Tuesday, March 24, 2020

கொரோன #ஊரடங்கு-#போராட்டங்கள்

#கொரோன
#ஊரடங்கு-#போராட்டங்கள்
————————————————
கொரோனாவை   தடுக்க,   இன்று (24-3-2020)இரவு 12 மணி முதல்  நாடு  முழுவதும்  21 நாட்களுக்கு ஊரடங்கு....
- பிரதமர் மோடி.

பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு, மிக அழுத்தமான  கட்டாயமாகும்.  வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம். மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பெற அரசுகள் வழி செய்ய வேண்டும்.



இப்படியான சூழல் இந்தியாவில் முதன் முறை. இந்திரா காந்தி  காலத்தில் நள்ளிரவு அவசர நிலை அறிவிப்பு, கைதிகள் என நடந்தன.










இந்தியாவில் மக்களே நடத்திய சுய ஊரடங்கு போராட்டங்கள் என்பது வரலாற்று ரீதியாக 1942ல் உத்தமர் காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு என்பது தான். 

அதன்பின் ஒவ்வொரு மாநிலத்திலும் இம்மாதிரியான ஊரடங்கு மக்கள் கலந்த போராட்டங்கள் நடந்தன. ஒன்றுபட்ட ஆந்திரத்தில் தெலுங்கானா கோரி சென்னா ரெட்டி, கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரய்யா போன்ற பலர் முன்னெடுத்த இந்த ஊரடங்கு போராட்டத்திற்கு ஆந்திர மக்களே ஒன்றுத் திரண்டனர்.  திரும்பவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கானா மாநிலத்திற்காக ஆந்திரம் ஊரடங்கு போராட்டம் எல்லாம் நடத்தியதுண்டு. கோவா இந்தியாவில் இணைந்த போது நடந்த  நிகழ்வுகள்.

மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட போது மகாராஷ்டிரத்திலிருந்து குஜராத் தனி மாநிலம் கேட்டு 1956 ‘மகா குஜராத்’போராட்டம் நடந்தது. இதே குஜராத்தில் 1973ல் சிமன் பாய் படேல் ஆட்சிக்கு எதிராக ஊரடங்கு ‘நவநிர்மான்’என்ற பெயரில் அமைதிப் போராட்டங்கள் நடந்தன. 

அதே போல பஞ்சாபில் காலிஸ்தானம் பிரச்சினை நடந்த போது பஞ்சாபில் ஊரடங்கு போராட்டத்தை மக்களே முன்னெடுத்ததுண்டு.

கடந்த 1967ல் மேற்கு வங்கத்தில் அஜாய் முகர்ஜி ஆட்சியை எதிர்த்து இம்மாதிரியான போராட்டங்கள் நடந்தன. மேற்கு வங்கத்தில் தனி கூர்கா லேண்ட் கேட்டும் கூர்கா முக்தி மோர்சா இம்மாதிரி ஊர்டங்கு போராட்டங்களை அந்த வட்டாரத்தில் கையிலெடுத்தது.

ஜார்க்ண்ட் மாநில பிரிவிலும் இம்மாதிரி போராட்டங்கள் நடந்ததுண்டு. 

அசாமில் 1982-83 காலகட்டத்தில் அனைத்து அசாம் மாணவர்கள் அசாமின் உரிமைக்காக தாங்களே அறிவித்த ஊரடங்கு போராட்டங்களை அறிவித்ததுண்டு. 

ஏன், தமிழகம் ஈழத்தமிழர் பிரச்சினையின் போது பொது வேலைநிறுத்தம் என்று அறிவித்தாலும் 1980களில் ஊரடங்கு போராட்டமாகத் தான் அன்றைக்கு நடந்தது. 

இப்படி இந்தியா முழுவதும் இல்லை என்றாலும் மாநில மற்றும் வட்டார அளவில் ஊரடங்கு போராட்டங்கள்-பொது வேலை நிறுத்தங்கள்  நடந்ததுண்டு. கேரளத்திலும், கர்நாடகத்திலும், காஷ்மீரத்திலும் இம்மாதிரியான மக்கள் பங்கேற்ற பல பொதுவான போராட்டங்கள் நிகழ்ந்ததெல்லாம் வரலாறு.

*To lock something to prevent someone or something from getting into it. * 
Lock down for 21 days in India.
Lock down is a lakshman rekha on your door steps..

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2020
#சுய_ஊரடங்கு
#போராட்டங்கள்
#ksrposts
#ksradhakrishnanposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...