--------------------------------------------
தமிழகத்தின் மூத்த இலக்கிய படைப்பாளி தோப்பில் முகமது மீரான் (வயது 75) காலமானார். எனக்கும் அவருக்கும் நீண்டகால நட்பு. இவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் . திருநெல்வேலி பேட்டை வீரபாகு நகரில் வாழ்ந்தார்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு போன்ற புதினங்களும் பல சிறுகதைத் தொகுப்புகளும் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் மீரானின் ஆகியவை முக்கியமாக கவனிக்க பட்டவை.
திருவனந்தபுரம் சாலைத் தெருவில் தமிழகத்திலிருந்து மிளகாய் வாங்கிக் கொண்டு அங்கு சென்று வியாபாரம் நடத்தினார். எனக்கும் அவருக்கும் 1982லிருந்து அறிமுகம். சென்னை ஏ.வி.எம். ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் தான் முதன்முறையாக சந்தித்தோம். இவருடைய சாய்வு நாற்கலி படைப்பு சாகித்ய அகாடமி விருது பெற்றது.
கோவில்பட்டியில் நான் தேர்தலிகளில் போட்டியிட்ட காலத்தில் எனக்காக தேர்தல் களத்தில் ஒரு நாளாவது இருந்துவிட்டு செல்வது வாடிக்கை. கி.ராவும் நானும் இணைந்து நடத்துகின்ற கதைசொல்லியின் ஆலோசனை குழுவிலும் இருக்கின்றார். தொடர்ந்து கதைசொல்லியில் தென் பத்தன் என்ற தொடரை எழுதி வந்தார்.
அவருடைய உடல்நிலையை அறிய அவர் இல்லத்திற்கு பலமுறை வந்துள்ளேன். இந்த வீட்டு தின்னையில் தான் அடிக்கடி பேசுவோம். நாறம்பூநாதன், சௌந்தரமகாதேவன் ஆகியோருடன் இன்று அதே திண்ணையில் சந்தித்தேன்.
திருநெல்வேலி லாலா சத்திரம் அருகிலுள்ள அவரின் வத்தல் மண்டியில் தான் சந்திப்பேன். அந்த கமிஷன்
மண்டி மிளகாய் நெடியில்தான் அதிகமாக தன் படைப்புகளை தும்மலோடு எழதுவார். பேட்டை ரொட்டி கடை அருகே வாழ்ந்தார்.பின்னர் வீரபாகு நகரில் 1990 இறுதியில் குடிபெயர்ந்தார். என்னுடைய 14 நூல்கள் வெளியீட்டு விழாவில் 7 நூல் வெளியீட்டு விழாக்களில் பங்கேற்றுள்ளார்.உரிமைக்கு குரல் கொடுப்போம், நிமிர வைக்கும் நெல்லை என்ற நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்.
#தோப்பில்முகமதுமீரான்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
10-05-2019
No comments:
Post a Comment