையை ஏற்றால் பெரும் துயரத்தில் நம்மை சேர்க்கும் ....

நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலையிலும், நம்பிக்கையுடன் மனம் மட்டும் நம்மிடம் இருந்தால் எல்லாவற்றையும் சரி செய்து சாதனைகளை படைக்கலாம்.

எல்லாவற்றையும் இயற்க்கை கவனிக்கிறது ....

நல்ல உணர்வுகளுடன் இயற்க்கையை கேட்கும்போது எல்லா எதிர்மறையான சூழ்நிலைகளையும் மாறி விடும்.



#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-09-2018
(படம் - எகிப்து நைல் நதி தீரம்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...