Friday, January 3, 2020

இசைக் கலைஞர் பந்துல ரமா.

இசைக் குடும்பத்தில் பிறந்த பந்துல ரமா கர்நாடக இசையில் ஆளுமையாக திகழ்கிறார். எதையும் எளிமையாக மக்களுக்கு செல்லவேண்டுமென்று தனது இசைத் துறையில் பயணிக்கிறார். அவரே குறிப்பிடுவது, 
"ஒரு பெரிய கவிதை எழுதி, அதன் வடிவம், பொருள் மாறாமல், அதைப் போன்றே அதைவிட சிறியதாக, அடுத்து, அதைக் காட்டிலும் சிறியதாக என, எவ்வளவு சுருக்க முடியுமோ, அவ்வளவு சிறிய கவிதை வரை எழுதி, பாடினேன். கர்நாடக இசை உலகில், இதுவரை யாரும் இதை செய்ததில்லை."
பல்லவியை பாடுவதில் மட்டுமே முக்கியமல்ல. அதே பல்லவியை அவரே உருவாக்கி அதை பாடுகின்ற முறையில் தான் தனித்தன்மை இருக்கின்றது என்று குறிப்பிடுகிறார். இவர் உருவாக்கும் பல்லவியில் எளிமையான வார்த்தைகளும், லயமும், ரசிகர்களிடம் கொண்டு செல்கிறது. 
தன்னுடைய கச்சேரி இந்திய நாட்டின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டுமென்று நாட்டம் கொண்டவர். இசையில் முனைவர் பட்டம் பெற்று இவருடைய ஆராய்ச்சி நூலாக வந்து பல இசைக் கல்லூரிகளில் பாடப் புத்தகமாகவும் உள்ளது. 
கச்சேரிக்கு வரும்போது எளிமையான தோற்றம், பட்டுப் புடவைகள், நகைகள் இல்லாமல் தான் மேடையேறி தனது இசை நிகழ்ச்சியை நடத்துகின்றார். தனது ஆற்றலும், தன்னம்பிக்கை தான் மக்களிடம், ரசிகர்களிடம் தன்னை அடையாளப்படுத்தும் என்று நம்புகிறார். தற்கொலை தடுப்பு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதை பலரும் பாராட்டினர். இவருடைய கணவர் எம்.எஸ்.என். மூர்த்தி நல்ல வயலின் கலைஞர். 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

02-01-2020.


#KSRPostings #KSRadhakrishnanPostings #pantula_rama
#கர்நாடகஇசை #பந்துலரமா

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...