Sunday, September 16, 2018

இலக்கிய பிதாமகன் கி.ராவுக்கு 96...

இலக்கிய பிதாமகன் கி.ரா. வுக்கு 96...
-----------------------------------------
கி.ரா. 96 வயதிற்குள் நுழைகிறார். பொடிக்கும், தாடிக்கும் இடையில் பிறந்தவர்.

அதாவது, அண்ணாவின் பிறந்த தினம் செப்டம்பர் 15;
பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17.
இதற்கிடையில் செப்டம்பர் 16 இல் பிறந்தவர் தான் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் எனும் கி.ரா.

அவர் நூறாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து தமிழுக்கு பணியாற்ற வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பாடிய,

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு"

என்ற பாசுரத்தின்படி கி.ரா. அவர்களும் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

நன்றி. படம் - விகடன், ரா. கண்ணன்
#கிரா_அகவை_96
#Ki_ra_96
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-09-2018


No comments:

Post a Comment

Be a strong minded, without weakness.

  Be a strong minded, without weakness."People" with a strong mind are mentally tough and can adapt any situations in life.In tod...