#மொழிப்போர்தியாகியும், #கோவில்பட்டி#திமுகஒன்றியசெயலாளராக 1995 வரை பொறுப்பில் இருந்த பா.முத்து அவர்களுக்கு இன்று 87 வயது. தூத்துக்குடி மாவட்டத்தின் மூத்த கழக முன்னோடியும், பலமுறை போராட்டங்களுக்காக சிறை சென்றவருமான பா.முத்து, தேவிகுளம்- பீர்மேடு கேரளத்தில் இணைத்த பிரச்சினையிலும் சிறை சென்றவர்.
நான் 1989 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டபோது ஒன்றிய செயலாளர் என்ற நிலையில் கோவில்பட்டியில் உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாக சென்று எனக்காக ஓட்டு சேகரித்தார். திமுக துவங்கப்பட்ட காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் 19-09-1949இல் திமுக கொடியை கோவில்பட்டியில் அறிமுகப்படுத்தினார். இன்றைக்கும் தெற்கு பஜார் ஜில் விலாஸ் சோடா பான உற்பத்தி நிலையத்தின் அருகில் தான் அந்த கொடியை தேக்கு மரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்று ஏற்றி வைத்தார்.
அதேபோல திருநெல்வேலி மாவட்ட முதல் மாநாட்டையும் தலைவர் கலைஞர் தனது தலைமையில் கோவில்பட்டியில் நடத்தினார். இன்றைக்கு நாராயணசாமி திரையரங்கம் இருக்கும் இடத்தில் முதல் மாநாடு அன்றைக்கு அண்ணா, கலைஞர், ஈ.வி.கே. சம்பத், நாவலர் போன்ற முக்கியத் தலைவர்களெல்லாம் அங்கே பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தொண்டர் படையில் இருந்தார் . அன்றைக்கு கே.வி.கே.சாமி, ஈ.வெ.வள்ளிமுத்து, அ.சு.சி.பொன்னுசாமி, கலைமணி காசியோடு 1940, 50களில் தன்னுடைய இளமை காலத்தில் பணியாற்றினார்.
இன்றைய மாதிரி வசதிகள் இல்லா நேரத்தை கழகத் தலைவர்கள் கோவில்பட்டி நகருக்கு வந்தால் குளிப்பதற்கு மோட்டார் பம்புகள் இவர் அழைத்து செல்வது வடிக்கை.
அன்றைக்கு வ.உ.சி மேல்நிலைப் பள்ளி அருகில் குருஞ்சாக்குளம் கண்மாயில் தங்கப்பநாடார் கிணற்றில் குளிப்பது உண்டு .
ரயில் நிலையத்தில் வரவேற்று எதிரே உள்ள சந்திர விழாவில் தங்க வைத்து அவர்களை உபசரிப்பது இவருடைய பணியாக இருந்தது. அண்ணா, நாவலர், நாஞ்சிலார், மதியழகன் போன்றவர்கள் வந்தால் அவரோடு இருந்து கவனித்துக் கொள்வது இவருடைய பொறுப்புகளில் முக்கியமானதாக இருந்தது.
மொழிப்போர் தியாகிகள் ஐந்து பேர் இந்த வட்டாரத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் பா முத்து, விளாத்திகுளம், பிள்ளையார்நத்தம மல்லையா தான் நம்மிடைய இன்றைக்கு வாழ்ந்து வருகின்றனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-05-2019
No comments:
Post a Comment