முந்த வந்த மன்னனும் முரண்கொள் வாகை அரசரும்
வந்த வந்த சேனையும் வகுத்தணிந்து முனையவே
அந்த அந்த முனைகள் தோறும் அந்த அந்த வீரர் மெய்
சிந்த வந்து உடற்றி நன்சிலைத் தடக்கை அபிமனே.
-வில்லிபுத்தூரார்
தம்மைத் தோற்கடித்து முந்த நினைக்கின்ற மன்னர்கள், படைத் தலைவர்கள், அவர்களின் படைகள், பரிவாரங்கள், என பல முனைகளில் தனியாக எதிர்கொண்டு தனது வில் மூலம் அபிமன்யு சொல்லும் காட்சி. பாடலை இசைக்கையில் போரின் ஓசையும் வீரர்கள் அணிவகுப்பு காட்சிகளை பகர்வது இந்தபாடல்
No comments:
Post a Comment