Friday, January 3, 2020

உத்திரமேரூர் வட்டாரத்தில் தொல்லியல் ஆய்வு.

உத்திரமேரூர் வட்டாரத்தில் தொல்லியல் ஆய்வு.
----------------------------------

உத்திரமேரூர் அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சப்த மாதர் சிற்பத் தொகுப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்திரமேரூர் அருகேயுள்ள வேடப்பாளையம் கிராமம் சித்தேரிக்கு அருகிலுள்ள வயல்வெளிக்கு மத்தியில் மண்மேடான பகுதியில் செய்யப்பட்ட கள ஆய்வின்போது பல்லவர் காலத்தின் 8வது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 6அடி நீளமும், ஒன்றே முக்கால் அடி உயரத்திலான சப்த மாதர்களின் அரிய சிற்பத் தொகுப்பு சற்று சிதைந்த நிலையில் கிடைத்தது. எழுவர் அன்னையரை வழிபடுவது பெண் தெய்வ வழிபாட்டில் முதல் வழிபாடாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த சிலையில் பிராமி, மகேஸ்வரி, நாராயணி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கிறார்கள். இதற்கு அருகிலேயே விஷ்ணு துர்கை சிலையொன்றும் உள்ளது. இங்கு கோயில் இருந்ததற்கான அடையாளமாக பெரிய கற்தூண்களும், சிலைகளும் காணப்படுகின்றன.
பெண் தெய்வ வழிபாடு என்பது வளமையின் அடையாளமாக, வேளாண்மை செழிக்க, செல்வ வளம் பெருக, குழந்தைகள் நோயின்றி வாழ, அரசர்கள் பிறநாட்டை வெற்றி பெற வழிபடுவதாகும்.
இதே போல, உத்திரமேரூர் கல்வெட்டுகள் தான் உலகிலேயே குடவோலை மூலமாக தேர்தலை நடத்தி குடியாட்சியை தமிழகம் அறிந்தது என்று வெளிப்படுத்தியது. இதன் அருகேயுள்ள பாலாறு கல்வெட்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், நேர்மையாக இருக்க வேண்டும். தங்களின் சொத்துகள் என்ன, தங்களின் தகுதி என்னவென்று தெரிவிக்க வேண்டுமென்று பண்டைய தமிழகத்தின் நிலவிய நடைமுறைகளை எடுத்துக் காட்டுகின்றது என்றால் நமக்கே பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-01-2020.

#KSRPostings #KSRadhakrishnanPostings #uthiramerur #தொல்லியல் #உத்திரமேரூர்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...