Wednesday, September 5, 2018

இன்று ஆசிரியர் தினம்.

இன்று ஆசிரியர் தினம்.
------------------------------------
பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி பள்ளிக்கு செல்ல மறுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எனது சொந்த கிராமமான குருஞ்சாகுளத்திலேயே எனக்கு அட்சரம் சொல்லிக் கொடுத்த கலாசாலை இதுவே.
நெடு நாட்களுக்குப் பிறகு இன்று (5-9-2018)இந்த பாடசாலைக்குள் சென்று வர அவகாசம் கிடைத்தது. இந்த பாடசாலையில் படித்த பலர் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சகல துறைகளிலும் ஜொலிக்கின்றனர்.

உண்மையான கிராமத் தின்ணை பள்ளிக் கூடம் எங்களை மனிதர்களாக்கியது. பல ஆசான்களிடம் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களோடு கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், விஞ்ஞானம், MT என்று அந்த காலத்தில் சொல்லப்பட்ட மாரல் டீச்சிங் என அனைத்தையும் தமிழிலே மகிழ்ச்சியாக கற்ற தருணங்கள் இன்றைக்கும் நினைவுகளாக இருக்கின்றது. இந்த ஆரம்ப பள்ளியை ஆலயமாகவும்; எங்களுக்கு கல்வி தந்த ஆசான்களை அருட்கொடைகளாகவும் நினைத்து வணங்குகிறோம்.

#ஆசிரியர்_தினம்
#Teachers_day
#நெல்லை_மாவட்டம்_குருஞ்சாகுளம்_கிராமம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-09-2018

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...