சில தகவல்களுக்காக சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
————————————————-
வாஜ்பாயிடம் ஒரு முறை இராஜீவ் படுகொலையின் புலனாய்வும், விசாரணையும் சரியாக அணுகவுமில்லை என்று கூறியபோது, அவர் அதற்கு அப்படியா இந்த விசாரணை சரியாக சென்றிருக்க வேண்டுமே, அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்று தனிப்பட்ட வகையில் பேசும்போது ஆதங்கத்தோடு கூறினார்.
மேலும் அவரிடம் சொன்னது,,
1. இராஜீவ் கொலையில் சர்வதேச சதிகளை குறித்தான புலன் விசாரணை சரியாக மேற்கொள்ளவில்லை.
2. பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் இராஜீவ் காந்தியை எச்சரித்த பன்னாட்டு சதிச் சூழலையும் விசாரிக்கவில்லை.
3. இராஜீவ் காந்தி விசாகப்பட்டினம் முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூர் வரை பிரச்சாரத்திற்காக பயணம் மேற்கொண்டதைப் பற்றி சரியான விசாரணை இல்லை.
4. சிவராசனும், தணுவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் தானா என்று ஆதாரப் பூர்வமாக கண்டுபிடிக்கவும் இயலவில்லை.
5. சிவராசனுக்கும், தணுவுக்கும் இராஜீவ் பிரச்சார மேடைக்கு அருகே செல்லும் வகையில் யார் அனுமதிச் சீட்டை கொடுத்தார்கள் என்று கண்டறியவில்லை.
6. இராஜீவ் படுகொலை சம்பவம் நடைபெறும் முன்னரே எப்படி சுப்பிரமணிய சாமி திருச்சி வேலுச்சாமியை தொலைப்பேசியில் அழைத்து இந்த மாதிரியான கொடுமை யான சம்பவம் நடந்துவிட்டதா என்று கேட்டதைக் குறித்து முறையாக ஏன் விசாரிக்கவில்லை.
7. 1990களில் நடைபெற்ற வளைகுடாப் போரில் இந்தியாவினுடைய அணுகுமுறையைக் குறித்தான கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அது குறித்தான விசாரணையும் இந்த வழக்கில் கண்டறியப்படவில்லை.
இராஜீவ் படுகொலை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு துயரச் சம்பவம் தான். யாரும் இதை மறுக்கமுடியாது. ஆனால், புலனாய்வை சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் சரியாக மேற்கொண்டிருக்க வேண்டாமா என்று அவரிடம் விவரித்து சொன்னபோது, உண்மைதான் இதை சரியாக செய்திருக்க வேண்டும். இராஜீவ் படுகொலை என்ற துயரம் நடந்திருக்கக் கூடாது என்று கேட்டதும், கவலையோடு அவர் சொன்னதும் கண்முன்னும் தெரிகிறது, காதிலும் கேட்கிறது.
உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான். இதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
#இராஜீவ்_படுகொலை
#Rajiv_Assassination
#Release_7_innocent_people
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-09-2018
No comments:
Post a Comment