பற்று இன்பத்தை அளிக்கிறது, ஆனால், அதில் வேதனை உண்டு என்று அறிந்தகொண்ட நாம் பற்றின்மையை விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை; ஆயினும், நாம் பற்றின்மையின் மூலமாக வேறொரு வகையில் மீண்டும் இன்பத்தையே விழைகிறோம். எதுவரை இன்பம் என்பது குறிக்கோளாக உள்ளதோ அதுவரை பற்றின்மையும், பற்றை போல ஒரே தன்மையை உடையதே. ஆக, நாம், உண்மையில் இன்பத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம். வழி எதுவாக இருப்பினும் நாம் இன்பத்தையே அவாவிக்கொண்டிருக்கிறோம்.
நாம் சார்ந்திருக்கிறோம் அல்லது பற்றுவைத்திருக்கிறோம், ஏனெனில், அது நமக்கு இன்பம், பாதுகாப்பு உணர்வு, அதிகாரம், வசதி என்ற ஆறுதல் முதாலானவற்றை தருகிறது. அதன் மூலம் துன்பமும் பயமும் உடன் தொடரவே செய்கிறது. கூடவே, பற்றின்மையையும் நாம் விழைகிறோம்....
நமது தேடுதலோ இன்பமே; மனதை திருப்திப்படுத்துதலே.....
மனதின் இந்த செயல்முறையை, எதிர்க்காமல், நியாயப்படுத்தாமல் புரிந்துகொள்ள நாம் முயலவேண்டும். ஏனெனில், நமது குழப்பம் மற்றும் முரணிலிருந்து விடுபட இதை புரிந்துகொள்ளுதலை தவிர வேறு வழி இல்லை.
பற்று, பிடிப்பிலிருந்து அமைதியாக விடு படவேண்டும் ஆனால் இயலவில்லை...
#பற்று
#இன்பம்
#வாழ்க்கை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-09-2018
No comments:
Post a Comment