Wednesday, May 8, 2019

இன்றைய (7-5-2019) தினமலரில் ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து வெங்கடசலபரம் கிராமத்தில் பேசியது......

இன்றைய (7-5-2019) தினமலரில் ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து வெங்கடசலபரம் கிராமத்தில் பேசியது...... 
கடந்த இரண்டு வாரங்களாக கிராமங்களுக்கு சென்றபோது, ஒவ்வொருவரும் இந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிட்டுள்ளனர்.அதை நிறைவேற்ற
பாடு படுவோம் என குறிப்பிட்டேன்.

1. ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் உள்ள 650 ஏக்கரிலுள்ள பெரிய குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, குடிமராமத்து பணிகளை செய்யவேண்டுமென்று விரும்பினர். இந்த குளத்தின் மூலம் 1500 நிலங்கள் பாசன வசதி பெறும்,
2.புதியம்புத்தூரில் 50 ஏக்கரில் மலர்குளம்உள்ளது.சில்லாங்குளம்,மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் தேங்கிறது.அந்த குளம் சீர் செய்ய வேண்டும்.
3.தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் கடைசி குளம் மற்றும் கோராம்பள்ளம் குளத்திற்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் பெறும் வகையில் சீர்படுத்த வேண்டும். இந்த குளத்திற்கு கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் பெய்யும் மழைநீர் கொம்பாடி ஓடையில் கலந்து புதுக்கோட்டை - தூத்துக்குடி கோராம்பள்ளம் வழியாக வெள்ள காலங்களில் கடலில் செல்கிறது. இதையம் சீர்படுத்தி பாசனத்திற்கு சரிபடுத்த வேண்டும்.

4.ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லை. அதை சரிபடுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை புதிதாக பேருந்து வழித்தடங்களை உருவாக்கவேண்டும்.
5. சுற்றுச் சூழலை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்.
6. புதியம்புத்தூர் பகுதியில் ரெடிமேட் ஆலைத் தொழில் நீண்டகாலமாக நடந்து வருகிறது. இப்போது இந்த ஆடைத்தொழில் நலிந்து வருகிறது. இந்த ஆடை உற்பத்தி தொழிலுக்கு உகந்த வகையில் ஆயத்த ஆடை தொழில் பூங்காவை நிறுவ வேண்டும். இந்த ஆடைகளை சந்தைப்படுத்த போக்குவரத்து வசதிகளையும் விரிவாக்கப்பட வேண்டும்.
7. வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரத்தில் நீதிமன்றக் கட்டிடம் இல்லாமல் விளாத்திகுளம் செல்லவேண்டி உள்ளது. எனவே இங்கு முறையாக நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
8. இந்த பகுதியில் கோஸ்டல் எனர்ஜென், டைட்டானியம், சீ புட்ஸ் போன்ற தொழிற்சாலைகள் மட்டுமல்லால் அனல் மின் நிலையங்கள், காற்றாலைகள் இயங்குகின்றன. இருப்பினும் இங்குள்ள இளைஞர்களுக்கு இங்கே வேலை கிடைப்பதில்லை. இவர்கள் வேலைக்காக திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு தான் செல்கிறார்கள். இந்த வட்டாரத்திலேயே இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.
9. மாப்பிள்ளையூரணி, தளமுத்துநகர், மற்றும் தூத்துக்குடி வட்டார பல கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனை பெரிதாக உள்ளது. இங்கு முறையான குடிநீர் வசதியையும் செய்துதர வேண்டும்.
10. பேய்குளம், அத்திமரப்பட்டி, குலையன்கரிசல், கூட்டாம்புளி, கோராம்பள்ளம் பகுதிகளில் தாமிரபரணி கால்வாய்களை தூர்வார வேண்டும். முறப்பநாட்டில் ஒரு தடுப்பணையும் தாமிரபரணியின் குறுக்கே கட்டப்பட வேண்டும்.
11. தாமிரபரணியில் கடனா – கல்லாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தும் போது அந்த தண்ணீரை கிழக்குப் பகுதியில் கங்கைகொண்டான், ஒட்டப்பிடாரம், குறுக்குசாலை வரை வந்து விளாத்திகுளம் – வைப்பாறில் இணைக்கலாம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களும் இதனால் பயன்படும்.
12. தூத்துக்குடி, புதுக்கோட்டை உப்பாற்று ஓடையில் கொட்டப்படும் கழிவுகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றப்பட வேண்டும். இதில் தடுப்பணைகளும் கட்டலாம்.
13. ஒட்டப்பிடாரம், கவர்னகிரி, புதியம்புத்தூர், வல்லநாடு, புதுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு நிலத்தடி நீரை ஆழமான கிணறுகளை வெட்டி தொழில்சாலைகள் எடுப்பதை தடுக்க வேண்டும்.
14. ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர், வல்லநாடு இவையெல்லாம் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
15. ஒட்டப்பிடாரத்தில் ஒரு அரசு கலைக் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும்.
16. கோவில்பட்டி, காமநாயக்கன்பட்டி, பசுவந்தனை சாலையை இருவழிச்சாலையாக அமைக்கப்பட வேண்டும்.
17. தருவைக்குளம், வெள்ளப்பட்டி பகுதிகளில் மீன்வளங்கள் குறைந்துகொண்டு வருகிறது. அதற்காக மீனவர்களுக்கு சிறப்பு திட்டங்களை வகுக்கப்பட வேண்டும்.
18. தட்டப்பாறையில் இருந்த சிறுவர் சீர்திருத்தப்பள்ளியை மாற்றப்பட்ட கட்டிடத்தில் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிறுவனத்தை அமைக்க வேண்டும்.
19. தூத்துக்குடி, மதுரை இன்டஸ்ட்ரியல் காரிடார் சாலை சுற்றுச் சூழல் பாதிப்பில்லாமல் அமைய வேண்டும்.
20. மானாவாரி வானம் பார்த்த பூமியில் விவசாயிகளுக்கான தேவைகளை அறிந்து திட்டங்கள் வகுக்க வேண்டும்
21. மாப்பிள்ளையூரணி பகுதியில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்.
22. விவசாய உற்பத்தி பொருட்களை
பாதுகாக்க குளிர் சாதன கிடங்கு அமைக்க வேண்டும்.

23. மணியாச்சி ரயில் சந்திப்பில் சரக்கு
கையாளும் மையம் அமைய வேண்டும்.

24.தமிழ் அறிஞர் பண்டிதமணி ஜெகவீரபாண்டியானருக்கும் தனது இளமை காலத்தில் கவிஞர் கண்ணதாசனுக்கும் ஒட்டநத்ததில்
ஏதாவது வகையில் அடையாளங்கள்
அமைக்க வேண்டும்.

இப்படியான முக்கிய பிரச்சனைகளை இந்த வட்டார மக்கள் எடுத்துச் சொன்னார்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-05-2019

Image may contain: one or more people

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...