மேற்கு தொடர்ச்சி மலை - இயற்கையின் அருட்கொடைகளை கபளீகரம் செய்வது தான் இவர்களுடைய சுற்றுச்சூழல் சூத்திரங்கள்.
------------------------
ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மாதவன்
காட்கில், கஸ்தூரி ரங்கன் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக மேற்கு
தொடர்ச்சி மலைப் பாதுகாப்பைக் குறித்து இரண்டு குழுக்களின் விரிவான அறிக்கைகள் மத்திய
அரசிடம் வழங்கப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கியமாக
பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள் காட்கில் குழு 1,29,037 சதுர கி.மீ என்றும், கஸ்தூரி
ரங்கன் குழு 1,64,280 சதுர கி.மீ என்றும் வரையறை செய்தது. சுமார்
39 லட்சம் குடும்பங்கள் கேரளப் பகுதியில் மட்டும் மேற்கு
தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழல் பாதிக்கும் பகுதியில் வசிக்கின்றனர் என்று காட்கில்
குழுவும், கஸ்தூரி ரங்கன் குழு 4 லட்சம்
குடும்பங்கள் இருப்பதாகவும் தங்களின் அறிக்கையில் கூறியிருந்தனர். இந்த
நிலையில் மக்கள் நடமாட்டம்,
மக்களுடைய தேவைகளை இந்த பகுதியில்
பூர்த்தி செய்யும்போது,
மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்
சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும் என்று தங்களின் அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மக்களின் மின்சார வசதிக்காக, பெரிய
அணைகள், வேறு சில வசதிகள் செய்யபடும் போது பசுமைக் காடுகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் அளிக்கப்படுகின்றது. அதை
தடுக்க வேண்டுட்ம என்று எச்சரிக்கையை குறிப்பிட்டிருந்தது. புதிய
பெரிய அணைகள், குவாரிகள் போன்ற நடவடிக்கைகளால் மேற்கு தொடர்ச்சி மலைப்
பகுதிகள் மட்டுமல்ல, அங்குள்ள அமைதிப் பள்ளத்தாக்கின் அமைப்பும், பாழ்பட்டு
போகும் என்றும் வேதனையோடு,
தங்களுடைய பரிந்துரைகளை முன்வைத்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை இயற்கையின்
அருட்கொடை. அதனுடைய மரபு ரீதியான தன்மைகளை பாதுகாக்க வேண்டியது
நம் அனைவரின் கடமையாகும்.
நாட்டின் முக்கியமான இயற்கை
வளங்களை கொண்ட கேந்திரப் பகுதியாகும்.
மேற்கு தொடர்ச்சி மலை தமிழகம், கேரளம், கர்நாடகம், கேரளா, கோவா, மகாராஷ்டிரா, இன்னும்
குஜராத் வரை இதனுடைய நீட்சி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை
இந்த இரண்டு குழுக்களின் அறிக்கையின் மேல், குறிப்பிட்ட
மாநிலங்களின் கருத்துகளை 2015
இறுதியில் கேட்டபோது, கருத்து
சொல்லாத ஒரே மாநில அரசு நம்முடைய தமிழக அரசுதான். ஆட்சியில்
உள்ளவர்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையைப் பற்றி தெரியுமா? அதனுடைய
சுற்றுச் சூழல் பிரச்சனை குறித்து தெரியுமா?
இவர்கள் மணல் அள்ளி கொழுக்க
வேண்டும், குவாரிகள் அமைக்க வேண்டும், மரங்களை
வெட்டவேண்டும், மலைக்காட்டுப் பகுதியில் போலிப் பட்டாக்களை பெறவேண்டும்
என்பது தான் இவர்களுடைய சுற்றுச் சூழல் சூத்திரங்கள். இப்படி
தானே இங்குள்ளவர்கள் அக்கறைப்படுகிறார்கள். வேறென்ன
சொல்ல முடியும்.
#மேற்கு_தொடர்ச்சி_மலை
#Western_Ghats
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-09-2018
No comments:
Post a Comment