————————————————-
இந்தியாவில் சீன, பாகிஸ்தான், கார்கில் போர்களின் போதும், பங்களாதேஷ் உதயத்தின் போதும் இந்தியா ஒன்று திரண்டது. கடந்த 1979இல் ஸ்கைலேப் பிரச்சனை உலகத்தை ஆட்டிப்படைத்தது. வீட்டை விட்டு யாரும் வெளியேகூட வரவில்லை. உலகமே ஆபத்திலிருந்து பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்தது. ஈழத் தமிழர் பிரச்சனையில் 1983இல் தமிழகம் ஒரே முகமாக தனது ஆதரவுக் கரத்தை நீட்டியது. அடுத்து இந்த கொரோனா வைரஸ்தான் உலகத்தையே ஒன்றுதிரள வைத்துள்ளது.
சில நேரங்களில் சில பிரச்சனைகளில் நமது முரண்களை மறந்து நாம் ஒருங்கிணைகிறோம். தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, உலக நாடுகள் தங்களுக்கிடையே நடக்கும் எதிர்வினைகளை மறந்து ஒரே குரலாக ஒலிக்கவும் செய்கின்றன. எல்லாமே ஒரு நம்பிக்கைதான்.
தண்ணீருக்கும் உலகத்தில் பஞ்சம் ஏற்படும் என்கிறார்கள். நீர்வளத்தைப் பாதுகாக்கவும் ஒருமித்த குரலாக இந்த அகிலமே எழ வேண்டியது அடுத்த கட்டம். Hope! Trust!! நம்பிக்கை!!!
#Hope! #Trust!!
#நம்பிக்கை!!!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19-03-2020.
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
No comments:
Post a Comment