Wednesday, March 18, 2020

காட்டுச்_செடிகள்-#கிரா

#காட்டுச்_செடிகள்-#கிரா
———————————-
”காட்டுச் செடிகள் என்பது நாம் விதைக்காமலே, நடாமலே முளைப்பவை. வெண்டைக்காய், கத்தரிக்காய் மட்டுமல்ல. ராகி (கேப்பை), வரகு, இப்படியான தானியங்களும், முளைத்துப் பலன் தருகின்றன காட்டிலும்.எங்களுடைய தோட்ட நிலத்தில் (கிணற்றுப் பாசனத்தில்) விளையும் காய்கறிகள் ருசி இல்லாமல் போனதற்குக் காரணம் கிணற்று நீரே என்று அறிய கொஞ்ச நாட்கள் ஆனது.
ருசியில்லாமல் ‘சப்’பென்று இருக்கும் காய்களை நம்ம வீட்டுப் பெண்கள் உப்பு, உரப்பு, புளிப்பு போன்றவைகளை வைத்து ஒரு ‘ரசவாதம்’ செய்து மணம் ஏற்றி ருசிக்க வைத்துவிடுகிறார்கள்.
காட்டுக் காய்களைக் கொண்டுவந்து சமைத்து உண்டவர்கள் பாசனக்காய் வகைகளை உண்ணும்போது முகம் சுளிப்பார்கள். அப்போது அவர்களின் மூஞ்சியைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.” (கிரா-லீலை, 2016: 152).

#ksrpost
18-3-2020.
(படம்-கொல்லி மலை)


No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".