Saturday, July 6, 2019

இது தான் தபால் துறையா? வெட்கமாக இருக்கிறது.......

இது தான் தபால் துறையா? வெட்கமாக இருக்கிறது.......
கதைசொல்லி இதழ் கூரியர் மற்றும் அஞ்சல் மூலமாக அனுப்பப்படுகிறது. அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட அனைத்து இதழும் 20 நாட்களுக்கு முன்பு அனுப்பியது யாருக்கும் கிடைக்கவில்லை. வழக்கமாக எனது உதவியாளர் மூலமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால்அலுவலகத்தில்தான்
அனுப்புவோம்.

நான் என்ன ஆயிற்று ஏன் தபாலில் இதழ்கள செல்லவில்லை என்று என்
உதவியாளரிடம் கேட்டேன். அவரும் அன்றைக்கு அனுப்பி விட்டேன் என்று சொன்னார். நான் மீண்டும் சென்று அதன் நிலையை அறிந்து வர அனுப்பியபோது ,அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அண்ணா சாலை தபால் நிலையத்தில் 20 நாட்களுக்கு முன் எப்படி கொடுத்தோமோ அதே இடத்தில் அங்கேயே கதைசொல்லி கட்டுகளை அப்படியே வைத்துள்ளார்கள். அங்கு சென்று கடுமையாக கண்டித்து சத்தம் போட்ட பின் அனுப்பப்பட்டு இன்றைக்குதான் சிலருக்கு சென்று சேர்ந்துள்ளது.

நான் கேட்கிறேன் தபால் அனுப்புவது உங்களின் கடமை அல்லவா? உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் போராட தொழிற்சங்கங்கள் உள்ளது. அதன் சார்பில் உங்களுக்கு வேண்டியவற்றைக்கு போராடும் போது மக்கள் அதை ஆதரிக்கிறார்கள். ஆனால் உங்களது தார்மீக கடமையை செய்வது உங்களுடைய பொறுப்பு அல்லவா? உரிமை மீதுயுள்ள போர் குணம் கடமை மீதும் அக்கறை வேண்டும்.இப்படி பொறுப்பற்று போய் இருப்பது அரசு நிறுவனத்திற்கு அழகல்ல. கண்ணியம்மல்ல. தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள முயல வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-07-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...